"மாசி" என்ற பேரை கேட்ட உடனேயே உங்களுக்கு என்ன தோன்றும்? சிலருக்கு " மாசி மாசம் தான் கெட்டி மேளதாளம்தான்" பாடலை வாய் முனுமுனுப்பதை தடுக்க முடியாது, மாசி மாசம் தமிழ வருஷ காலன்டரில் வரும் பதினோறாவது மாதம் என யாவரும் அறிவோம், எனக்கு என்னவோ "மாசி" என்ற சொல்லை கேட்ட மாத்திரத்தில் மதுரை வடக்கு மற்றும் மேல மாசி வீதிகளின் முனைகளும், கடைகளும் காட்சியில் பரந்து விரிந்து மறையும், நெரிசலான அந்த வீதிகளில்,பிராயத்தில் அலைந்து திரிந்த வசந்த நாட்கள் அவை, மற்றும் சிலருக்கு சமீபத்தில் வெள்ளித்திரையில் வலம் வரும் " ஆக்ஷன் கிங்" அர்ஜூன் நடித்த " மாசி" திரைப்படம் நினவுக்கு வரலாம்ஆனாலும் கீழக்கரையில் ஒரு மாசி உண்டு அதன் மகிமையே தனி,கீழக்கரைக்கும் மாசிக்கும் உள்ள இனிமையான உறவு என்று தோன்றியதோ தெரியவில்லை, இந்த நாகரீக காலத்திலும் மாசி தன் இடத்தை இழக்காமல் தக்க வைத்து கொண்டிருப்பது ஆச்சரியம்தான், காலை பசியாற மாசி சம்பலுடன் , நீர் மோர் இருந்தால் எத்தனை இடியப்பம் வயிற்றுக்குள் செல்லும் எனபதை ஒரு கால்க்குலேட்டர் வைத்துதான் கணக்கு பார்க்க வேண்டும்.
மாசி சம்பலும், முட்டை மாசியும், மாசி துவையலும் கீழக்கரை மக்களால் பண்னெடுங்காலமாக பாவிக்கப்பட்டு வரும் உணவு வகை, தமிழ் முஸ்லீம்களின் குறிப்பாக கடலோர பகுதிகளில் வாழபவர்களின் உணவியல் கலாச்சாரத்தில் இந்த மாசிக் கருவாடு பிரதான நிலையில் இருந்து வருகிறது, இலங்கை காத்தான் குடியில் மாசியினால் செய்யப்படும் சீனிசம்பலின் சுவைக்கு எதுவும் ஈடில்லை என கொழ்ம்பில் இருக்கும் நணபர்கள் சொல்லிக் கேள்விப்பட்டது உண்டு,
மாசியை இடித்து, துருவளக்குத்தியில் (தேங்கா துறுவி) வைத்து துறுவப்படும், தேங்காத்துறுவலுடன்,சுட்ட , காய்ந்த மிளகாயுடன், உப்பு சேர்த்து, பொடியாக சீவிய சின்ன வெங்காயத்துடன் அம்மியில் வைத்து அரைத்து, சூடான அப்பத்துடனோ அல்லது புளுங்கல் அரிசி இடியப்பத்துடனோ ரசித்து, ருசித்த நாவிற்கு இனி ஒரு முறை அது போல் கிடைப்பது கஷ்டம். அடைக்கும், ரொட்டிக்கும் மான மாசியின் பொறுத்தம் வெகு ஜோரானது என்பதை கீழக்கரை மக்கள் அறிவார்கள், இதனை உனவு பிரியர்கள் சிலாகிப்புடன் சொலவதை கேட்டால் எவரும் மாசியை ருசி பார்க்க விரும்புவர், அப்படி ஒரு மௌத் வாட்டரிங்க் டிஸ் இது.
அரிது அரிது மானிடராய் பிறப்பது அதலினும் அறிது அந்த நாளில் கிடைத்த மாசி சம்பல், என திரித்து பாட வைக்கும் அளவுக்கு தற்பொழுது கிடைக்கும் மாசியில் அத்துனை சுவை இல்லமல் இருப்பது வருந்தக்க விஷயம், கீழக்கரை செக்கடியிலும் சரி, மீன்கடையின் முகப்பில் இருக்கும் காய்கறி கருவாடு மார்க்கட்டில் இருக்கும் மாசிக்கடைகளில் " இங்கு நயம் மாசி கிடைக்கும்" என்ற போர்டு எப்பொழுது அங்கு சென்றாலும் பார்க்க முடியும், அது என்ன நயம் மாசி? சங்கு தொழிலில் அனுபவம் பெற்ற நன்பன் கருனையிடம் கேட்டால், இங்க கிடைக்கிறதெல்லாம் ஒரிஜினல் இல்லப்பா, மாலதீவு மாசிதான் நயம் என்றான்,
சரி எப்படித்தான் மாசி செய்ராங்க? சூறை எனற பெயர் கொன்ட மீனை பிடித்து , முழுதும் உப்புத்தடவி, கடலோரத்தில் வெயிலில் சில நாட்கள் காய வைத்து, பின் அதனை கரையிலேயே குழி தோன்டி புதைத்து பதனப்படுத்தி சில வாராங்கள் கழித்து வெளியில் எடுக்கிறார்களாம். சரியான பக்குவத்தில் மீனை கருவாடாக்கி, வெளியில் எடுப்பதில் மாலதீவினரும், இலங்கையினரும் தேர்ந்தவர்கள், ஆணால் நம்மவர்கள் சூறை மீனுக்கு பதிலாக விலை குறைந்த அது போனற வேறு ஒரு மீனை உபயோகப்படுத்தி நம் காசை சூறையாடுவதில் கில்லாடிகளாம்.
நயம் மாசி உருவாகும் இதறகு மாலதீவு கருவாடு எனற பெயரும் இருப்பதாக வெகு லேட்டாகதான் புரிந்து கொன்டேன், பார்ப்பதற்கு சிறு மரக் கட்டை போல் தோன்றும், இதனை ஊறுகாயாகவும், மாசி மிக்ஸ் பொடியாகவும் மாற்றி காலத்துக்கேற்ப தற்பொழுது கீழக்கரையில் விற்பனை செய்து வருகிறார்கள். வளை குடா நாடுகள் சிங்கப்பூர் மலேசியா, போன்ற நாடுக்ளுக்கும் மாசி தற்பொழுது வேகமாக ஏற்றுமதி ஆகி வருவதாக செய்தி, கூடிய சீக்கிரத்தில் ம்லையாளா சூப்பர் ஸ்டார் மோகன்லால் மாசிப் பொடி விளம்பரத்துக்கு சன் டி.வியில் தலைக்காட்ட வரலாம்...



10 மறு மொழி கள்:
// "மாசி" என்ற சொல்லை கேட்ட மாத்திரத்தில் மதுரை வடக்கு மற்றும் மேல மாசி வீதிகளின் முனைகளும், கடைகளும் காட்சியில் பரந்து விரிந்து மறையும், நெரிசலான அந்த வீதிகளில்,பிராயத்தில் அலைந்து திரிந்த வசந்த நாட்கள் அவை, மற்றும் சிலருக்கு சமீபத்தில் வெள்ளித்திரையில் வலம் வரும் "//
i think so but after reading. i know its kind of fish food. thanks for sharing.
Thanks for your comments..
கீழக்கரை நண்பர்களுடன் சென்னையில் படித்த போது மாசி கொண்டு வருவார்கள்.. செய்யத் தெரியாமல் சொதப்பி விடுவார்கள்.. ஏனோ எனக்கு பிடித்ததில்லை. சமீபத்தில் மனைவி செய்த போது ரொம்ப டேஸ்டாக இருந்தது.
கீழை மக்கள் சில வகை காய் சமைக்கும் பொழுது கூடவே மாசிப்பொடியும் சேர்த்து சமைத்து நாவில் எச்சில் ஊற வைப்பார்களே.அது தவிர மாசி வடையும் ரொம்ப பேமஸ் ஆச்சே.மாசியைப்பற்றிய அலசல் சுவாரஸ்யமாக இருந்தது.
இங்குமாசிக்கறியையும் மாசிக்கொழுக்கட்டையும்இங்கு இங்கே போய் பாருங்கள்.
ஆம், நீங்கள் சொன்ன ஐட்டங்கள் பதிவு செய்யும் பொழுது விடுபட்டு போய் விட்டது, நினைவு படுத்தியமைக்கு மிக்க நன்றி.
மாசி எங்க ஊர்லயும் ரொம்பப் பிரசித்தம்!! அவசரத்துக்குக் கைகொடுக்கும் ’ஃபாஸ்ட் ஃபுட்’!!
வரவுக்கும், கமென்ட்டுக்கும் நன்றி,
நீண்ட நாள் வலைப்பூ பக்கம் வராத என்னை முகப்புத்தகத்தில் தாங்கள் கொடுத்த லிங்க் இங்கே இழுத்து வந்திருக்கின்றது...நன்றி..கீழக்கரை பற்றி நிறைய எழுதியிருக்கிறீர்கள் போலும் இன்ஷா அல்லாஹ் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்து பின்னூட்டம் தருகிறேன்.
மாசி பற்றிய இந்த படைப்பு அருமை...வீட்டில் லாத்தாவிடம் கேட்டு மாசி செய்யும் முறைகளையும் இணைத்திருந்தால் மக்கள் எழுத்துக்களின் ருசியுடன், மாசியின் ருசியையும் அறிந்திருப்பார்கள்...(அதெல்லாம் பெண்கள் சமாச்சாரம் என்று விட்டு விட்டீர்கள் போலும்) மண்ணின் மணத்துடன் கூடிய இந்த பதிவிற்கு என் வாழ்த்துக்கள் காக்கா...
நீண்ட நாள் வலைப்பூ பக்கம் வராத என்னை முகப்புத்தகத்தில் தாங்கள் கொடுத்த லிங்க் இங்கே இழுத்து வந்திருக்கின்றது...நன்றி..கீழக்கரை பற்றி நிறைய எழுதியிருக்கிறீர்கள் போலும் இன்ஷா அல்லாஹ் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்து பின்னூட்டம் தருகிறேன்.
மாசி பற்றிய இந்த படைப்பு அருமை...வீட்டில் லாத்தாவிடம் கேட்டு மாசி செய்யும் முறைகளையும் இணைத்திருந்தால் மக்கள் எழுத்துக்களின் ருசியுடன், மாசியின் ருசியையும் அறிந்திருப்பார்கள்...(அதெல்லாம் பெண்கள் சமாச்சாரம் என்று விட்டு விட்டீர்கள் போலும்) மண்ணின் மணத்துடன் கூடிய இந்த பதிவிற்கு என் வாழ்த்துக்கள் காக்கா...
Good article. But lot of spelling mistakes. please take care of it. (Can someone assist me how to type in tamil to post comments please)
Post a Comment