கடந்த வாரம், ஒரு காலை பொழுதில், அலுவலக பணியில் மூழ்கி முத்தெடுக்க மூச்சு திணறிய தருணத்தில், அலை பேசியின் அழைப்போசையால் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேசினேன்.
ஹலோ............ எதிர்முனையில் பேசியது என் கண்மணி...
என்ன செய்தி? தொடர்ந்தேன்..............
நாங்க இப்ப தோட்டத்துல இருக்கிறோம்........ பிக்னிக் வந்தோம்....... கண்மணியின் குரலில் உற்சாகம் தெறித்தது
அப்படியா... சரி என்ஜாய் பன்னுங்க, அப்புறம் பேசுறேன்... போனை அனைத்து விட்டு வேலையில் மூழ்க முயற்சி செய்தேன்... மனம் அலை பாய்ந்தது.............
பிக்னிக்......... என்ற வார்த்தையினில் உள் மணதில் உற்சாகம் பீறிடுகிறது, வாலி நோக்கம், மாரியூர் தென்னந்தோப்பும், சீனியப்பா தர்கா சவுக்கு காடுகளும், தட்டந்தோப்பு செவல் தோட்டமும், மாறி மாறி மின்னல் கீற்றுகளாக மனதில் வந்து போனது...................
பிக்னிக் என்பது பொதுவாக உல்லாச பயனம் என அறியப்பட்டது, 19 ஆம் நூற்றான்டில் ஆங்கிலேய அதிகாரிகளின் அலுப்புக்கு நன் மருந்தாக திறந்தவெளி பிரதேசங்களுக்கு தன் குடும்பம் குட்டியுடன் ஜாலியாக சென்று, விரும்பியதை புசித்துவிட்டு வருவதற்கான ஏற்பாடுதான் இது, அனேகமான பிக்னிக் இடங்கள் பூங்காவாகவோ, கடல் கரையோரமாகவோ அல்லது மலையடிவாரமாகவோ இருந்து வருகிறது,
பல இரவுகள், துபாய் ஜுமைராவிலும், அபுதாபி பிரேக் வாட்டரிலும் நன்பர்கள் குழாமாக வந்து பார்பிகூ வயும், கிரில் சிக்க்னையும் துவம்சம் செய்து அதிகாலை வரை கூத்தடிதிருந்தாலும், காஞ்சினக்குடி பக்கீரப்பா தர்காவின் மனற்பரப்பில் நைட் பிக்னிக்காக சென்று வந்த காலங்களை மறக்க முடியுமா?
கீழக்கரை பிக்னிக்கின் பரிணாம வளர்சியில் நைட் பிக்னிக் இன்றியமையாதது, கீழக்கரை கேளிக்கைகளில் நைட் பிக்னிக்கில் ஊத்தா குத்துவது ஒரு சிலிர்க்கும் அணுபவம், இரவு பிக்னிக்கில் கடலோரம் பல கிலோ மீட்டர் கையில் பெட்ரொமக்ஷ் லைட்டுடன் நடந்து செல்வோம், தென்றல் உறங்கிய போதும், திங்கள் உறங்கிய போதும்...கண்கள் உறங்கிடுமா....... என்ற கண்ணதாசனின் (இல்லை, .. இல்லை.. கவிஞர் மருதகாசியின்)கவிதை வரிகளுக்கேற்ப ஒளியை தேடி வரும் மீன் இனத்தை ஊத்தா என்றழக்கப்படும் ஈட்டியினால் குறி பார்த்து ..... சதக்... என குத்தி மீன் கூடையில் அள்ளிப்போட்டுக்கொண்டு அசால்டாக போய்க்கொன்டிருப்போம்....................
கணிசமான மீன் கையில் சேர்ந்ததும், ஏதாவது ஒரு தென்னந்தோப்புக்குள் அடைக்கலமாகி, மீன் ஆனம் காய்ச்சியும், சுட்டும் நைட் ஹோட்டலில் வாங்கிய ப்ராட்டாவுடன் அதிக்காலை வேலையில் சாப்பிட்டுவிட்டு வீடு போய் சேருவோம்.
பார்ட்டிகளுக்கும், ட்ரீட்களுக்கும் பலமுறை சென்று வந்தாலும், ஒவ்வொருமுறை ஊர் செல்லும் பொழுதும், பிக்னிக் போடுவமா என கூட்டாளிகளிடம் கேட்க மறப்பதில்லை, மூர் தோப்புக்கா? எம். எல்.ஏ தோப்புக்கா? என பெரிய டிஸ்க்கசனே நடந்து முடியும்..
நிரந்தர பிக்னிக்கும் கீழக்கரையில் உண்டு, பெரும் தலைகள் சில நித்தம் பிக்னிக் ஸ்பாட்டில் கூடி , பம்பு செட்டிலோ, தொட்டியிலோ குளித்து பின் கிதாபு பிரட்டுவதை ( சீட்டாட்டம்) சூரியன் சாயும் காலம் வரை தொடர்வது உண்டு, இடையில் வென்றவர்களின் ஸ்பான்சரில் பிக்னிக் சாப்பாடாக, சோறு, கறி, தாழிச்சா என ஏற்பாடுகள் தடமுடலாக நடக்கும்.
கீழக்கரயையில் பிக்னிக் என்பது பல விதமான விஸ்யங்களுக்காக முன்னெடுக்கப்பட்டு கொன்டாடி மகிழப்படுகிறது, குடும்ப பிக்னிக், சுன்ன்னத் பிக்னிக், சபர்ல இருந்து வந்த பிக்னிக், பேருட பிக்னிக், கல்யான பிக்னிக், பாஸானா பிக்னிக்,,,,, இப்படி பல விதம். இதில் முதன்மையானது, கல்யான பிக்னிக். கல்யானமான புது மாப்பிள்ளை செட்டுப்பனம் அல்லது பிக்னிக் காசு கொடுப்பது கீழக்கரையில் எழுதப்படாத சட்டம்,
அதுவும் ஒவ்வொரு செட்டுக்களுக்கும் தனி தனியாக செட்டுப்பனம் கொடுப்பது ஒரு பண்பாட்டு மரபாகவே கடை பிடிக்கப்ப்டுகிறது. செட்டுக்காசு வாங்கியவர்கள் பிக்னிக்காக கொடைக்கானல், குற்றாலம் என வெளியூர் உல்லாச பயனம் செய்வதும் உண்டு.
சமீபத்தில் ஊருக்கு பேசியபொழுது
இன்னைக்கு பிக்னிக்ல சாப்பிட்டோம்.......... இது கண்மணி
எங்க பிக்னிக்போனீங்க? இது நான்,
எங்கேயும் போவலை............ வீட்டுலதான் .....
வீட்டுலதான்னா.... என்ன ?
பிக்னிக் காசுல சைனிஷ் ரெச்ட்டரென்ட்ல டிஸ் வாங்கி வீட்ல வைச்சு சாப்பிட்டோம்....
ஆச்சரியத்துடன் கேட்டேன்... இது பேருதான் பிக்னிக்கா?
ஆமா, இன்டோர் பிக்னிக் ---- இது கண்மணி.
தலை சுத்துது …யாராவது கொஞ்சம் லெமனேட் வாங்கி கொடுத்தா நல்லா இருக்கும்......................





2 மறு மொழி கள்:
பிக்னிக் பற்றி பதிவிட்டு பழைய நினைவுகளில் மூழ்கடித்து விட்டீர்கள்,பிக்னிக்குகளில் பனை ஓலையில் தொன்னை செய்து அதில் சோறும்,கறியும்,தாளிச்சவும் போட்ட் பட்டை சோறு என்று சாப்பிட்டதெல்லாம் இப்போது ஞாபகம் வருகின்றது.//குடும்ப பிக்னிக், சுன்ன்னத் பிக்னிக், சபர்ல இருந்து வந்த பிக்னிக், பேருட பிக்னிக், கல்யான பிக்னிக், பாஸானா பிக்னிக்,,,,, இப்படி பல விதம். இதில் முதன்மையானது, கல்யான பிக்னிக். கல்யானமான புது மாப்பிள்ளை செட்டுப்பனம் அல்லது பிக்னிக் காசு கொடுப்பது கீழக்கரையில் எழுதப்படாத சட்டம்,
// நீங்கள் தான கடைசி வரை கல்யாண பிகினி போடாமல் டபாய்த்து விட்டீர்கள்:-(
வரவுக்கும், கமென்ட்டுக்கு மிக்க நன்றி, அந்த சூழலில் நான் கொடுக்க வேன்டிய பிக்னிக் தவறிவிட்டது..... ஆனால் 28 வருடங்களுக்கு முன் உங்க கல்யான பிக்னிக்கில், சேது தோப்பில் பட்டைச் சோறு சாப்பிட்டது பசுமரத்தில் அடித்த ஆனி போல் இன்னும் மனதில் நிலைத்திறுக்கிறது, பிக்னிக்கின் தொடர்சியாக இராமனாதபுரம் ஜெகன் தியேட்டரில் "உயிருள்ள வரை உஷா" திரைப்படமும் பார்த்ததும் நினைவில் மறக்கவில்லை..............
Post a Comment