8 Nov 2010

ஹமீதியா..... ஹை.... ஸ்கூலு....மஞ்சள் மாளிகை..........


பள்ளிக்கூடம் செல்லும் கீழக்கரை மாணவர்களுக்கு மட்டுமின்றி, அணைத்து  தரப்பு மக்களுக்கும் ஹமீதியா ஸ்கூலுன்னா... ஏதாவது ஒரு பழைய அணுபவத்தில் மனம் லயிப்பதை தவிர்க்க முடியாது, உல்லாசத்திலும், ஒய்யாரத்திலும் சிந்தை களித்து கிடந்த... கடந்து வந்த காலங்களின் தடத்தினை ஒடுங்கி கிடக்கும் உள்மனசில் தேடும் பொழுது கிடைக்கும் பேரானந்ததுக்கு எல்லகளை வரையறுக்க முடியாது...
கீழக்கரை மேலத்தெருவின் மத்தியில் மாளிகையாய் ஓங்கி உயர்ந்து வீற்றிருக்கும் ஹமீதியா பாய்ஸ் ஸ்கூலுக்கும், நம் மக்களுக்கும் உள்ள பந்தம் தொப்புள் கொடி உறவு போன்றது. பள்ளி வராந்தாவில் மிடுக்குடன் வலம் வந்த ஹெச்.எம். ஜக்கரியா மாஸ்டரை மறக்க முடியுமா? அவரை பார்த்தாலே பலருக்கு வயிற்றை கலக்கும். நல்லாசிரியர் புலவர் முஸ்தபா அவர்களின் நாவண்மையில் தமிழின் எழிலில் மனதை விட்டுருக்கிறேன்.தற்பொழுது இந்த மாளிகை ஹமீதியா மெட்ரிகுலேசன் பள்ளியாக மாறி இருக்கிறது, பாய்ஸ் ஸ்கூல் முள்ளுவாடிக்கு அருகே இடம் பெயரப்பட்டிருக்கிறது.



ஓவ்வொரு முறை பள்ளி செல்லும் பொழுதும் பாதை மாற்றியே பயனித்திருக்கிறோம். எங்கள் தேடுதல்கள் பள்ளியில் இருந்ததது, அதனை சென்றடைய சில சுருக்கு வழிகளும், குறுக்கு வழிகளும் தேவைப்படும், காரனம் தாமதம் தான், சினிமா தியேட்டரில் "ஹவுஸ்புல்" போர்டை தடாலடியாக போடும் டிக்கட் கவுன்டர் ஆசாமிகள் போல், ஒன்பது மனி பெல் அடித்தவுடன் ஸ்கூல் கதவை முற்றாக சாத்தும் சுல்தான் பாயின் உருவம் இன்னும் மனதிலேயே நிலைத்து இருக்கிறது, கையில் நீன்ட குச்சியுடன் " கப்பர்தார்" சொல்லாத குறையாக நிற்கும் அவரை ஒரு வில்லனாகவேதான் நாங்கள் பார்த்தோம்.


பயனம் செய்த பாதைகளின் ஊடே நிலை கொன்டிருந்த சர்ச் கோபுரம், புது பள்ளி மினாரா, க்ரவுன்டின் நீன்ட காம்பவுன்ட் சுவர், அதன் எதிரே இருந்த போன்டா கடை, முகம்மது சதக் ரோடு போஸ்ட் ஆபீஸ், அஹ்மது தெரு தைக்கா, அதன் முனையில் பட்டொளி வீசி பறந்த கொடி மரம், எதை மறக்க முடியும்.... பிரைமரி ஸ்கூலின் முகப்பில், நன்பகலில் நவ்வாப் பழமும், எலந்தை பழமும்,கொடுக்கா புலியும் வாங்கித்தினறு மகிழ்ந்த நாட்கள் அவை.



மேலத்தெரு க்ரவுன்டு என அழைக்கப்படும் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் மாலை நேர உற்சாகம் ஒரு கண்கொள்ளாக் காட்சியாகவே அமைந்து இருக்கும், கிரிக்கட், வாலி பால், பேஸ்கட் பால், கபடி என விளையாட்டுக்கள் ஆங்காங்கே நடந்து கொன்டு இருக்கும், பாரவையாளர்கள் வேறு ஸ்டேடியம் முழுதும் நிறைந்து இருப்பார்கள், கடலை, முறுக்கு, ஐஸ் வன்டி வியாபாரிகள் வேறு விருவிருப்பாய்  க்ரவுனடை சுற்றி பிசினஸ் பன்னி... க்ரவுன்டுக்கு வெளியே நிரந்தர பெட்டிக்கடை வைத்திருக்கும் குந்துருஸ் மாமாவின் பிஸினசில் மன் அள்ளிப்போட்டுக் கொண்டிருப்பார்கள், குந்துருஸ் மாமா உஸ்வத்துல் ஹசனா முஸ்லீம் சங்கத்தில் புகார் கொடுத்தும் அந்த வியாபாரிகளுக்கு தடை போட முடியவில்லை என ஒரு செய்தியும் உண்டு.

மேலத்தெரு க்ரவுனடை பற்றி பேசும் பொழுது  பி.டி மாஸ்டர்  முகம்மதலியயை நினவு கூறாமல் இருக்க முடியாது, மௌன குருவாக கீழக்கரைக்கு வந்து தன் குடும்பத்துடன் இஸ்லாத்தை தழுவியவர், பள்ளியின் ஒவ்வொரு வருட விளையாட்டு தினமும் இவராலேயே வடிவமைக்கப்பட்டது.


பள்ளியை பற்றி பார்க்கும் தருனம் அதன் பிண்னனியை பற்றி ஆராய வேண்டும் அல்லவா?  உஸ்வத்துல் ஹசனா முஸ்லீம் சங்கத்தின் நிர்வாகத்தில் இருக்கும் மற்ற பள்ளிகளான ஹமீதியா ஆரம்ப ,மெட்ரிகுலேசன் , பென்கள் பள்ளிகளை விட ஆண்கள் பள்ளி ஏற்படுத்துவதற்காக அதன் நிறுவனர்கள் சந்தித்த சோதணைகளும், அதற்கான முயற்சியும், உழைப்பும் கடினமானது, அந்த கால கட்டத்தில் அதற்கான செலவும் அதீதமாகவே இருந்தது.



கீழக்கரை சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்ட ஹமீதியா ஸ்கூலின் தோற்றத்திற்கும் அதன் செம்மைக்கும் பயிரிட்டு, உரமிட்டவர் செல்வப்    பெருந்தகை, கல்விகொடையாளர்  கே.டி.எம். ஹுசைன் ஹாஜியார் அவர்கள்.
இரண்டாம் உலகப் போர் உலகை உலுக்கிக் கொண்டிருந்த ஒரு கஷ்ட காலம், ஆகாயத்தில் அவ்வப்பொழுது பருந்து போல் வட்டமிடும் விமானங்களை கன்டாலே மக்கள் அஞ்சி ஒடுங்கிய நேரங்கள், கீழக்கரை சமூகத்தின் பொருளாதாரம் வெகுவாக வீழ்ச்சியடைந்திருந்த 1943 ஆம் ஆண்டு, சங்க நிர்வாக கூட்டத்தில் பங்கெடுத்த வள்ளல் ஹுசைன் ஹாஜியார், சங்கத்தால் நிர்வாகிக்கப்பட்டு வந்த " மத்ரஸத்துல் ஹமீதியா" என்ற பள்ளியை ஒரு நடு நிலை பள்ளியாக மாற்றிக்காட்ட தன் கண்ட கணவினை விளக்கிக் கொண்டிருந்தார், திட்டங்களுக்கு உயிர் கொடுக்கும் பொருட்டு தனது வணிக தொடர்புகள், அரசியல் செல்வாக்கு, நிதி , நிலத்திற்கான தேடல் என அனைத்தையும் சடுதியில் நிறவேற்றி அடுத்த ஆறு மாதங்களில், ஓங்கி நிற்கும் இந்த மாளிகையய அனைத்து வசதிகளுடன் மக்களுக்கு அர்பனித்தார், வள்ளல் அவர்களின் வேகத்தையும், ஆர்வத்தையும்,கண்டு,வியந்த கல்வித்துறை உயர் அதிகாரியான  நார்மன் என்ற ஆங்கிலேயர் உயர் நிலை பள்ளிக்கான உத்தரவை வழங்கினார். இப்படியாக 1944 ஆம் ஆன்டு  கீழக்கரையின் முதல் உயர் நிலை பள்ளி ஏற்படுத்த பட்டது. வள்ளல் ஹுசைன் ஹாஜியார்தான் கீழ்க்கரையினரின் வணிகத்தில் பங்காளி முறையை முதலில் ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிட தக்கது.

வாழ்க்கையின் சூழலில் அங்கும், இங்கும் அலைந்ததில், பள்ளி வாழ்க்கையினிலிருந்து கடந்து வந்த 25 வருட தூரம் கன நேரம் போல் கடந்து  விட்டது, ஊர் செல்லும் போதெல்லாம் இந்த மஞ்சள் மாளிகை வழியே நடந்து சென்றிருந்தாலும், உள்ளே சென்று பார்ப்பதற்கான வாய்ப்போ, ஒரு ஆர்வமோ வரவில்லை. சமீபத்தில், உலக பொருளாதார வீழ்ச்சியின் பாதிப்பின் தாக்கத்தில், குட்டி மகளை ஊரில் படிக்க வைக்க வேண்டிய சூழ் நிலையில் இரு மாமாஙக்த்திற்கு பின் அந்த மஞ்சள் மாளிகையில் கால் வைத்தேன், உள்ளே நுழைந்து சுற்றி பார்த்தேன், உடல் சில்லிட்டது, அமைப்பில் எதுவுமே மாறவில்லை,வர்ணங்களை தவிர, பார்மாலிட்டீஸ் எல்லாம் முடிந்து மகளை க்ளாசில் விட சென்றேன், உள்ளே சென்று அமர்ந்தாள்....... 25 வருடங்களுக்கு முன நான் அமர்ந்த அதே வகுப்பறையின், அதே இருக்கைகான அதே தளத்தில்.............

4 மறு மொழி கள்:

ஸாதிகா said...

என்னை விட வயதில் இளையவராக இருந்தாலும் இத்தனை விடயங்களை அறிந்து வைத்து அதனை அழகான முறையில் பதிவிட்டு கடந்து போன இனிய காலங்களை அப்படியே கண்முன் நிறுத்திய சோனகனுக்கு ஒரு பெரிய பூங்கொத்து.நீங்கள் தொடக்கப்பள்ளியில் ஆரம்ப வகுப்பில் படித்த பொழுது பள்ளிக்கு செல்லமாட்டேன் என்று அடம் பிடித்து தர தர வென்று உங்களை பள்ளிக்கு இழுத்து சென்றது இப்பொழுது என் ஞாபகத்திற்கு வருகின்றது.

ஸாதிகா said...
This comment has been removed by the author.
ஸாதிகா said...

இங்கு கிளிக் செய்து பாருங்கள்

சோனகன் said...

வரவுக்கும், வார்த்தைகளுக்கும், பெரிய பூங்கொத்துகளுக்கும், என் பால்ய நினைவுகளை சிந்திக்க தூண்டியதற்கும் மிக்க நன்றி.

Post a Comment