அது என்ன சங்கு கரை ? கீழக்கரைக்கு வடக்கே 20 மைல் தூரத்தில் பெரிய கம்மாய் மதகிலிருந்த்து மழை நேரத்தில் திறந்துவிடப்படும் தண்ணி வங்காள விரி குடா பெருங்கடலில் பெருமிதத்தோடு கலக்கும் சந்திப்பில் அமைந்திருக்கும் சேது கரை தெரியும் என ஆச்சரியத்துடன் வினவிய பட்டுக்கோட்டை நன்பன் செல்வாவின் கையில் ஒரு பிள்ளையார் சங்கை வைத்தேன். அற்புதம் என்றான். கீழக்கரை கடல் செல்வம் தந்த அற்புதத்தில் இதுவும் ஒன்று என்றேன்,
வினாயகர் உருவத்திலான அந்த வகை சங்கு மன்னார் வளைகுடா எங்கும் கிடைக்கப் பெறும், சென்னைவாசியாகி அவ்வப்பொழுது ஊருக்கு செல்லும் காலங்களில், ஜமாலியா சங்கு மாலுக்கு சென்று இது போண்ற சங்குகளை சங்குமால் ஊழியர் சதக்குதம்பி காக்காவிடமிருந்து சேகரித்து என் மாற்று மத நன்பர்களுக்கும், மேலதிகாரிகளுக்கும் அண்பளிப்பாக வழங்கி வருவது வெகு காலம் வழக்காமாக இருந்து வந்தது. இன்றும் அவர்கள் வீட்டின் பூஜை அறைகளை இந்த சங்குகள் அலங்கரித்து வருவதாக சொல்லவும் கேட்டிருக்கிறேன்.
சங்கு குளிப்பதும், சங்கு வணிகமும் கீழக்கரையின் புரதான தொழில், முத்து குளிப்பும், முத்து வணிகமும் அப்படித்தான் இருந்து வந்த்து, கால வளர்ச்சியில் முத்து வணிகம் முழுக்க மறைந்தாலும் சங்கு இன்னும் கீழக்கரையுடனான தொடர்பை விடவில்லை.
சங்கு என்றவுடன் உனக்கு என்ன தோண்றும் என நன்பன் அலியிடம் கேட்டேன், பதிலுக்கு அவகாசம் எடுக்காமல் உடனே சொன்னான்” எனக்கு சங்குண்டவுடனே எஸ்.ஐ. சங்கு தான் ஞாபகத்துக்கு வற்றாரு…. சரிதான்,, கீழக்கரையின் காவல்துறை ஆயாவாளர் பெயர் “ சங்கு” என்பதை அப்பொழுத்துதான் நானே தெரிந்த்து கொண்டேன்…. சங்குக்கும் கீழக்கரைக்கும் உள்ள தொடர்பினை என்னவென்பது?
பிறகு ஒரு சமயம், மேலே கேட்ட அதே கேளிவியை மைனா என்ற யாசீனிடம் கேட்டேன்” மச்சான், நீங்க என்ன நினைக்கிறிய…..? அடப் போப்பா… சங்குண்டா என்ன நினைப்போம், சங்கு மார்க் வேட்டிதான்… கிப்ஸ்லாம் நல்லாவா போடறான் என்றான், அகமும் புறமும் காசு சம்பாதிப்பதிலேயே ஊறிய யாசீன். உண்மைதான், சங்கு அபூபக்கர் அண்ட் கம்பெனியின் தயாரிப்பில் இன்று வரும் வேட்டிகள் கூட அதே தரத்தை பராமரிப்பதை கானலாம். கிப்ஸ் வேட்டியின் தரங்கள் விலைக்காக வேறுபட்டு மக்களை குழப்பி விட்டதாகவே நினைக்கிறேன்.
1940 களில் சங்கு மார்க் கம்பெனி கைலிகள், வேஸ்டிகளுக்கும், மதுரை எஸ். இப்ராகீம் அண்ட் கோ வின் நீண்ட கருப்பு குடைகளுக்கும் இந்தியா, மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் மிகப் பெரும் முக்கியத்துவம் அங்காடியில் இருந்த்தாக சங்கு நிறுவனத்தின் பழைய ஊழியரும் அதன் நிறுவனர்களின் உறவினருமான அபிராமம் விஜயன் முஸ்தபா அண்ணண் சொல்லி கேள்விப்பட்டதுண்டு, இலங்கையின் முன்னாள் அதிபர் பண்டாரனாயகாவிற்கு சங்கு மார்க் கைலிகள் மிக இஷ்டம் என்று சொல்ல கேள்விப்பட்டதும் உண்டு. இன்னொரு விசயம் சங்கில் இருந்து பிறிந்த சகோதரரின் நிறுவனம்தான் கிப்ஸ்.. அது ஒரு தனிக்கதை… ஆனால் எனக்கு பிடித்தது கீழக்கரை இந்து பஜாரில் இருக்கும் சண்முகம் நாடார் அண்ட் சன்ஸ் கடையில் மட்டும் கிடைக்கும் குதிரை மார்க் வேஷ்டிகள் மட்டுமே. அது ஏன் அபுதாபி மோலினாவில் கிப்ஸ் மட்டுமே கிடைக்கிறது? யாராவது விடை தெரிந்தால் சொல்லுங்கள்…..
விஷயம் திசை மாறியே செல்கிறது என நினைக்கிறேன்.,. சரி….. சங்கு என்றால் எனக்கு என்ன தோன்றும் தெரியிமா? உண்மையை சொல்கிறேன்…. வலம்புரி, பால் சங்கு, பழைய குத்பா பள்ளி தெரு, அவ்வையார், சீவக சிந்தாமனி, கல்கத்தா, இராமேஸ்வரம், சங்கே முழங்கு, சீதக்காதி, கடலோர கவிதைகள், வீரப்பாண்டிய கட்ட பொம்மனில் போர் காட்சிகள், சாவு ஊர்வலம், அஞ்சு வாச கிட்டங்கி, சங்கு மோதிரம், சங்கு சக்கரம், லட்சுமி, அணுமார் என எதுவும் இல்லை. மாறாக “ 1986 ல் கீழக்கரை பேரூராட்சி தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் அப்துல்லா அவர்களை “ சங்கு” சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்று கீழக்கரை பேரூராட்ச்சியின் சேர்மனாக பல காலங்கள் பதவி வகித்த கே.எஸ்.எம். சாகுல் ஹமீது ஆலீம் அவர்கள் கையில் ஓரு வலம்புரி சங்குடன் ஒட்டு கேட்டு தெரு தெருவா்க ஊர்வலம் சென்ற காட்சி மட்டுமின்றி, அவருக்காக நாகூர் ஹனீபா வின் வென்கலக் குரலில் “வலம்புரி சங்கு”…. வலம்புரி சங்கு” எனற பிரச்சார பாடல் கீழக்கரை முழுவதும் ஒலித்து கொண்டிருந்தாலும்…. ஒரு அம்பாஸ்டர் காரில் பல நாள் ஊர்முழுதும் சுற்றி ” உங்களின் ஒட்டு சங்கு சின்னத்துக்கே” என பிரச்சாரம் செய்த பத்தாம் வகுப்பு மாணவர் , அருமை நன்பர் ஹமீது ரஹ்மானின் .. கணீர் குரலும்தான்…




2 மறு மொழி கள்:
சங்கைப்பற்றி அலசி,ஆராய்ந்து துவைத்து காயப்போட்டு நிறைய அருமையான தகவல்களுக்கு மிக்க நன்றி.இன்னும் கீழை நகரைப்பற்றி அறியத்தாருங்கள்.
இங்கு சென்று பார்த்தும் கருத்தினை கூறுங்கள்.
சங்கு மார்க் கைலிக்கம்பெனி முதலாளி மதுரை தல்லாகுளத்தில் டேஸ்டிஸோன் என்ற பெயரில் உணவகம் நடத்தி வருகின்றார்.அதிலயும் தரமா இருக்கணும் என்று அக்கறையோட இருக்காருங்க.நிறைய முறை சாப்பிட்டிருக்கேன்.டேஸ்ட் பட்டைய கிளப்பும்.வெகு நாளைக்கு பிறகு தான் தெரிந்தது.ஹோட்டல் ஓனர் சங்கு மார்க் காரர் என்பது.எளிமைக்கு அடையாளமா இருப்பாருங்க மனுசன்.
Post a Comment