கடந்த வருடம் நவம்பர் மாதம், விடாது பெரு மழை பொழிந்த பின்மாலை நேரத்தில், கீழக்கரை முஸ்லீம் பஜாரில் உள்ள லெப்பை டீ க்கடைக்குள் ஓதுங்கினேன், ”மழை உடாது மச்சான், ஆட்டொல வீட்டுக்கு போயிறு’என்றான் யாசீன், அட ஒரு சுலைமானி சொல்லுப்பா, குடிச்சிட்டு போவலாம், என்றேன்......
பத்து பதினைந்து கிளாஸுகளை பாங்காய் பரப்பி , கொதி நீர் நிரப்பப்பட்ட டீ பாய்லருக்கும் சக்கரை டப்பாவுக்கும் ,இஞ்சி சாறு பாட்டிலுக்கும் இடையில், ஏற்ற இறக்கமாக ஒரு நாட்டியம் ஆடிக் கொண்டிருந்த்து டீ மாஸ்டரின் கை, சூடு பறக்க வந்த சுலைமானியை ஊதி உறிந்து குடித்து நரம்புகளில் சூடேற்றிக்கொண்டேன்...
அந்த மழை கால கூதலுக்கு சுடு சுலைமானி இதமானதகவே இருந்த்தது.
கீழக்கரையில் சுலைமானி என்ற ப்ளேண் டீ க்கு லெப்பை ஹோட்டலை ஒரு பயோனிர் கடையாக கொள்ள்லாம்.இன்று கீழக்கரை மக்கள் தொகையின் பெரும் பகுதி வளை குடாவில் பரவிக்கிடப்பதால், அரபிகளின் தேனீர் கலாச்சாரத்தை கேரளா உள்வாங்கியது போல் சுலைமானிக்கு ஏகப்பட்ட டிமாண்ட் ஆகிவிட்டது போலும்.
கேக்குகள், பப்ஸ்கள், சூசுபரி, பிஸ்கட், இன்னும் பல தின்பண்ட வகைகள் அனைத்தும் கிடைக்கும் மெயின் ரோட்டில் இருக்கும் கடைகளான எஸ். ஆர். பேக்கரி, பாம்பே ஆனத்த பவன், மற்றும் மைசூர் பாக்குக்கு பிரசித்து பெற்ற மாலை நேர கடையான ராவியத் ஸ்வீட்ஸ் எங்கும் சுலைமானி மலிந்து கிடைக்கப் பெறுகிறது.
முன்னொரு காலத்தில் ஆங்காங்கே தென்பட்ட சுக்குமல்லி காப்பி கடைகள் வெகுவாய் குறைந்து, இறுதியாக கடற்கரை நோக்கிய மெயின் ரோட்டில் லெப்பை தெரு, எஸ். என் தெரு சந்திப்பில் ஒரு கடை இருந்த்து, அந்த கடையில் இருந்த்து வெளிவரும் கிசோர்குமார் மற்றும் முகம்மது ரபீயின் பாடலிசையில் இழைந்து கொண்டே சுக்குமல்லிக்காப்பியை குடிக்கும் பொழுது கடுமையான காப்பியின் காரம் கூட தெரிவதில்லை. இதைதான் திருவள்ளுவரின் குறளில் இப்படி சொல்லப்பட்டதோ என்னவோ?
”செவிக்கு உணவு இல்லாத போழ்து
சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்”
என்ன கொடுமை! அந்த சுக்குமல்லி காக்கா சமீபத்தில் காலமாகிவிட்டது அறிந்து மனம் விசும்புகிறது, அத்துடன் சுக்குமல்லி காப்பிக்கும் இந்தி கஜல்களுக்கும் உள்ள உறவும் அற்றுப்போய்விட்டதாகவே தெறிகிறது. அந்த காக்கவின் பெயர் தெரிந்த்தால் யாராவது சொல்லுங்களேன்..............




0 மறு மொழி கள்:
Post a Comment