எல்லா ரோடும் ரோமை நோக்கியேன்னு பழமொழி ஒன்னு உண்டு…. ஆனால் கீழக்கரையில் எல்லா கால்களும் பச்சைப்புள்ளை கடையை நோக்கி செல்வது மட்டுமின்றி கால்கடுக்க அங்கு விற்பனையாகும் பீஃப் மற்றும் சிக்கன் கபாபுகளுக்ககாக குத்பா பள்ளிக்கு எதிரில் இருக்கும் இந்த ஹோட்டலின் வெய்டிங் ஏரியாவான வள்ளல் சீதக்காதி சாலையில் போக்குவரத்து நெறிசலையும் சகித்துக் கொண்டு காத்துக்கிட்டு வேற இருக்கனும்… ஹோட்டல் வியாபாரத்துல கிடைக்கிற பரக்கத் (இலாபம்,) வருமானம் ) மாதிரி எதுலயும் கிடைக்காதுன்னு வளைகுடாவை விட்டு காலி பன்னி நம் மக்கள் கீழக்கரை மட்டுமின்றி சென்னை மன்னடியிலும் ஓட்டல்களை திறப்பதும் பிறகு மூடி விடுவதும் வாடிக்கை ஆகிவிட்டது.
என்னதான் ஏராளமான கடைகள் திறந்தாலும், கீழக்கரையில் முன்னொரு சமயம் மணீஸ் கபேன்னு ஒரு அய்யர் கடை இருந்தது, என் பதின்ம வயதில் அங்கு கிடைக்கும் மல்லிகைப்பூ இட்லிக்க்கும் கெட்டி சட்னிக்கும் ஆசைப்பட்டு காலை, இரவு என பாராமல் கையில் காசு கிடைத்தால் போய் அய்யர் கடை அய்டங்களை புசித்து விட்டு வருவது வாடிக்கையாக இருந்தது. என்ன காரனமோ தெரியவில்லை, அய்யர் இடம் பெயர்ந்து விட்டார், இப்பொழுது அய்யர் கடை ஐ.சி.ஐ.சி வங்கியின் தானியங்கி பனம் வழங்கும் மையமாக மாறிவிட்டது.
அதே கால கட்டத்தில் கீழக்கரையில் புகழ் பெற்று விளங்கிய மற்றொரு ஓட்டல்தான் இம்பாலா. சென்னை எக்மோர் இம்பாலா ஹோட்டலின் பெயர் தாக்கமோ என்னவோ தெரி்யவில்லை, இதனை அறியாத எந்த கீழைக்கரை “குடி”மகனும் கீழக்கரைவாசியாக தகுதியே இல்லை என கொள்ள்லாம்.. ஆறடி உயரத்தில் ஆஜானுபாகவனான உருவமாய் உலவி மறைந்த இம்பாலா தீன் காக்கா ஒரு பனியனுடன் ஓட்டலை சுற்றி வந்த நிகழ்வுகள் மனதில் பதிந்து இன்றும் நிலைத்திருக்கும். நெய் ரோஸ்ட் , பேப்பர் ரோஸ்ட் என்ற தோசை வகைகளை முதன் முதலிம் ஆச்சரியத்துடன் ருசித்த ஹோட்டல் அல்லவா.?
இது எல்லாம் தமிழ் சங்கங்கள் கண்ட மதுரை மா நகரில் பள்ளிப் படிப்பின் இறுதி காலங்களுக்காக காலெடுத்து வைக்கும் வரைதான்., அய்யர் ஹோட்டலில் பழகிய இட்லி , கெட்டி சட்னி ஆசையை தீர்த்துக் கொள்ள மதுரை டவுன் ஹால் ரோட்டின் மத்தியில் ஒரு சந்தின் நுழை வாயிலில் “ஐய்யன் கடை” என்ற ஒரு இட்லி கடை உண்டு, அங்கு கிடைக்கும், இட்லிக்கும், சாம்பார், சட்னிக்கும், இட்லி பொடிக்கும் மொத்த மதுரையும் கட்டுப்பட்டிருந்த்து என கூறினால் மிகையாகாது, மதுரை மேலச் சித்திரை வீதியில் எஸ்.வி.எம். கட்டிடத்தில் தங்கியிருக்கும் காலங்களில் தவறாமல் இராமனாதபுரம் வினாயகம் அன்னணுடன் அய்யன் கடைக்கு செல்வது வழக்கம். . இந்த ஹோட்டலில் சாப்பிடுவதற்காகவே வில்லாபுரம் அரசடி என தொலை தூரத்தில் இருந்தும் இட்லிப் பிரியர்கள் இங்கு ரெகுலராக வருவதாக வினாயகம் அன்னன் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
கீழக்கரை மக்களுக்கு கொண்டாட்ட காலங்களில் பிரதான உனவாக ஒருகாலமும் பிரியானி இருந்தது இல்லை எனில் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்,, அது என்னவோ தெரியவில்லை, காபூலில் இருந்து முகலாய சாம்ராஜ்ய முண்ணோர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பிரியானியை ஆம்பூரிலும், வாணியம்பாடியிலும் முக்கியப்படுத்துவதை போல கடலோர இஸ்லாமியர்களால் முக்கியம் பெறுவதில்லை, காரைக்கால், நாகூர் இஸ்லாமிய மக்கள் விஷேச காலங்களில் அஞ்சு கறி சோறுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கீழக்கரை மக்கள் நெய் சோற்றுக்கும், கலியா சோற்றுக்கும் மட்டுமே இன்றளவிலும் அளித்tது வருவது விந்தையே.!
ஆனால் எனககு அமசவள்ளி பிரியானி என்றால் உயிர்….,, அது என்ன அம்சவள்ளி…, மதுரை கீழ வெளி வீதியில் இன்றளவும் பிரசித்து பெற்று விளங்கும் அம்சவள்ளி ஹோட்டலில் கிடைக்க்பெறும் பிரியானியின் சுவையை ஒப்பிடவே முடியாது, ஒரு விதமான சீரக சோற்றில் தனியாக ,பிரியானிக்காக பிரத்யோகமாக துண்டிலப்படும் இறைச்சியை சேர்த்து சமைக்கப்பட்டு, சைடிஸ்ஸாக கோழியை கொதிக்க வைத்த என்னையில் ஆழ பொறித்து ஆஃப் பிளேட் , ஃபுல் ப்ளேட் எனப் பறிமாறப்படும், மதுரை சிந்தாமனி திரையரங்கில் ஒவ்வொருமுறை சினிமா பார்க்கும் பொழுதும் அம்சவள்ளியை தரிசிக்காமல் இருந்த்தில்லை.. இதே வகை பிரியானியை திண்டுக்கல் நாகல் நகரில் இருந்த தலப்பாக்கட்டு பிரியானி கடையில் தயாரித்து பிரியானி பிரியர்களை மகிழ்வித்து வந்தார்கள். இப்பொழுதான் தலைப்பாக் கட்டின் தலையெழுத்து மாறி, முட்டுச் சந்துக்கும், தெரு முனைக்குமாக இதன் போலிக் கிளைகள் பரந்து விரிந்து பாரம்பரிய ஜாம்பஜார், மற்றும் ஐஸ் ஹவுஸ் பிரியானிக் கடை பாய்களுக்கு போட்டியாகிவிட்டதே…….
ரெத்தின விலாஸும், அம்பல விலாஸும், பெரிய கடையில் புகழுச்சியில் இருந்த காலம் போய், மதார்ஸாவும், ஹனீபா டெக்ஸ்டைல்ஸூம் இராமனாதபுரத்தை தன் வசமாக்கி இருக்கும் சூழ் நிலையில், ஏகப்பட்ட உனவு விடுதிகள் முளைத்து கீழக்கரை மக்களை ஏப்பம் விட வைத்து விடுகிறது, கூடவே காசையும் தான், ஐஸ்வர்யா , கீரீன் பேலஸ், நவாப் கிச்சன், கல்யான பிரியானி என திசைக்கு ஒரு உனவு விடுதி.
கீழக்கரை மக்களுக்கும் கொத்துப் பரோட்டாவுக்கும் உள்ள உறவில் இன்றளவிலும் விரிசல் வந்த்து இல்லை, நைட் ஹோட்டல் என்றழைக்கப்படும் சீனியப்பா ஹோட்டலில் துவம்சம் செய்யப்படும் பரோட்டா கொத்தில் சட்டுவம் ஆடும் ஆட்டமும், அது எழுப்பும் ஒலியிலும் மாபெரு இசைப்பயன அனுபவமே அடையமுடியும்..
கீழக்கரை மக்களின் உனவு கலாச்சாரம் மாறி, சுவைக்கு அதி முக்கியத்துவம் தரப்பட்டு , ஓட்டல் வியாபாரம் கொடி கட்டி பறந்து வந்தாலும் எந்த ஹோட்டலிலும் சுத்தம் சரியாக பராமரிக்கப்படுவதில்லை,, தரமற்ற பொருட்கள் உபயோகப்படுத்தப்பட்டு, உடல் நலக் கேடை உருவாக்க ஏதுவானதாக அமைகிறது, இதனை முறைப்படுத்தாவிடில் உனவு விடுதி செல்லும் எல்ல ரோடுகளும் ஆஸ்பத்திரியை நோக்கும் சூழ் நிலையை சந்திக்க நேரிடலாம்……




4 மறு மொழி கள்:
புரோட்டாவை காமிச்சு, பசியை கிளப்பி விட்றீங்களே! :)
உணவு விடுதிகளின் காலப் பயணிப்பை நல்லா கொடுத்திருக்கீங்க. நன்றி!
தெகா அவர்களுக்கு, வரவுக்கும், கமெண்ட்டுக்கும் மிக்க நன்றி
அடடா...கீழக்கரையை இத்தனை நுணுக்கமாக கவனித்து ஒவ்வொரு பதிவாக போடுகின்றீகள்.பதிவைப்பார்த்தும் இப்பவே கீழக்கரை போய் பரோட்டா சாப்பிடவேண்டும் போல் உள்ளது.//கீழக்கரை மக்களுக்கு கொண்டாட்ட காலங்களில் பிரதான உனவாக ஒருகாலமும் பிரியானி இருந்தது இல்லை//உண்மைதான்.சென்னைக்கு புலம் பெயர்ந்த பின்னர்தான் பிரியாணியின் அருமை பெருமைகளை அறிந்து கொண்டேன்.அடுத்து அமீரக பிரியாணி வகைகளைப்பற்றிச்சொல்லுங்களேன்.
அரபுலக பிரியானி எப்பொழுதுமே பிடிக்காது, செட்டி நாடு உனவகத்தை பற்றி நீங்கள் ப்ளாஈள் சொன்னது போல் அபுதாபி உனவு விடுதிகளை பற்றி எழுதும் என்னம் இருக்கிறது. வரவுக்கும் , மறுமொழிக்கும் நன்றி
Post a Comment