அமீரக தலை நகரான அபுதாபியை ஆசியாவின் பிரதான வனிக தலைமையகமான துபாயுடன் இனைக்கும் இந்த நெடிய , பளிங்கு போல பள பள வென இருந்தாலும் சற்று பயமாகவும் இருக்கும் சேக் ஜைத் சாலையின் ஊடாக அதிவேகத்தில் வழுக்கி பயனித்து, இந்தா… அந்தா… என துபாய் சிட்டியை நெருங்கும் முன்பே, இராட்சத கட்டிடமான பர்ஜ் கலீபாவை கடந்து எத்தனையாவது இண்டர்சேஞ்சென தெரியவில்லை, அந்த பிரமாண்ட இபுனு பதூதா ஷாப்பிங் மாலின் அலங்கார வாயில் கன்னில் தென்பட்டது, இந்த மாலை பார்க்கும் போதெல்லாம் லாரன்ஸ் ஆப் அரேபியா படம்தான் என் உள்ளத்தில் விரியும்.மத்திய கிழக்கை மையாமாக வைத்தோ அல்லது இந்த பிரதேசத்தில் செட்டு போட்டோ எடுக்கப்பட்ட பழைய ஹாலிவுட் திரைப்படங்களில் புரதான அரேபியச் சந்தைகளை தத்ரூபமாக வடிவமைத்து காட்டி கடந்த காலத்தில் நம்மை நடமாட விட்டிருப்பார்கள். பாக்தாத் திருடனிலும், அலிபாபா திரைப்படத்திலும் அப்படியான சந்தைகளில் எம்.ஜீ.ஆரும் வலம் வந்து, தூனை பிடித்து சுற்றி சுற்றி வாள் சன்டை போட்டதை தமிழ் கூறும் நல்லுலகம் மறந்திருக்காது.
அத்தகைய அரேபியச் சந்தைகள், சாவடிகள், சதுக்கைகள், பயன்பாட்டு பொருட்கள், வடிவமைப்புகள் என் அனைத்தையும் அடக்கிய பழங்கால அரேபிய நகரினை போன்ற தீமை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த மாலுக்கு மத்திய காலத்தில் உலகம் முழுதும் 30 ஆண்டுகளாக சுற்றிவந்த மொராக்கோ தேசத்தின் பெரும் பயனி இப்னு பதூதாவின் நாமத்தை சூட்டிய இந்த துபாய் அரசுக்கு ஒரு “ஓ’ போடத்தான் வேண்டும்.
கீழக்கரைக்கும், காயலபட்டினத்திற்கும் சரித்திர விஷயங்களில் என்றுமே ஒத்துப் போவது இல்லை, சீதக்காதி வள்ளல் காயலில் பிறந்து கீழையில் மரித்தாக காயல்பட்டின சரித்திரம் கூறுகிறது, சின்ன சீறாவில் கீழக்கரைக்கு வழங்கப்பட்ட பெயர்களும், சீதக்காதி மரைக்காயரின் தோற்றம், வளர்ச்சி, மறைவு எல்லாம் தென்காயல் என்ற கீழக்கரை என்றும், நொண்டி நாடகத்தில் , படைவீரன் நொண்டி இயம்பும் நகரின் அமைப்பு கீழக்கரைதான் என்று சரித்திர ஆராய்ச்சியாளர்களான கவி.காமு. சரீப். கேப்டன் அமீர் அலி, இத்ரீஸ் மரைக்காயர் , ச.சி. நெய்னா முகம்மது போன்றோர்கள் சாண்றுகளுடன் தெளிவாக்கியும் இருக்கிறார்கள்.
அதே போன்று கி.பி 1348 ஆம் வருடம் யாழ்ப்பான மன்னரின் விருந்தினராக இலங்கையில் தங்கி இருந்த பின் , கோரமண்டல் கடற்கரையான தென் தமிழகம் வந்து கொண்டிருந்த வரலாற்றுப் பயனியான இப்னு பதூதா கடல் சீற்றத்தில் சிக்கி தப்பித்து தமிழக கரையோரம் வந்து சேர்ந்து பின் காயல்பட்டினம் வந்த்தாகவும், பின்பு அலாவுதீன் கில்ஜி வம்சத்தின் டெல்லி சுல்த்தானான முகம்மது பின் துகளக்கின் வசம் இருந்த இந்திய கண்டத்தில் தென்மதுரை இராஜ்ய பொறுப்பில் இருந்த சுல்த்தான் கியாதுதீனை சந்திந்த்து சென்றதாக காயல்பட்டின வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். அவ்வாறு இப்னு பதூதா தமிழக கரை சேர்ந்த இடம் ஆற்காடு என்று காயல்பட்டினத்தார்கள் சொல்கிறார்க்ள். ஆற்காட்டில் கடல் இல்லை என்பது கீழை வாசிகளின் வாதம்,
இப்னு பதூதா இலங்கையில் இருந்து கடல் கொந்தளிப்பில் சிக்கி வந்து சேர்ந்த இடம் ஆத்துக்காடு என்ற ஊர் என சொல்லப்படுகிறது, அங்கிருந்து பக்கத்து நகரான பதன் என்ற பவுத்திரமானிக்க பட்டனமாகிய கீழக்கரைக்கு வந்து பழைய குத்பா பள்ளி கருங்கல் சாவடியில் தங்கி இருந்த்தாகவும், பின் அங்கிருந்து 60 மைல் தொலைவில் உள்ள பாண்டிய மன்னர்கள் துக்ளக்கிடம் பறி கொடுத்த மதுரை நகருக்கு சென்றதாகவும், பின் மீண்டும் பதனுக்கு வந்து கோழிக்கோடு சென்று மாலதீவை அடந்த்ததாகவும் வரலாற்றின் குறிப்பில் அறியமுடிகிறது. இந்த நெருங்கிய உறவான இவ்விரு ஊருகளுக்கும் ஏன் இந்த சச்சரவு என்பது இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது.
அதற்கும் மேலாக பவுத்திரமானிக்க பட்டினம் என்றால் பெரிய பட்டினம்தான் என்றும் கூறுகிறார்கள். திரிந்த வரலாற்றின் ஆத்மாவுக்கு மட்டும்தான் உண்மையின் வெளிச்சத்தை வெளிக்கொனற முடியும்? எது உன்மையோ? இப்னு பதூதா மாலை பார்த்தவுடன் அவர் வந்து உன்மையை சொலவாரா என மனம் கிறுக்குத்தன்மாக கூட யோசிக்கிறது...................



3 மறு மொழி கள்:
என்னது திடீர்ன்னு நிறுத்திட்டீங்க ...ஆர்வமா படிச்சிகிட்டே வந்தேன்...!!! நல்ல நினைவுகள்...தொடர்ந்து எழுதுங்க :-)
நன்றி, வேகமாக பதிய வேண்டும் என்ற ஆர்வத்தில் நிறைய விஷயங்கள் மிஸ் ஆகிவிட்டது.. இன்ஷா அல்லா தொடர்ந்தும் எழுதுவேன்....
//வதிரிந்த வரலாற்றின் ஆத்மாவுக்கு மட்டும்தான் உண்மையின் வெளிச்சத்தை வெளிக்கொனற முடியும்? எது உன்மையோ? இப்னு பதூதா மாலை பார்த்தவுடன் அவர் வந்து உன்மையை சொலவாரா என மனம் கிறுக்குத்தன்மாக கூட யோசிக்கிறது.....// நான் இபுனு பதூதா மாலை பார்த்து விட்டு வியந்து போனேன்.ஆனால் இத்தனை விடயங்கள் உங்கள் பதிவு மூலம்தான் அறியமுடிகின்றது.
Post a Comment