14 Feb 2011

சேது எக்ஸ்ப்ரஸ்....



கடந்த நூற்றாண்டின் இறுதியில் சேது சீமையில் பொறந்த யாரும் சேது எக்ஸ்ப்ரஸ்ஸில் பயனிக்கவே இல்லை என சவால் விட முடியுமா?

மெட்ராசுக்கும் இராம நாதபுரத்துக்கும் இடயே மில்லியன் கனக்கான மக்களை சுமந்து ஊர்வலமாய் திரியும் அற்புதமாகவே நான் இதனை உணர்ந்து இருக்கிறேன்..வேறு என்ன, 1980 களுக்கு முன்பு வரை சென்னை செல்ல வேண்டும் என்றால் இராமேஸ்வரம் லோக்கல் ரயிலையும், மெயிலையும் மட்டுமே நம்பி இருந்த மக்களின் மனதில் வசந்த்தை கொண்டுவந்த அதிவேக ரயில் அல்லவா இந்த சேது எக்ஸ்ப்ரஸ். தென்மண்டல ரயில்வேயால் இதனை மக்களுக்கும் அர்ப்பனிக்கும் முன்பு வரை லோக்கல் ரயிலும், மெயிலும் மட்டுமே நம் மக்களுக்கு பரிச்சயமாகி இருந்தது, பகல் 12 மனிக்கு மெயிலில் ஏறினால் அடுத்த நாள் காலை வரை நீடித்த பயனத்தில், மொத்த தமிழகத்தையே ஒரு ரவுண்டு வந்து சென்னை எழும்பூர் சென்றடையும் போது உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருக்கும். இதைவிட லோக்கல் டரயின் ரெம்ப சூப்பர் , இதே போல ஒரு ரயிலில் அதிராம் பட்டினம் முதல் நாகூர் வரை பயனிக்கும் பொழுதுதான் அரசகவி செய்யது முகம்மது அன்னாவியார் புலவர் “ நாகூர் புகைரத சிந்து” என்ற அருமையான தமிழ் இலக்கியத்தை நமக்கு கொடுத்திருக்க முடியும். ஆம், ஒரு நாள் காலையில் இராமேஸ்வரம் பாஸ்ஞ்சர்” என்ற இந்த லோக்கலில் ஏறினால் அடுத்த நாள் இரவில் உறங்க கண்டிப்பாக சென்னைக்கே சென்றுவிடலாம் போங்க. அன்னாவியாரின் காப்பியத்திற்கு இது போல் ஒரு ரயில் உதவி இருந்தால் எத்தனை ஸ்டேசணில் பெரும் தொப்பை கொண்ட மனிதர் ஜாக்கிங்க் செல்வது போல இறைக்க இறைக்க ஓடி புஸ்.. புஸ்ஸுன்னு மூச்சு விட்டு நிற்பது போல கூவி கூவி நின்றிருக்குமோ தெரியவில்லை.

தனியார் பேருந்து எதுவும் கீழக்கரையில் இருந்து சென்னைக்கு செல்லாத அந்த காலத்தில் திருவள்ளுவர் கீழக்கரைக்கு விஜயம் தந்தார், பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து மாலை 5 மனிக்கு கிளம்பி இரவு முழுதும் பயனித்து அடுத்த நாள் காலையில் சென்னையை சென்றடைய திருவள்ளுவர் பஸ் ஒன்று விடப்பட்டது, வயது முதிர்ந்த பயனிகளும், பென்களும் இந்த பஸ்ஸை எப்பொழுதுமே விரும்பியது இல்லை, ரயிலில் செல்லும் சுகத்திற்கு எந்த வாகனப் பயனமும் ஈடாகுமா....

ஆன்லைன் ரிசர்வேசன் காலத்திற்கு முன்பு, கீழக்கரை அப்சரா தியேட்டரின் தென் கோடி மூலையில் சேது எக்ஸ்ப்ரஸின் டிக்கட் முன்பதிவுக்கு என் ஒரு கவுண்டர் வைத்திருப்பார்கள், அதற்கென் ஒரு சிறப்பு ஆபீசர் இராமனாதபுரத்தில் இருந்து நாள்தோறும் வந்து போவார். சினிமா பார்க்க தியேட்டருக்கு வரும் கூட்டத்தை விட ரயில் முன்பதிவுக்காக வரும் கூட்டம் அதிகமாக இருக்கும், தியேட்டரை போலவே ஹவுஸ்புல் போடை இந்த ரயில்வே ஆபீசரும் கையில் வைத்துகொண்டுதான் இருக்கனும்......

மன்னார் வளைகுடாவை செழிக்க வைக்க இந்திய அரசாங்கத்தால் பில்லியன் டாலர் ப்ராஜக்டாக தொடங்கப்பட்டு சட்ட சிக்கலில் இருக்கும் சேது சமுத்திர திட்டத்தை பற்றி மக்கள் பேசுகிறார்களோ இல்லையோ, மச்சான் சேதுலயா வந்திய... சேதுலதான் போறோம், சேதுல கிடைக்குமா? என சேது எக்ஸ்ப்ரஸை ரயிலை குறிப்பிட்டு நாள்தோறும் கீழக்கரை மக்கள் பேசாமல் இருந்த்தில்லை.

வெளியூர் போகும் வழிப்போக்கர்கள் கட்டுச்சோறு கட்டிப்போகும் வழக்கம் பண்டைய காலத்தில் இருந்து நடைமுறையில் இருந்து வரும் ஒரு விஷயம், அதை கட்டிக்காக்கும் உந்துதலோ என்னவோ, சேதுல மெட்ராசுக்கு போறோம் என்றாலே, வீட்டில் பிற்பபகலில் ரொட்டி சுட்டு , கறி ஆனத்துடன் பக்கா பேக்கிங் ரெடியாகிவிடும், மாலை சேதுவில் கீழக்கரைக்காக ஒதுக்கப்படும் ஏதாவது ஒரு எஸ் கோச்சில் ஏறினால் கல்யான வீட்டு சாப்பட்டு வாசம் மூக்கை துளைக்கும்.... கீழக்கரை சாப்பாட்டுக்கென டி.டி க்கள் ‘மாமா என்ன கொண்டு வந்தீங்க” என கேட்பதும், டி.டி. ஆருக்கு வான்கோழி கறி கொடுங்கமா.. என பென்கள் வாஞ்சையுடன் சொல்வதும் வாடிக்கையானது.

புதுக்கல்லூரியில் படிக்கும் காலங்களில் அடிக்கடி சேதுவில் பயனம் செல்வது வழக்கம், என்றுமே நான் கட்டுரொட்டி கொண்டு செல்வதை விரும்புவதில்லை, இராமனாதபுரம் ஸ்டேசனில் இருந்து கிளம்பி, சத்திரக்குடி, பரமக்குடி, கமுதக்குடி வழியே சென்று மானாமதுரை ஜக்‌ஷனை அடையும் ரயில் ஒரு 20 நிமிஸம் இஞ்சின் மாற்றவோ அல்லது கூடுதப் பெட்டிகளை இனைக்கவோ நிக்கும், அந்த கேப்பில் ஸ்டேசனை கடந்து எதிரில் முற்காடுகளுக்கு இடையே குறுகிய மனல் பாதையில் இருந்து நாகூர் ஹனீபாவின் குரலில் ஏதாவது ஒரு பாடல் உச்சஸ்தாயில் ஒலித்துக் கொண்டிருக்கும் மேலும் நெருங்கினால் சீரியல் செட் அலங்காரத்துடன் “ ஆதம் ஹோட்டலை” அடையலாம், இரண்டு பரோட்டாவும், கோழி சால்னாவும் பார்சல் பன்னி வாங்கி வருவதற்குள் சேது எக்ஸ்பரஸ் கிளம்ப ஆயத்தமாகி இருக்கும், ரயில் பயனிகளை மட்டுமே நம்பி நடுக்காட்டில் ஓட்டல் வைத்திருக்கும் “ ஆதம்” ஓட்டல் பாயின் தைரியத்தை பாராட்ட வேண்டும், சேது சீமையின் ஆப்பனூர் காரர் அவர்... அப்படித்தான் இருப்பார் போல....

இராமனாதபுரம் - சென்னை அகல ரயில் பாதை திட்டத்தினை அடுத்து பல காலங்கள் சேது தன் ஓட்டத்தை இந்த தடத்தில் நிறுத்தி வைத்து கீழக்கரை மக்களுக்கு சொல்லென்னா துயரத்தை கொடுத்து வந்தது, இந்த காலக்கட்டத்தில்தான், மூர், பாக்யலட்சுமி, குயீன், பர்வீன், கே.பீ.என், சி.டி.சி டிராவல்ஸ் என ஏகப்பட்ட பஸ் ஆப்பரேட்டர்க்ள் கீழக்கரையின் போக்குவரத்து மார்கட்டை சேதுவிடம் இருந்து தட்டிப் பறித்தனர். இந்த பஸ் கம்பெனிகளுக்கு இடையேலான தொழில் போட்டியில் பிரியானி எல்லாம் இலவாமாக கொடுத்து மக்களை மகிழ்ச்சிப் படுத்தியது படு சுவராஸ்யமானது. முன்னாள் மத்திய ரயில்வே துறை இனை அமைச்சர் வேலு பதவியில் இருந்த காலத்தில் சேது தனது ஒட்டத்தை மீண்டும் தொடங்கி கீழக்கரை மக்களின் வயிற்றில் பால் வார்த்து, ஆம்னி பஸ்களை கார்கோ வண்டிகள் ஆக்கியது.

இதிகாசத்தில் சுட்டிக்காட்டப்பட்ட ராமருக்கும் சேது கால்வாய்க்கும் இருந்த நெருக்கம், மறவ நாட்டு சிங்கம் கிழவன் சேதுபதிக்கும் டச்சு நாட்டினரின் வயிற்றில் புளி கரைத்த விஜயரகுனாத பெரிய தம்பி என்ற சீதக்காதிக்கும் இருந்த பினைப்பு போன்றே கீழக்கரை மக்களுக்கும் சேது எக்ஸ்ப்ரஸின் மேல் ஒரு ஈடுபாடு இருப்பதை  மறுக்க முடியுமா?

8 மறு மொழி கள்:

ராம்ஜி_யாஹூ said...

சில காலம் இந்த சேது ரயில் நெல்லை, விருதுநகர், மானமதுரை வழியாக சென்னை சென்றது

MAT said...

சேது வை பற்றி நிறைய எழுதி விட்டிர்கள் அப்படி கொஞ்சம் CAS, மணல்மேடு பற்றி கொஞ்சம் எழுதவேண்டியது தானா?

MAT said...

சேது வை பற்றி நிறைய எழுதி விட்டிர்கள் அப்படி கொஞ்சம் CAS, மணல்மேடு பற்றி கொஞ்சம் எழுதவேண்டியது தானா?

ஸாதிகா said...

அருமையான பதிவு.ஊரில் ஒரு ஆம்னி பஸ் போக்குவரத்து புதிதாக ஆரம்பித்த பொழுது முதல் நாளில் பயணித்தேன்.பஸ் முழுதும் மலர்களால் அலங்கரித்து ஒரு திருமண வீட்டினை நினைவு படுத்தினர்.தவிர,அன்று பயணித்த அனைவருக்கும் வால் கிளாக்,ஸ்வீட்,சாக்லேட்,காரம்,டீ,கூல் டிரிங்க்ஸ்,பஃப்,இன்னும் பிற வஸ்துக்கள் அன்பளிப்பாக பயணக்கட்டணத்தை விட அதிகமான மதிப்பில் வழங்கினார்கள்.அன்று செய்த பயணம் இன்றும் மறக்க முடியாது.இருப்பினும் சேதுவில் பிராயாணம் செய்வதில் உள்ள வசதி வேறு எதிலும் கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை.சேது எக்ஸ்பிரஸ் முகவை மாவட்டத்தினருக்கு குறிப்பாக கீழைக்காரர்களுக்கு இன்றியமையாதது.

சோனகன் said...

மறு மொழிக்கு மிக்க நன்றி, நீங்கள் சொல்வது போல தொழில் போட்டியில், தங்களின் இடத்தை தக்க வைக்க எல்லாம் கொடுத்தார்கள், இப்ப ஒரு பாட்டில் தண்னீர் கூட கொடுப்பது இல்லையாம்...

சோனகன் said...

ராம்ஜி வரவுக்கு நன்றி, சேது நெல்லை வழியாகவும் சென்றதா... ஆச்சரியம் தான்.

சோனகன் said...

சி.ஏ.எஸ் பற்றி எழுதலாம் கொஞசம் யோசனையா இருக்கு........... மனல் மேடு பற்றி ப்ளாக்குல் நிறைய இருக்கே...

ஸாதிகா said...

புனைப்பெயரில் எழுதிவந்த தாங்கள் முகபுத்தகம் மூலம் உங்கள் முகத்தினை காட்டி விட்டீர்கள்!!!!!!!!!இன்னும் உத்வேகத்துடன் பதிவுகள் எழுதி,பதிவுலக சாம்ராஜயத்தில் வீறு நடை போடுங்கள்.

Post a Comment