மண் வாசனை மனம் மறக்குமோ என்னவோ.. ஓடி குலானின் (Eau-de-Cologne) மிண்ட் மனம் மூளையின் ஏதோ ஒரு இடத்தில் பதிந்து வாழ் நாள் முழுவதும் நினைவலைகளாய் வீசிக் கொண்டுதான் இருக்கிறது, பால்ய காலங்களில் , மழை காலங்களிலும், பருவ மழையிலும் நனைந்து தும்மலுடன், தடுமலும், காய்ச்சலுமாய் சுக்க்குறைவான நாட்களில் “ அற்புத சஞ்சீவியாக” ஓடி குலான் எனக்கு தெரிந்த்து.
வெள்ளை துணியை சுருட்டி பந்த்தாக்கி, சுடரிட்டு எரியும் அரிக்கேன் லாம்பின் மேல் ஒத்தி எடுத்தும், கரும் மன் சட்டியை அடுப்பில் சுட வைத்தும், உச்சந்தலையில் கொடுத்த ஒத்தில் சொக்கிய சுகம் இனி வரப் போவதில்லை, இதெல்லாம் முடிந்த் பின்புதான் ஓடி குலான் வைத்தியம், உடல் முழுதும் குளிர்ச்சியாய் ஊடுறுவி சூடு கிளப்பும். செக்கடி கீச்சி பூச்சி அன்ன்ன் கடையில் கிடைக்கும் ஓடி குலானில் கிடைத்த மிண்ட்டின் மனம் மெயின் ரோட்டில் வரிசையாய் கடை விரித்திருந்த சிங்கப்பூர் கடைகளில் ஏன் கிடைக்கவில்லை என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே இன்றும் இருக்கிறது. கர்ப்பினி பென்களுக்கு கை மருந்தாய் கொடுக்கப்படும் “கோரஜனை” முதல் ”பட்டனம் மூக்குப் பொடி” வரை கிடைப்பதற்கறிய அனைத்து வஸ்துக்களும் இந்த கீச்சி பூச்சி நாடார் கடையில் கிடைக்கும்.கீழக்கரை மக்களுக்கும் , மீசைக்கார, கோடாரி (ஆக்ஷ் ஆயில்) மற்றும் பச்சை (கோல்ட் மெடல்) தைலங்களுக்கும் இருக்கும் பாச பினைப்பை! போன்றே ஓடிகுலானுடன் ஒரு திரவ பந்தம் இருப்பது உன்மை, லேசான தலையிடி முதல் கடும் ஜுரம் வரை, பெரியவர்கள் முதல் பச்சிளம் குழந்தை வரை இதனால் நிவாரனம் பெருவது அணுபவத்தில் கண்ட விந்தை.
கீழக்கரை சின்னக் கடை தெருவில் டீ க்கடை வைத்திருக்கும் லெப்பை கனி காக்காவின் தம்பியின் கடையை ஓடி குலான் கடை என்றுதான் அழைக்கிறார்கள், டீயில் பாலுக்கு பதில் ஓடிக்குலான் திரவத்தை கலந்து விற்கிறாரா என்று எண்ன வைக்கிறதா என்ன?, ஆணால் சோவியத் ரஷ்யாவின் சைபீரியா துருவ பிரதேசத்தின் உறை பனியில் பனியாற்றிய சோவியத்தின் செம்படைகளுக்கு “ஓடி குலான்” சாராயமாக பயன்பட்டதாம்.
Eau-de-Cologne எப்படி கீழக்கரையில் ஓடி குலானாக மாறியது என்பது முதல் இதனை உலகுக்கு அறிமுகப்படுத்தியது யார்? என்பதை அறியும் ஆவல் , அபுதாபி ஹம்தான் ரோட்டில் இருந்த் மோலினா சிங்கப்பூர் கடையில் ஒரு முறை ஓடி குலான் வாங்கிக் கொண்டு இருந்த தருனத்தில் மனதில் உதித்த்து, அங்கு இருந்த கொழும்பு நானாவிடம் , ஓடிகுலான கண்டு பிடித்த்து யார் நானா? என்று கேட்டேன், ”அரபுகள்தான்” என அளந்து விட்டார்.
இனையத்தில் இதன் பின்ன்னியை ஆராய்ந்தால் , அடிப்படையில் இது ஒரு நறுமனத் திரவியமே, 17 ஆம் நூற்றாண்டில் Gian Paolo Feminis என்ற ஒரு இத்தாலிய சிகை அலங்கார நிபுனரால் ஜெர்மனியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்ட்து, துவக்க காலங்களில் திராச்சை சாறு, மற்றும் லாவண்டர் பூவினை கொண்டு தயாரிக்கப்பட்ட்தாகவும் , அந்த காலக் கட்ட்த்தில் நடந்த போர்களில் ஈடுபட்ட அனைத்து வீர்ர்களாலும் பயன் படுத்தப் பட்டு உலகச் சந்தையில் காலடி வைத்த்தாகவும் வரலாறு கூறுகிறது, இதனை காப்பியடித்து ப்ரான்ஸில் தயாரிக்கப்பட்டஓடிகுலான்தான் இப்பொழுது நடப்பு சந்தையில் கிடைக்க பெறுகிறது. ஃப்ரென்ச் சக்கரவர்த்தி நெப்போலியன் போனாபட் ஒரு நாளைக்கு ஒரு பாட்டில் கோலான் பயன்படுத்துவாராம் என்றால் இதன் மகிமையை புறிந்து கொள்ளலாம்.
துபாய் சந்தையில் இறைந்து கிடக்கும் எவ்வளவோ நுகர் பொருட்களை வாங்கி ஊர் சென்றாலும், “ஓடிக்குலான் வாங்கிட்டு வந்தியா வாப்பா? என கீழக்கரை தாய்மார்கள் இன்றும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.



3 மறு மொழி கள்:
மலரும் நினைவுகள்.ஓடிகுலானை விட இந்த கோடாலி தைலம்,பச்சைத்தலத்திற்குத்தான் இப்போதெல்லாம் மவுசு.தொடர்ந்து கீழை நிகழ்வு பகிர்வுகளாக தொடருகின்றீர்கள்.தொடருங்கள்.
வரவுக்கும், ஊக்கமளிப்பமைக்கும் மிக்க நன்றி.
உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்.
Post a Comment