2 Sep 2011

கோலு என்ன விலை?


தமிழ் பெரும் அகராதியில் “ கோல்” மற்றும் செங்கோல் என்பதெல்லம் அரச மாட்சியினையும், அதிகாரத்தையும் குறிப்பிடுவதற்கான சொல்லாக பயன்படுத்தப்பட்டு வருவதை கானலாம். கீழக்கரை ஜீம்மாப் பள்ளியில்  காலம் சென்ற கத்தீப் சாகிப்“ அஸ்மத் ஹுசைன்”  வெள்ளிக் கிழமை குத்பாவிற்காக மிம்பரில் ஏறும் பொழுது இத்தகைய கோலாடுதான் ஏறி நின்று பாயான் செய்வார்,  வெண்கல குரலுக்கு சொந்த்தக்காரர் அவர், அவரின் கம்பீர குரலுக்கு  இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு  அந்த “ கோல்” தான் சாட்சியாக இருக்கப் போகிறது,  இந்த கோலின் கம்பீரத்தை அவர் கையில் இருக்கும் பொழுதுதான் நான் முதன் முதலில்  நேரடியாக உணர்ந்தேன்.

ஆனால் மேலே கொடுக்கப்பட்ட தலைப்பு  வேறு கோலைப் பற்றியது. இந்த கேள்வியை கீழக்கரை வாசிகள் அடிக்கடி செவியுற்றிருபார்கள், ஆமாம், நில அளவீட்டு  முறைக்கான  சொல்லாக இந்த “ கோல்”   பல நூற்றாண்டுகளாக கீழக்கரையில் பாவனையில் இருந்து வருகிறது. 

ரியல் எஸ்டேட் வியாபாரம் பெருகி நிலங்களின் விலை வின்னை முட்டுகிறது,  1960 களில் ஒரு கோலின் விலை  ரூபாய் 500 ஆக இருந்த அதே இடத்தில் இன்று கோலு விலை  ஓன்னரை இலட்சம்.  தங்கத்தின் விலையோடு போட்டி போட்டு  கோலு விலையும் தன் இடத்தை திடமாக் தக்க வைத்து கொண்டே வருகிறது.

வெகு விரைவில் தாலுகா ஆபீசு வரப்போவதாக அரசியல் கட்சிகளும், ஆளுகின்ற அரசுகளும்  மாறி மாறி அறிவித்தாலும் அறிவித்தர்கள் கீழக்கரையில் புற்றீசல்கள் போல ஏகப்பட்ட ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் கிளம்பிவிட்டார்கள்,  ஒரு காலத்தில் நிலங்கள்  வாங்க, விற்க தொழிலில்  நாலு , அஞ்சு புரோக்கர்கள்  இருப்பதே அபூர்வமாக  இருந்தது, அதெல்லாம் மலையேறிப்போய்விட்டது, தற்போதைய நிலவரப்படி வரையறை இல்லாமல் முன்னூறூ  புரோக்கர்கள் ஊரை வளைய வருகிறார்களாம்,  சென்ற முறை ஊருக்கு சென்ற பொழுது , மோர்குளத்துல அரை ஏக்கர் இடம் வருது... வாங்கிப்போடு... ஒரு வருஷத்திலயே டபுளா வித்து  தர்ரேண் என்றான் யாசீன்...  கடந்த வருஷம் வரை  ஒரு டீ.வி.எஸ் 50 யில் சுற்றி திரிந்தவன் , கோலுக்கு கோல் கமிஷன் வாங்கி  இன்று குவாலிசில் போகிறாண்.... நம்பித்தான் ஆகவேண்டும் ..  நடக்குறது அம்மாவோட ஆட்சி. கொஞ்சம் அடக்கி வாசிங்க மச்சான்.. என அட்வைஸ் செய்துவிட்டு வந்தேன்..

தஞ்சை மாவட்டத்தில் இக்காலத்திலும் நிலத்தை 'வேலி'  மா, குழி என்னும் அளவையால் குறிப்பிடுகின்றனர்.  இதென்ன புதுசா இருக்கிறது  உங்க ஊரில என அதிராம்பட்டினம்  ஹமீது காக்காவிடம் கேட்டேன்... இதெல்லம் ஒன்னும் புதுசு இல்லை, இதுதான் எங்க ஏரியாவில் தலைமுறைகளாக வழக்கத்தில் இருக்கிறது என்றார்

100 குழி = ஒரு மா, 
20 மா = ஒரு வேலி
3.5 மா = ஒரு ஏக்கர்   
6.17 ஏக்கர் = ஒரு வேலி

மேலே குறிப்பிட்ட கனக்கை சொன்னவர், உங்க ஊரு கோலுக்கு என்ன கனக்கு என கேட்டு, பதில் தெரியாமல் முழித்த என்னை  விடைத்த வினாடியே  கீழக்கரையில் நில அளவீட்டு முறையான கோல் என்பதற்கான அர்த்ததை அறிந்து கொள்வதில் மனம்  சுற்றி அலைந்தது. 

கீழக்கரையை சுற்றிய எந்த ஊரிலும், கோல் என்ற அளவை மூலம் நிலங்கள் அளவீடப்படுவதில்லை, எல்லாம், செண்ட், க்ரவுண்டு, ஸ்கொயர் ஃபீட், ஏக்கர் கனக்குகள்தான் புழக்கத்தில் இருக்கிறது, சேதுபதிகளின் தலை நகரான இராமனாதபுரத்திலும் “ கோல்” என்ற அளவீட்டுமுறை இல்லை. பின் எப்படிதான் இந்த பெயர் நிலைத்து நிற்கிறது என்பது மிக ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. கடும் ஆராய்ச்சிக்கு பின்  பாண்டிய மன்னர்கள். சுந்தரபாண்டியன் கோல்’, ‘குடிதாங்கிக் கோல்’என்ற பெயரில் அமைந்த கோல்கள் மூலம் நில அளவை செய்ததாகக் கல்வெட்டுக் குறிப்புகள் கிடைக்கின்றன.   ஆறாம் பாண்டியனாக அறியப்பட்ட “ சுல்த்தான் தக்கியுதீன்” வாழ்ந்த கீழக்கரை  தனது  பண்டைய மரபு முறையை மாற்ற விரும்பாமல்  காலம் கடந்தும் “ கோல்” என்ற சொல்லை பேனி பாதுகாத்து வருவது  பாண்டிய மன்னர்கள்  மரபினை கீழக்கரை இன்றளவும்  உலகறிய பறைசாற்றி வரும் மாண்பினை விளக்குகிறது என்பதாக எடுத்து கொள்ளலாம்.

சாண் 2 கொண்டது ஒரு முழம் (1½ அடி)
முழம் 12 கொண்டது ஒரு சிறுகோல் (18 அடி)
சிறுகோல் 4 கொண்டது ஒரு கோல் ( 72 அடி )

மேலே சொல்லப்பட்ட யாப்பு என்னவென்று புரிகிறதா? அது ஒன்னும் இல்லை, அபிதான சிந்தாமனி என்ற தமிழின் முதல் கலை களஞ்சியத்தில் “கணித வகை” என்ற சொல்லின் கீழ் “பூப்பிரமானம் அறிதல்” என்ற தலைப்பில் தரப்பட்டிருக்கும் வாய்ப்பாடுதான்  இது. இறுதியாக  1 கோல்   என்பது - 75 சதுர அடி என்கிறார்கள் .  எப்படியோ  கோலு என்னவிலை  கேட்டால் நம்மை விடாமல் விரட்டி  ஒரு இலட்சம், இரண்டு லட்சம் என்று கூறும் கீழக்கரை புரோக்கர்கள்  இந்த அளவையில் வரலாற்றையும்  கொஞ்சம் தெரிந்து  வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே என்னை போன்றவர்களின் விருப்பம்.

2 மறு மொழி கள்:

ஸாதிகா said...

கோல் பற்றி அறியதந்தமைக்கு நன்றி.பிறரிடம் நம்மூர் கோல் கணக்கைச்சொன்னால் புரிவதில்லை.இப்பொழுது உங்கள் இடுகை மூலம் விரிவாக அறிந்துகொண்டேன்.நன்றி!

ஜெய்லானி said...

வரலாறு ரொம்பவும் முக்கியம் அமைச்சரே-ன்னு சொல்ரது மாதிரி, உங்க தயவால இதுவும் தெரிஞ்சிக்க சான்ஸ் கிடைச்சது :-)

Post a Comment