உள்ளாட்சி தேர்தல் காலம் அறிவிக்கப்படாத நிலையிலும் கூட, யூகங்களின் அடிப்படையிலும், விருப்ப மனு அளித்தவர்கள் தொடர்பிலும் கீழக்கரையின் அடுத்த சேர்மனுக்கான ஆருடங்கள் முகப்புத்தகங்கள், இனைய பக்கங்கள் வாயிலாகவும் பரப்பப்பட்டு வருவதை அறிகிறோம். கீழக்கரையின் வரலாற்றில் நகர் தலைவர் என்பது அதி முக்கியமான பதவியாகவும், போட்டிகள் அடங்கியதாகவுமே இருக்கிறது.
நிறுவனமற்ற நகர் தலைவர்களாக காஜியார்களே பல தலை முறை களாக வகித்த வந்த முறை மாற்றப்பட்டு 18 ஆம் நூற்றாண்டு முதல் இன்று வரை, கடந்த 125 வருடங்களுக்கும் மேலாக கீழக்கரை சேர்மன் பதவி தொடர்ந்து வருகிறது, கிட்டத்தட்ட 25 க்கும் மேற்பட்டோர்கள் கீழக்க்ரையின் சேர்மன் பதவியை அலங்கரித்ததாக வரலாறு கூறுகிறது.
கடந்த கால கீழக்கரை வரலாற்றில் சேர்மன் பதவியில் இருந்து வைரமாக ஜொலித்தவர்களாக இருவரை கூறலாம், முதலாமவர் 1920 களில் சேர்மன் பதவி வகித்த ஏ.எம்.எஸ். அஹ்மது இப்ராகீம், நடுத்தெருவை சார்ந்த மிகப் பெரும் நிலக்கிழார், சுற்றுச்சூழல் விசயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர், கீழக்கரை சீதக்காதி சாலை முதல் நகரின் எல்லை முடியும் பாலையாறு வரை இன்றும் நிழல் தரும் வளர்ந்த ஆல, வேப்ப மரங்கள் இவர் காலத்தில்தான் நடப்பட்டதாக கூறப்படுகிறது, அது மட்டுமின்றி குடி நீருக்கான ஏராளமான குளங்கள் நகருக்குள் வெட்டப்பட்டதும் இவர் காலத்தில்தான்.
அடுத்து, சேர்மன் சதக் என்றழைக்கப்படும் “ முகம்மது சதக்கு தம்பி மரைக்காயர்” 1950 - 60 கலங்களில் சேர்ம்னாக பதவி வகித்த இவர் முகம்மது சதக் அறக்கட்டளை சேர்மன் செ.மு. ஹமீது காக்காவின் தந்தையாவார். கீழக்கரை சுகாதார செழுமைக்கு பாடுபட்டவர், தனது சொந்த நிலங்களை ஏக்கர் கணக்கில் கீழக்கரையின் நலன்களுக்காக வாரி வளங்கியவர், அவர் மறைந்தாலும் , இவர்களின் வாரிசுகள் மூலம் வள்ளல் தன்மை இன்றும் பறை சாற்றப்படுகிறது, கீழக்கரையின் பொது நலன்களுக்காக இவர்கள் அரசுக்கு வழங்கிய நிலங்கள் எத்தனை, எத்தனை....
இவர்களுக்கு முன்பும், பிறகும் பலர் சேர்மன் பதவியில் இருந்து சீரிய சேவை செய்திருக்கிறார்கள், அம்பலார் அவர்கள், சாகுல் ஹமீது ஹாஜியார், சக்கீலா, டாக்டர் நசீரா பர்வீன் , தற்போதைய சேர்மன் பசீர் ஆகியோர்கள் இதில் குறிப்பிட்ட சிலராக நான் அறிகிறேன்.
இதை தவிர, பதவியில் இல்லாமல் சேர்மன்களை வழி நடத்துபவர்களாகவோ அல்லது, கீழக்கரையின் பொது நலனில் மிகுந்த்த அக்கரை கொண்டவர்களாகவும் பலர் இருந்த்து இருக்கிறார்கள், அவர்களில் முக்கியமானவர்கள், செ.மு. ஹமீது காக்கா, பி.எஸ்.ஏ . ரஹ்மான், மெஜஸ்டிக் கரீம், எஸ்.எம்.ஏ பசீர் முகைதீன், எம்.எம்.கே. முகம்மது இப்ராஹீம், ஸ்டேசன் மாஸ்டர் முகம்மது இப்ராஹீம், ஏ.கே.எஸ். கபீர், கே.எம். அப்துல்லா போன்றோர்கள், இவர்களை மறந்த கீழக்கரை சேர்மன் பதவி என்று ஒன்றும் இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.
தற்போதய சூழலில் சேர்மன் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக த.மு.மு.க உசேன் மற்றும் கீழக்கரை டைம்ஸ் சொல்லும் , நன்பர் எம்.எம்.கே, இப்ராஹீம், இப்திகார், ஹசனுதீன், இம்பாலா ஹூசைன் , நவாஸ் ஆகியோர்களும், பொது வேட்பாளர்களாக நியமிக்கப்படக்கூடும் என கூறப்படும் சீனா. தானா, நல்ல முகம்மது களஞ்சியம், உமர் ஆகியோர்களோ அல்லது வேறு எவருமோ , வெற்றிபெற்ற பின் கீழக்கரையை நூறு சதவீதம் சுகாதார செழுமை கொண்ட நகராக மாற்ற முயற்சிக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.
ஒரு வேளை கீழக்கரை சேர்மன் பதவி மகளிருக்கு ஒதுக்கப்பட்டால் “ 15 வருடங்களாக மருத்துவ சேவையில் தன்னை ஈடுபடுத்தி, சமூக நலனில் அக்கரை கொண்டவரும், சுகாதார கேட்டினை சீர்படுத்தை, கீழக்கரையை நோயற்ற நகராக மாற்ற விரும்புவதையே தன் வாழ் நாள் குறி கோளாய் கொண்டவரும், கிழக்கு தெருவை சார்ந்த மறைந்த வக்கீல் அபுல்ஹசன் அவர்களின் மகளுமான மருத்துவர் அல் அம்ராவை பொது வேட்பாளாராக நிறுத்துவதே சாலச் சிறந்த்தாக சமூக நல விரும்பிகள் கருதுகிறார்கள்.




0 மறு மொழி கள்:
Post a Comment