30 Oct 2011

நினைவஞ்சலி - ஆட்டோடெக் முகைதீன்




மலர்ந்தது : 29 மே 1970 உதிர்ந்தது : 04 நவம்பர் 2003
                        
                        
நொடிப் பொழுதில் பறந்து விட்ட
 எட்டு ஆண்டுகள்,
ஓரு மாயயை போல் நடந்துவிட்ட
 சத்திரக்குடி சம்பவம்,
மறக்க நினைக்கும் மனம்,
மறக்கவிடாமல் அவ்வப்பொழுது
எழும் சிந்தனை,

33 வயதில் உன்னை மாய்த்த மரணம்
பெரு வாழ்வு வாழ
அள்ளிக் கொண்டுவிட்டதோ!

அண்டவெளியே இருண்டுவிட்டதாய்
உணர்ந்த நீ மறைந்த தினத்தை
கண்டு இன்னும் அஞ்சி நடுங்குகிறேன்.
ஆளப்பிறந்த உன்னை
மாளக் கொடுத்த நாளல்லவா அது....

எங்கள் நெஞ்சில் உரமேற்றி
மன்னுக்கு உரமாகியவனே....
உன் ஆளுமையும், திறனும்
 எங்களின் செயலிலும்,
சொல்லிலும் நாங்கள் இருக்கும் வரை
இப்புவியில் இருக்கும் நன்பனே....

3 மறு மொழி கள்:

ஸாதிகா said...

உங்கள் உயிர் நண்பர் முகைதீனின் மரணம் இன்னும் கூட ஜீரணிக்க முடியாத ஒன்று.அன்னாரின் மஃபிரத்துக்காக நானும் துஆ செய்கிறேன்.

ஸாதிகா said...

சோனகன் said...
தமிழ் நாள், மாத, வார இதழ்களின் நினைவில் நீங்கா கேரக்டர்கள் பற்றிய மீள் பதிவிற்கு நன்றி....இது போல் 80து களின் நாவல் மற்றும் காமிக்ஸ் கதாபாத்திரம் பற்றிய பதிவுகளையும் தங்களிடம் எதிர்பார்க்கிறோம்!
October 18, 2009 3:48 AM//அன்றைய தங்களின் எதிர்பார்ப்பு இன்று நிறைவேற்றப்படுகின்றது.http://shadiqah.blogspot.com/2009/10/blog-post_402.html

படித்து விட்டு கருத்தை பகிருங்கள்!

Shafeeq said...

We Miss you a lot!!!! Let us pray to Almighty Allah for his maghfirath (Jannathul Firdous)

Post a Comment