

வளைகுடா நாடுகளில் வசிப்பவர்களின் சுவாசமாக விளங்கும் சங்கிலித் தொடர் சூப்பர் மார்க்கெட்தான் "லூலூ " இதன் வாசல் மிதிக்காதவர்கள் இந்த பிரதேசத்தில் எவருமே இருக்க முடியாது. எம். கே குழுமத்திற்கு சொந்தாமான இந்த நிறுவணத்தின் மிக குறுகிய கால அபார வளர்ச்சிக்கு வித்திட்டவர்தான் எம்.கே குழுமங்களின் மேலாண்மை நிர்வாகி 54 வயதான யூசுப் அலி, தென்னின்ந்தியாவின் , கேரள மாநிலத்தில், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமமான நட்டிகாலில் 1958 ஆம் ஆன்டு பிறந்த யூசுப் அலி தனது 15 ஆவது வயதில், 1973 ஆம் வருடம் ஒரு சூட்கேசும், கையில் கொஞம் தொகையுமாக மும்பையில் இருந்து கடல் மார்க்கமாக துபாய் துறைமுகம் வந்து இறங்கினார்.
முப்பது வருடங்களுக்குள் 15000 கோடி ருபாய்க்கு சொந்மான எம். கே தொழிழ் குழுமத்தின் சூத்திரதாரியான வரலாறு ஒரு நெடும் கதை, தன்னை துபாய் துறைமுகத்திலிருந்து அழைத்து செல்ல வந்த தனது பெரிய தந்தையான எம். கே அப்துல்லவுடன் 5 மணி நேர பயணத்திற்கு பின் அபுதாபி வந்து சேர்ந்த யூசிப் அலி, பின் அவருடன் இணனைந்து அவரின் சிறிய மளிகை கடையில் அவருக்கு உதவியாக சில காலம் பொருட்களை ஏற்றி, இறக்குவது, வினியோகம் செய்வது என வேலைகள் என இருந்தவர், பதனப்படுத்தப்ப்ட உணவுப் பொருட்களை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து அபுதாபி நகரம் மட்டுமல்லாமல் புற நகர் பகுதி, மேற்கு அபுதாபி அமீரகத்திலும் வினியோகம் செய்ய ஆரம்பித்து 25 ஆயிரம் பணியாளர்கள் பணி புரியும் மாபெரும் தொழில் பேரரசின் வளர்ச்சிக்கு வித்திட்டார்.
சில காலங்களில் இவரது தொழில் இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்தது, உணவு பொருட்களை கப்பல், நட்சத்திர விடுதிகள், கேட்டரிங் கம்பெனிகள் என பல்வேறு துறைகளுக்கு வினியோகம் செய்து, தனது மூலதனத்கை பல மடங்குகள் பெருக்க ஆரம்பித்தது. 1980 களில் அமீரகத்தின் சில்ல்றை வணிகத்தின் கணிசமான பங்கு இவரது நிறுவனத்தை சார்ந்தாக கருதப்பட்டது. தனது பெரிய தந்தையின் ஓய்விற்கு பிறகு இதன் நிர்வாகம் இவர் வசம் வரும்பொழுது, தனது கணவுகளின் கோட்டைகான ஆயத்த வேலைகளை தொலை தூர நம்பிக்கை பார்வையுடன் தொடங்கினார். இவரது இத்தகைய நம்பிக்கைக்கு காரணமாக இவர் சொல்வது மறைந்த தலைவர் சேக் சயித் பின் அல் நக்யான் அவர்களின் "எதிர்காலத்த நோக்கிய வீரப்பயனம்" என்ற கொள்கையை பின்பற்றியதுதான். 1990கலீள் வளைகுடா போர்க்காலங்கள் இவரது பொற்காலங்கள் என கொள்ளலாம், அசாதாரணமான காலகட்டத்தை சரியான காலமாக திட்டமிட்ட்டது மிகப் பெரும் விந்தை ஆம் இவரின் சூப்பர் மார்கட்களும்,டிபார்ட்மென்ட் ஸ்டோர்களும் இந்த காலத்தில்தான் தொடஙகப்பட்டது.
இறைவனின் அருளால் இதன் வளர்ச்சி உச்சானிக்கு போய் இதன் மகுடமாக 2000 ஆம் ஆண்டு லூலூ சூப்பர் மார்கட் முதன் முதலில் துபாய் அல்கோசில் தொடங்கப்பட்டது, துருக்கியின் ராம் ஸ்டோர் போன்ற அமைப்பில் உருவான இந்த லூலூ மீண்டும் அசுர வளர்ச்சி பெற்று 8 வருடங்களில் 75 கிளைகள் தொடங்கப்பட்டது, அமீரகம் மட்டும் அல்லாமல், கத்தார், பஹ்ரைன், சௌதி அரேபியா,ஏமன், எகிப்த்,குவைத் இந்தியா என இதன் சாம்ராஜ்யம் விரிந்து கொண்டேபோகிறது, போர், பொருளாதார சீரழிவு, சந்தை ஏற்ற இறக்கம் என எந்த விளைவுகளும் இவரின் கோட்டையை அசைத்தூபார்க்க முடியவில்லை, அதற்கு காரணமாக இவர் சொல்வது,இறைவணின் அருளும், எதிர் நீச்சல் போடும் குணமும், அடிப்படை திடதண்மையும்தான்.
கொச்சின் விமானத்தளத்தின் விரிவாக பணியில் இவரது பங்கு கணிசமானது, இந்திய பொருளாதாரதை நோக்கி திரும்பும் இவர் பார்வை ஒரு பொருளாதார மலர்ச்சிக்கு வித்தாக மாறலாம். இவரின் சேவையை பாராட்டி அபுதாபி சேம்பர் ஆப் காமர்ஸ் இவரை அதன் இயக்குனர்களில் ஒருவராக நியமித்து இருக்கிறது, ஒரு வெளி நாட்டு வாழ் இந்தியரை இவ்வாறு அங்கீகாரத்தது இதுவே முதல் முறை. எல்லைகள் தாணடும் இவரது தொழில் வளச்சி மற்றும் சமூக பணியை பாராட்டி இந்திய அரசு இவருக்கு "பதம்ஷ்ரி" விருதை வழங்கி இந்த ஆண்டு கௌரவித்து இருக்கிறது, விண்ணை முட்டும் இவர் வளர்ச்சிக்கு இன்னும் எத்தனை விருதுகள் காத்துக் கொண்டிருக்கிறதோ?
ஆமாமா... குவைத்திலும் லூலூ ஹைபர் மார்கட் மிகப்பிரமாண்டமாய் இருக்கிறது. கடின உழைப்பால் உயர்ந்த ஒருவர் என்பது மறுக்க முடியாதது.
ReplyDeleteவருகைக்கு நன்றி, உழைப்பின் உண்ணததைப் போற்றவே இந்த பதிவு
ReplyDeleteவிடா முயற்சியும்,எதிர் நீச்சல் போடும் உத்வேகமும் கூடவே இறைவனின் அருளும் தான் லூலூ யூசுப் அலியின் இமாலய வளர்ர்ச்சிக்கு அடித்தள்ம்.மேலு பத்ம ஸ்ரீ விருது கிடைத்து நமக்கும் ஒரு பெருமைதான்
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ். ஒரு இந்திய முஸ்லிம் தனது உழைப்பால் உயர்ந்தார் என்றார் உண்மையிலே நாம் இந்தியர் என்ற முறையிலும் ஒரு முஸ்லிம் என்ற முறையிலும் பெருமைப்பட வேண்டும். யூஸுஃப் அலி அவர்களைப் போல் ஈடிஏ அஸ்கான ஸ்டார் நிறுவனர் ஜனாப்.பி.எஸ்.ஏ.ரஹ்மான், மேலாண்மை இயக்குநர் ஜனாப்.ஸலாஹீதீன் ஆகியோரும் உண்மையிலே பெருமைப்பட தக்கவர்கள்.
ReplyDeleteயூஸுப் அலி அவர்களை கொண்டு கேரள முஸ்லிம்கள் பயன் பெறுவது போல், இந்த இரண்டு தொழில் அதிபர்களை கொண்டு தமிழகத்தின் ஏராளமான முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத மக்கள் வாழ்க்கை வளம் பெற்றுள்ளது. அல்லாஹ் அவர்களுக்கு அருள் செய்யட்டும். இவர்களுக்கு தமிழக அரசு விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்.
அல்ஹம்துலில்லாஹ். ஒரு இந்திய முஸ்லிம் தனது உழைப்பால் உயர்ந்தார் என்றார் உண்மையிலே நாம் இந்தியர் என்ற முறையிலும் ஒரு முஸ்லிம் என்ற முறையிலும் பெருமைப்பட வேண்டும். யூஸுஃப் அலி அவர்களைப் போல் ஈடிஏ அஸ்கான ஸ்டார் நிறுவனர் ஜனாப்.பி.எஸ்.ஏ.ரஹ்மான், மேலாண்மை இயக்குநர் ஜனாப்.ஸலாஹீதீன் ஆகியோரும் உண்மையிலே பெருமைப்பட தக்கவர்கள்.
ReplyDeleteயூஸுப் அலி அவர்களை கொண்டு கேரள முஸ்லிம்கள் பயன் பெறுவது போல், இந்த இரண்டு தொழில் அதிபர்களை கொண்டு தமிழகத்தின் ஏராளமான முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத மக்கள் வாழ்க்கை வளம் பெற்றுள்ளது. அல்லாஹ் அவர்களுக்கு அருள் செய்யட்டும். இவர்களுக்கு தமிழக அரசு விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்.
தமீம், தங்களின் வருகைக்கு நன்றி, அடிப்படை உறுதியுடன் இருந்தால் அது கட்டிடமோ ,வியாபாரமோ எதுவுமே வள நிலை பெறும் என்பது திண்ணம்.
ReplyDeleteஜமீல் காக்கா மற்றும் கீழக்கரை அஞ்சல், தங்களின் வருகைக்கும், மறுமொழிகளுக்கும் நன்றி, உழைப்புடனகூடிய தூரப் பார்வையும், முயற்சியும், மன உறுதியும்தாம், மாபெரும் தொழி ராஜ்யங்களின் ஆணி வேர். அத்தகையோரில் ஒருவர்தான் லூலூ யூசுப் அலி. இது போல் தமிழக முஸ்லீம்கள் மட்டுமின்றி, அணைத்து இந்திய முஸ்லீம்களும் பயன்பெரும் வியாபார குழுமங்களான ஈ.டி.ஏ அஸ்கான்,ஸ்டார் ஆகியவற்றின் நிறுவனர் மற்றும் மேலான்மை நிர்வாகிகளான வள்ளல் பி.எஸ். ஏ மற்றும் ஜனாப் செய்யது எம். சலா-ஹுதீன் ஆகியோர் இந்த நூற்றாண்டுகளில் மிகப்பெரும் சாதனையாளர்கள் என்பது உண்மை. இவர்களின் சேவைகளை உரிய முறையில் இந்திய அரசிடம் முன்னெடுத்து சொல்லும் கடமை நம் சமூகத்துக்கு இருக்கிறது, இவர்களின் அளப்பரிய பங்களிப்பை அங்கீகரிக்கும் கடமை இந்திய அரசுக்கும் இருக்கிறது.
ReplyDeleteஜமீல் காக்கா மற்றும் கீழக்கரை அஞ்சல், தங்களின் வருகைக்கும், மறுமொழிகளுக்கும் நன்றி, உழைப்புடனகூடிய தூரப் பார்வையும், முயற்சியும், மன உறுதியும்தாம், மாபெரும் தொழி ராஜ்யங்களின் ஆணி வேர். அத்தகையோரில் ஒருவர்தான் லூலூ யூசுப் அலி. இது போல் தமிழக முஸ்லீம்கள் மட்டுமின்றி, அணைத்து இந்திய முஸ்லீம்களும் பயன்பெரும் வியாபார குழுமங்களான ஈ.டி.ஏ அஸ்கான்,ஸ்டார் ஆகியவற்றின் நிறுவனர் மற்றும் மேலான்மை நிர்வாகிகளான வள்ளல் பி.எஸ். ஏ மற்றும் ஜனாப் செய்யது எம். சலா-ஹுதீன் ஆகியோர் இந்த நூற்றாண்டுகளில் மிகப்பெரும் சாதனையாளர்கள் என்பது உண்மை. இவர்களின் சேவைகளை உரிய முறையில் இந்திய அரசிடம் முன்னெடுத்து சொல்லும் கடமை நம் சமூகத்துக்கு இருக்கிறது, இவர்களின் அளப்பரிய பங்களிப்பை அங்கீகரிக்கும் கடமை இந்திய அரசுக்கும் இருக்கிறது.
ReplyDeleteலூலூ செண்டரைப்பற்றித்தெரியும்.அதன் நிறுவனர் லூலூ யுஸுப் அலியைப்பற்றிய தகவல் புதிது.இந்தியர்,இஸ்லாமியர் என்பதில் நமக்கும் பெருமை இருக்கின்றது.
ReplyDeleteகீழை அஞ்சல் சொல்வதைப்போல் ஈ டி ஏ குழுமத்தை சேர்ந்த பி எஸ் ஏ,காக்கா,சலாஹுதீன் காக்கா ஆகியோரும் பல,பல இந்திய ,ஏனைய நாட்டு மக்களுக்கு ஆற்றி வரும் அரும் பணி,அதன் மூலம் லட்சகணக்கான குடும்ப்ங்கள் பயன் பெறுவது,அவ்விருவரின் இமாலய சாதனைகளுக்கு கண்டிப்பாக இந்த விருதுகள் கிடைத்தே ஆக வேண்டும்.அந்த நாளுக்காக காத்திருக்கின்றோம்.
தங்களின் வருகைக்கும், ஆழ்ந்த கருத்துக்களுக்கும் நன்றி
ReplyDeletehttp://shadiqah.blogspot.com/2009/11/blog-post_07.html
ReplyDeleteஇந்த லின்க்கை பார்க்கவும்
அன்புடன் சோனகன் அவர்களுக்கு உங்களது கீழை ஜமீலின் ஸலாமுடன் எழுதிக் கொண்டது. தாங்கள் எழுதிய இந்த ஆக்கத்தை நமது கீழக்கரை அஞ்சலின் நவம்பர் இதழில் வெளியிடுகிறேன்.
ReplyDeleteஇனிய கீழை ஜமீல் காக்கா அவர்களுக்கு, இந்த பதிவை கீழக்கரை அஞ்சலில் தாங்கள் வெளியிட இருப்பது என்னை மிகவும் ஊக்கமளிப்பதாக அமைகிறது. மிகவும் மகிழ்ச்சி, மிக்க நன்றி... அன்புடன் - சோனகன்
ReplyDelete