4 Aug 2008

கீழக்கரை சமூக பிரமுகர் எம்.கே.எஸ். ஷரீப் ஹாஜியார் மறைவு

இராமனாதபுரம் மாவட்டம், கீழக்கரையில், வள்ளல் சீதக்காதியினால் கட்டுமானம் செய்யப்பட்ட புகழ் மிகுந்த ஜும் ஆ பள்ளி அமைந்திருக்கும் நடுத்தெரு ஜமா அத்தின் முத்தவல்லியாக பத்து ஆண்டுகளாக சேவை செய்தவரும், கீழக்கரை அணைத்து ஜமா அத் கமிட்டியின் உப தலைவராக இருந்து சமூக நல்லிணக்கத்துக்காக பாடுபட்டவருமான எம்.கே.எஸ். ஷரீப் ஹாஜியார் அவர்கள் 03.08.2008, ஞாயிறு அன்று பிற்பகல் 2 மனி அளவில் காலமானார்கள்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். மறைந்த ஹாஜியார் அவர்கள் 1930 ஆம் ஆண்டு கீழக்கரையில் பிறந்து, இலங்கை தலை நகர் கொழும்புவில் 30 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தவர். இவர்களின் நல்லடக்கம் 04.08.2008 இன்று கீழக்கரை ஜும் ஆ பள்ளி மைய வாடியில் நடை பெறுகிறது.

7 Jul 2008

சமூக காவலர் கீழக்கரை எம்.எம்.கே - நினைவுகள்

நடை, உடை, பாவனைகளில் மிடுக்கும்,கம்பீர தோற்றமும்,அதீத அறிவுத்திறனும்,தெளிவான பேச்சுத்திறனும் ஒருங்கே பெற்ற திரு எம்.எம்.கே. முகம்மது இப்ராகீம் அவர்கள் 2008 ஜீன் மாதம் 11ஆம் தேதி காலமானார்கள். தமிழக அரசியலில் தீவிர ஈடுபாடு கொன்ட திரு எம்.எம்.கே அவர்கள் ஆரம்ப காலங்களில் இந்திரா காங்கிரஸ் கட்சியிலும், பின்பு புதிய தமிழம் கட்சியில் மா நில பொதுச் செயலாளராகவும், இறுதியில் அ.தி.மு.க விலும் இனைந்து பணி ஆற்றினார் வந்தார்கள். இவரின் இயல்பான தான் கொன்ட கொள்கையின் பிடிப்பு காரானமாக எந்த அரசியல் கட்சியிலும் நிலையாக நீடிக்கமுடியவில்லை. அஞ்சா நெஞ்சானானன இவரின் உறுதியான கருத்துக்களுடன் இவர் சார்ந்த கட்சிகளின் கொளகைகள் ஒத்துப்போகாத தன்மையயே இதற்கு காரனமாக எடுத்துக் கொள்ளலாம்.

1984ல் நடந்த சட்ட சபை தேர்தலில் கடலாடி தொகுதியில் சுயேச்சையாக களமிறங்கி சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை நழுவ விட்டாலும், தான் சார்ந்த சமூகத்தின் போர் படை தளபதியாகவே தனது இறுதி மூச்சு வரை விளங்கினார். கீழக்கரை சார்ந்த பகுதிகளின் சமூக நால்லிணக்கத்திற்காக பெரிதும் பாடுவட்டவர். புற தோற்றத்தில் கரடு முரடாக தெரிந்தாலும், வெள்ளை அகத்தினர். அவர் இறுதிவரை அணிந்து வந்த ஆடை போன்றே. கீழக்கரை தெற்குத்தெரு இஸ்லாமியா உயர் நிலை, மற்றும்,மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் நிரவாகியாக பல காலம் பனிபுரிந்து, அந்தா கல்வி ஸ்தாபனங்களின் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டவர். கடந்த உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலாராக வெற்றிபெற்று சமூக பணி பலவும் ஆற்றிவந்தவர், இன்று நம்மிடம் இல்லை.

வள்ளல்களுக்கும், பெரும் தொழில் வணிகர்களுக்கும், ஆண்மீக குருக்களுக்கும் பெயர் பெற்ற கீழக்கரை சமூகத்தின் காவலனாக திகழ்ந்த திரு எம். எம். கே அவர்களின் மரனத்தால் கீழக்கரை சமூகம் தனது பாதுகாப்பு கேடயத்தினை இழந்து தவிக்கிறது............

11 Jun 2008

கீழக்கரை சமூக பிரமுகர் எம்.எம்.கே மறைவு

இராமனாதபுரம் மாவட்டம், கீழக்கரையை சேர்ந்த சமூக பிரமுகரும், கல்வி சேவகரும், இந்த பகுதியின் நலன்களுக்கு பெரிதும் உழைத்தவரான எம். எம். கே என்று அழைக்கப்பட்ட திரு முகம்மது இபுராகீம் அவர்கள் இன்று 11.06.2008 காலை 6 மணி அளவில் காலமானார்

31 Jan 2008

சமுதாய செம்மல் கீழக்கரை எஸ்.எம்.ஏ பஷீர் முகைதீன் - இரன்டாம் ஆண்டு நினைவஞ்சலி


தென் தமிழக கட்லோர மாவட்டமான இராமனாதபுரம் பகுதியில் எஸ்.எம்.ஏ என அறியப்பட்ட பஷீர் முகைதீன் அவர்கள் காலமாகி இரண்டு வருடங்கள் நிறைவு பெறும் நிலையில் அவர் சார்ந்த சமூகம் மற்றும் பகுதி மக்கள் அவரை நினைவு கூறும் முகமாக அவரை பற்றிய சிறு குறிப்புகள்:

பஷீர் முகைதீன் அவர்கள் தமிழக தென் பகுதி கடலோரப் புரதான பகுதியான கீழக்கரையில் 1945 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் நாள் பிறந்தார். தனது ஆரம்ப கால பள்ளிப் படிப்பினை இலங்கை தலை நகர் கொழும்புவிலும், பின் இந்தியாவில் இராமனாதபுரம் இராஜா உயர் நிலை பாடசாலையிலும்,தொடர்ந்து திருச்சி பிஷப் கேபர் பள்ளியிலும் தனது இள் நிலை அறிவியல் (இயற்பியல்) பட்டப்படிப்பினை புகழ் பெற்ற சென்னை கிருஷ்துவ கல்லூரியிலும் படித்தவர்.

பாரம்பரியமிக்க கீழக்கரை எஸ்.வி.எம். குடும்பத்தில் பிறந்த இவர் தனது இளமை முதல் கடல் வாழ் உயிரினங்களின் மீது அளவில்லாத ஈடுபாடு கொண்டு அதனை பற்றிய ஆராய்ச்சியினில் சிறப்பு நிபுனத்துவம் கொண்டிருந்தார். தங்களது முன்னோர்களின் தொழிலான முத்து சிலாபம் மற்றும் சங்கு குளித் தொழிலில் ஈடுபட்டு திறனுடன் சிறப்பாக நிர்வாகித்து வந்தார். எவ்வளவு அறியவகை கடல் வாழ் உயிரினத்தையும் பார்த்த மாத்திரத்தில் அடயாளம் கண்டு அதன் விபரங்களை சொல்வதில் அவருக்கு நிகர் அப்பகுதியில் எவரும் இல்லை என்பது தின்னம்.

இத்த்கைய தொழிலில் தொடர்புடைய ஐரோப்பிய மற்றும் கீழ்திசை நாடுகளை சார்ந்த வர்த்தகர்கள் இவருடன் கல்ந்துரையாட அவ்வப்பொழுது கீழக்கரைக்கு விஜயம் செய்வதை இப்பகுதி மக்கள் இன்றும் நிணவு கூறுவது இவரின் சிறப்புக்கு எடுத்துக்காட்டு.
சமுதாய பனிகளில் தீராததாகம் கொன்ட பஷீர் முகைதீன் அவர்கள் அனைத்து அரசியல் கட்சியுனுடனும், சமுதய மக்களினுடனும் நல்லிணக்கம் கொன்டிருத்தார். சமூக நல்லினக்கத்தை இவர் கீழக்கரையில் ஏற்படுத்துவதில் தனது இறுதி காலம் வரை பெறும் முயற்சியில் ஈடுபட்டது இன்றும் போற்றத்தகதாக கருதப்ப்டுகிறது.

"கிட்டங்கி"என அழைக்கப்படும் இவரது அலுவலகத்தில் சமூகத்தில் ஏற்படும் கடும் சிக்கலான விவகாரங்களுக்கு தனது எதார்த்தமான அணுகு முறையாலும் மற்றும் சட்டரீதியான அனவரும் ஏற்கக்கூடிய தீர்வை சொல்லுவதிலும் இவர் திறன் பெற்றிருந்தது இப் பகுதியினருக்கு மிகவும் உத்வியாக இருந்தது உண்மை. தெளிவாக விபரங்களை உணர்ந்து கொள்ளுவதும், விழிப்புடன் அதனை ஆராய்வதிலும்,சரியான முடிவெடுப்பதிலும், சாதக பாதகங்களை அறிந்திருத்தலிலும் சிறப்பு நிபுனத்துவம் கொன்ட ஒரு மேலான்மை தத்துவத்தின் மொத்த உருவம்தான் பஷீர் முகதீன் அவர்கள். தூய பழக்க வழக்கமும், எளிமையான வெண்ணிற ஆடை அனிவதும், நேர ஒழுங்கு முறை கடப்பிடித்தலும், அயராத உழைப்பும்,கோபமில்லாத்தன்மையும்,சாந்த குனமும், அதிர்வில்லா பேச்சும்,தண்ணடக்கமும்,முதிர்ந்த அறிவுணர்வும்,ஆழ்ந்த சிந்தனையும் இவரின் சிறப்பு குணங்களாக அறியப்பட்டது.
பதவி ஆசை சிறிதும் இன்றி தன் வாழ்க்கையில் பயனித்த இவர் பல் வேறு சமூக நிறுவணங்களில் முக்கிய நிர்வாகியாக இருந்து கடமை ஆற்றியது கீழக்கரை சமுதாய பிரமுகர்கள், மற்றும் அரசியல் பிரமுகர்களால் இன்றும் நினைவு கூறப்படுகிறது. 2000 ஆம் ஆன்டு நடைபெற்ற சீதக்கதி நினவு நாள் விழாவினை திறம் பட நடத்திவைத்த செயலின் முழு உள்செயல்லாக்க வேலையினை சீதக்காதி, மற்றும், சதக் அறக்கட்டளை நிர்வாகிகள் முழுதும் அறிவர்.

சதக்கத்துன் ஜாரியா நடு நிலைப்பள்ளியின் தாளாளராக 1975 முதல் தனது இறுதி காலம் வரை கிட்டட்தட்ட 30 ஆன்டுகாலம் திறம் பட நிருவகித்தார்கள். தனது பணி காலத்தில் மானவர்களின் நலனில் பெரிதும் கவனம் செலுத்தி செய்த சேவைகளயும், கீழக்கரை நகராட்சியின் செயல்பாடுகளில் தனிகவனம் செலுத்தி மக்க்ளின் அரனாக நின்றதையும் யாவரும் அறிவர்.

கீழக்கரை பைத்துல்மாலின் நிறுவன நிர்வாகிகளின் ஒருவரான இவர் அதன் உப தலைவராக தனது இறுதி காலம் வரை தொடர்ந்தார்.கீழக்கரை அணைத்து ஜமாத் கூட்ட்மைப்பின் பொருளாளராகவும்,மற்றும் இராம நாதபுரம் தமிழ் சங்கத்தின் முக்கிய பிரமுகராகவும் இவர் செய்த சேவைகள் காலத்தில் அழியாதது.இவரின் செய்த சேவைகள் சில எல்லைகள் கடந்தது, பிரமிக்கதக்கது.
2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏற்பட்ட சுகக்குறைவால் உடல் அவயங்களில் ஏற்பட்ட பாதிப்புகளினாலும் மருத்துவ பராமரிப்பில் இருந்த சமுதாய செம்மல் பஷீர் முகைதீன் அவர்கள் 2006, பிப்ரவரி மாதம் 2 ஆம் நாள், வியாழன் அன்று பகல் 11.35 மனியளவில் மதுரை அப்போலோ மருத்துவம்னையில் கால்மானார்கள். அண்ணாரின் உடல் பிப்ரவரி 3 ஆம் நாள் கீழக்கரை, நடுத்தெரு, ஜும்மாப்பள்ளி மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது