23 Aug 2010

வட்டார வைத்தியர் -மறைந்த டாக்டர் காசிராஜன்

கீழக்கரை மக்களுக்கும் வைத்தியத்துக்கும் உள்ள தொடர்பு பிரிக்க முடியாத விஷயம் என யாவரும் அறிந்ததே.

" உலகில் உள்ள எல்லா நோய்களுக்கும் ஒரே மருந்து பலம் மட்டுமே. எப்போதெல்லாம் கொடுமைகளுக்கு உட்படுகிறாமோ, அப்போதெல்லாம் மனபலம் நமக்கு அதிகம் தேவைப்படும். என விவேகானந்தரின் கூற்றை அறிந்தோ, அறியாமலோ கீழக்கரை மக்கள் பொருந்தி கொன்டார்கள். மலேரியா, டபுள் மலேரியா!, சிக்கன் குனியா, என உள்ளூரில் வசிக்கும் மக்களை மட்டுமின்றி, துபாயில் இருந்து லீவுக்கு ஊருக்கு போகும் சபராளிகளையும் ஒரு கை பார்க்காமல் ஓய்வதில்லை. நகராட்சியும், வெல்பேர் சங்கமும், உள்ளூர் வைத்த்தியர்களும் போராடி, போராடி அலுத்து போய், இந்த கொடிய நோய்கள் ரெம்ப சாதாரணமான விஷயாமாகி விட்டது.

1940 களில் இருந்து 1980கள் வரை, காலராவும், பெரியமமை நோயும் மாறி மாறி வந்து நூற்றுக்கணக்கான மக்களை காவு கொண்டது, எனது பள்ளி பருவத்தில் காலராவுக்கு ஊசி போட மருத்துவர்களும், நர்ஸ்களும் பள்ளிக்கு வரும் பொழுது பள்ளியே பயந்து ஒடுங்கும், ஊசி போட்ட பின் இரவில் சுடு தன்னிவைத்து ஒத்து கொடுத்தால்தான் வலி தீரும்.

இது போன்ற வலிகளே காலரா நோய்க்கு எமனாகி காலராவை இல்லாமல் ஆக்கியது. அப்படியும் யாராவதும் ஒரு குழந்தை காலாராவில் பீடிக்கப்பட்டால் இராமனாதபுரம் குழந்தை டாகடர் காசிராஜனை தவிர வேறு யாராலும்காப்பாற்ற முடியாது,  ஆபத்பாந்தாவனான இவர் கொஞம் முன் கோபியானலும் இவரால் உயிர் பிழைத்த மழலைகள் ஏராளம், ஒவ்வொரு முறையும் இராம நாதபுரம் கேனிக்கரை செல்லும் பொழுதும் மறைந்த டாக்டர் காசிராஜன் நினைவுகளில் என் மனம் சில கனங்கள் மூழ்கும்.

8 Nov 2009

பிடித்த பத்து ..பிடிக்காத பத்து..

இத்தொடரை எழுத அழைத்த சகோதரி ஸாதிக்கா அவர்களுக்கு நன்றி

ஹோட்டல்
---------------
பிடித்த இடம் – அமராவதி
பிடிக்காத இடம் - சரவண பவன்

அரசியல்வாதி
***************
பிடித்தவர் - நல்லகண்ணு (எளிமையே உருவானவர்)
பிடிக்காதவர் – ராமதாசு (கொள்கை பிடிப்பற்றவர்)
நடிகை
********
பிடித்தவர் -மீரா ஜாஸ்மின்
பிடிக்காதவர் - நமிதா

எழுத்தாளர்***********
பிடித்த எழுத்தாளர் - சாரு
பிடிக்காத எழுத்தாளர் - சோ
பாடகி
********
பிடித்தபாடகி - ஸ்வர்னலதா
பிடிக்காத பாடகி - சித்ரா
பிடித்த தினசரி
*******
பிடித்த தினசரி - தின தந்தி
பிடிக்காத தினசரி - தின மலர்

இனிப்பு
**
பிடித்தது - மைசூர்பாக்
பிடிக்காதது - ஜிலேபி

சுற்றுலாதலம்
***************
பிடித்தது - மூனாறு
பிடிக்காதது - கொடைக்கானல்

பென் கவிஞர்
------------------
பிடித்தவர் – தாமரை
பிடிக்காதவர் - சல்மா

வாகனம்
பிடித்த வாகனம் : ரயில்
பிடிக்காத வாகனம் : பேருந்து

இத் தொடர் இடுகையின் விதிகள்:

1. நமக்கு பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக (பிராபளமாகக்கூட) இருக்க வேண்டும்
2. இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க வேண்டும்
3. ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்

நான் அழைக்கும் பதிவர்கள்.


பீர்
ஜோகன் பாரிஸ்
மோன்க்

கீழை முதல் ஹாங்காங்க் வரை


வள்ளல் பி.எஸ்.ஏ அவர்களின் இளமை வாழ்க்கை பற்றிய சில குறிப்புகள் .....
“விளையும் பயிர் முளையிலே தெரியும்” என்பது தமிழ் முதுமொழி, எல்லா குழந்தைகளும் ஒன்று போல் இருப்பதில்லை, அது போல் செம்மல்களின் அடயாளம் பருவம் எட்டும் முன்பே தெரியும் அப்படியான ஒருவர்தான் வள்ளல் பி. எஸ்.ஏ , தனது பத்தாவது வயதிலேயே தனது இலட்சியங்களின் வழியில் பயணம் செய்ய மிகப் பெரும் கனவு கண்டவர். அக்கலத்தில் கீழக்கரை சமுதாயத்தில் பள்ளிக்கூடம் செல்லாத மாணவர்களை வீடு தேடி சென்று பள்ளி செல்ல வழியுறுத்தும் இயக்கத்தினை தனது நண்பர்களுடன் இனைந்து தலமையேற்று நடத்தியவர்.
தனது ஐந்தாம் வகுப்பு பள்ளி படிப்பினை கீழக்கரை ஹமீதியா பள்ளியில் முடித்த பின், இராமனாதபுரத்தில் கிருஷ்துவ மிஷனரிகளால் நடத்தப்படும் புகழ் பெற்ற சுவாட்ஸ் பள்ளியில் இனைந்தார், முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் இப் பள்ளியின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காலக்கட்டத்தில் இவருக்குள் எழும் கேள்விகள் ஏன் இது போன்ற தரமான பள்ளிகள் கிராமப் பகுதிகளில் குறைவாக அமையப்பெற்றுள்ளது? இதற்கான விடிவுதான் என்ன?
பி.எஸ்.ஏ. அவர்கள் தனது இளவயதிலேயே பனத்தின் மதிப்பினையும், பண்டங்கள் மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்களயும் உணர்ந்தவரானார். தனது சம வயது மாணவர்களில் சிலர் தேவையான தின்பண்டங்கள் வாங்க போதுமான பணம் வைத்திருப்பதையும், மேலும் சிலர் தின்பணடங்களே வாங்க பணமில்லாமல் வேடிக்கை பார்ப்பதையும் அறிந்து இந்த ஏற்றதாழ்வுகளுக்கு முடிவு கட்ட தனது நண்பர்களுடன் இனைந்து தின்பணடங்களை குறைந்த விலையில் மொத்த கொள்முதல் செய்து பணக்கார மாணவர்க்ளுக்கு அதிக விலையில் விற்று அதன் மூலம் கிடைத்த இலாபத்தில் வசதி குறைந்த மாணவர்களுக்கு இலவசமாக வினியோகித்து தனது தொழில் கோட்பாட்டிற்கு முண்னுரை எழுதினார்
தனது எட்டாம் வகுப்பினை முடித்த காலத்தில், இவரின் தனியாத வியாபாரத் தாகம் இவரது பள்ளிப்படிப்பினை தொடர முடியாமல் தொந்தரவு செய்ய தனது தந்தையர் புஹாரி ஆலிம் அவர்களின் அணுமதி பெற்று , தனது 20 ஆவது வயதில் தனது கையில் வெறும் 149 இந்திய ரூபாயும், ஒரு சின்ன துனிப் பையுமாக கொழும்பு வந்து சேர்ந்தார், சோதனையான காலக்கட்டம்..., முதலில் இவரது அறையில் வசித்து வந்த வியாபாரிகளின் மனதை அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்வதன் மூலம் கவர்ந்தார். இதற்காக இரவு பகல் பாராமல் உழைத்தார்.

வைர வியாபாரியான் தனது தந்தையருடன் முன்பு பலமுறை வைர வியாபரத்திற்காக கொழும்பு வந்தவர் அவர், அதனால் இதே வியாபாரத்தினால் கவரப்பட்டு அதனை பற்றிய நுட்பத்தினை மெல்ல மெல்ல கற்று அறிந்த பின்னும் அவருடய பொருளாதார சூழ் நிலை தனியாக வியாபாரம் செய்ய அணுமதிக்காத நிலையில் காலம் கணியும் வரை சில காலம் கொழும்பு நகரிலேயே அமைதி காத்தார். ஆனால் தனது வியாபார தொடர்புகளை எல்லையில்லமல் வளர்த்து கொண்டும் இருந்தார். விரைவில் ஒரு நேரம் சாதகமாக வந்தது, தனது தொழிலை முதலில் ஹாங்காங்கில் தொடர்ந்தவர் பின்பு, ஜப்பான், இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் என கீழ்திசை நாடுகள் முழுவதும் பரந்து விரிந்தது, இதுவே வள்ளல் அவர்களின் வாழ்க்கையில் இனிமையான தருனமாக கொள்ளலாம், வைர வியாபாரத்தில் அதீத ஈடுபாடு கொண்டு மேலை நாடுகளான பெல்ஜியம், அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளிலும் தனது தொழிலரசின் எல்லைகளை விரிவுபடுத்தினார், 1950 களில் வைரத்தொழில் ஸ்தாபனத்தை ஹாங்காக் மற்றும் பெல்ஜியத்தில் நிறுவிய முதல் தென்னிந்தியர் இவர்தான் என்பது நாடறிந்த உண்மை.
மதி நுட்பமும், விவேகமும், நுண்ணிய நினைவாற்றலும் தாம் பி. எஸ்.ஏ அவர்களின் மூலதனமாக இருந்திருக்க முடியும், எதார்த்த தன்மையும், நகைசுவை உணர்வும் ஒருங்கே பெற்ற வள்ளல் அவர்கள் ஒருவரின் குறையை நேர்த்தியாக, நகைச்சுவையுடன் அந்த நபரின் எதிரிலேய சொல்லிவிடுவதில் அவருக்கு நிகர் எவருமே இல்லை எனலாம், வள்ளல் அவர்களை பற்றி முழு வாழ்க்கை வரலாறு நூல் வடிவத்தில் வந்துவிட்டது, இது அவரின் இளமை பற்றிய சிறு தொகுப்புதான், அவர்தம் சேவைகளும் இன்னும் அவர் தொழில் போல விரிந்து கொன்டேதான் போகிறது. கணக்கிலடங்கா குடும்பங்களின் ஒளி விளக்காகான வள்ளல் அவர்கள் நீடூழி வாழ வாழ்த்துவோமாக.........
நன்றி- திரு எம்.எம்.முகைதீன்

29 Oct 2009

லூலூ யூசுப்அலி - சில்லறை வணிக உலகின் முத்துவளைகுடா நாடுகளில் வசிப்பவர்களின் சுவாசமாக விளங்கும் சங்கிலித் தொடர் சூப்பர் மார்க்கெட்தான் "லூலூ " இதன் வாசல் மிதிக்காதவர்கள் இந்த பிரதேசத்தில் எவருமே இருக்க முடியாது. எம். கே குழுமத்திற்கு சொந்தாமான இந்த நிறுவணத்தின் மிக குறுகிய கால அபார வளர்ச்சிக்கு வித்திட்டவர்தான் எம்.கே குழுமங்களின் மேலாண்மை நிர்வாகி 54 வயதான யூசுப் அலி, தென்னின்ந்தியாவின் , கேரள மாநிலத்தில், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமமான நட்டிகாலில் 1958 ஆம் ஆன்டு பிறந்த யூசுப் அலி தனது 15 ஆவது வயதில், 1973 ஆம் வருடம் ஒரு சூட்கேசும், கையில் கொஞம் தொகையுமாக மும்பையில் இருந்து கடல் மார்க்கமாக துபாய் துறைமுகம் வந்து இறங்கினார்.

முப்பது வருடங்களுக்குள் 15000 கோடி ருபாய்க்கு சொந்மான எம். கே தொழிழ் குழுமத்தின் சூத்திரதாரியான வரலாறு ஒரு நெடும் கதை, தன்னை துபாய் துறைமுகத்திலிருந்து அழைத்து செல்ல வந்த தனது பெரிய தந்தையான எம். கே அப்துல்லவுடன் 5 மணி நேர பயணத்திற்கு பின் அபுதாபி வந்து சேர்ந்த யூசிப் அலி, பின் அவருடன் இணனைந்து அவரின் சிறிய மளிகை கடையில் அவருக்கு உதவியாக சில காலம் பொருட்களை ஏற்றி, இறக்குவது, வினியோகம் செய்வது என வேலைகள் என இருந்தவர், பதனப்படுத்தப்ப்ட உணவுப் பொருட்களை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து அபுதாபி நகரம் மட்டுமல்லாமல் புற நகர் பகுதி, மேற்கு அபுதாபி அமீரகத்திலும் வினியோகம் செய்ய ஆரம்பித்து 25 ஆயிரம் பணியாளர்கள் பணி புரியும் மாபெரும் தொழில் பேரரசின் வளர்ச்சிக்கு வித்திட்டார்.

சில காலங்களில் இவரது தொழில் இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்தது, உணவு பொருட்களை கப்பல், நட்சத்திர விடுதிகள், கேட்டரிங் கம்பெனிகள் என பல்வேறு துறைகளுக்கு வினியோகம் செய்து, தனது மூலதனத்கை பல மடங்குகள் பெருக்க ஆரம்பித்தது. 1980 களில் அமீரகத்தின் சில்ல்றை வணிகத்தின் கணிசமான பங்கு இவரது நிறுவனத்தை சார்ந்தாக கருதப்பட்டது. தனது பெரிய தந்தையின் ஓய்விற்கு பிறகு இதன் நிர்வாகம் இவர் வசம் வரும்பொழுது, தனது கணவுகளின் கோட்டைகான ஆயத்த வேலைகளை தொலை தூர நம்பிக்கை பார்வையுடன் தொடங்கினார். இவரது இத்தகைய நம்பிக்கைக்கு காரணமாக இவர் சொல்வது மறைந்த தலைவர் சேக் சயித் பின் அல் நக்யான் அவர்களின் "எதிர்காலத்த நோக்கிய வீரப்பயனம்" என்ற கொள்கையை பின்பற்றியதுதான். 1990கலீள் வளைகுடா போர்க்காலங்கள் இவரது பொற்காலங்கள் என கொள்ளலாம், அசாதாரணமான காலகட்டத்தை சரியான காலமாக திட்டமிட்ட்டது மிகப் பெரும் விந்தை ஆம் இவரின் சூப்பர் மார்கட்களும்,டிபார்ட்மென்ட் ஸ்டோர்களும் இந்த காலத்தில்தான் தொடஙகப்பட்டது.

இறைவனின் அருளால் இதன் வளர்ச்சி உச்சானிக்கு போய் இதன் மகுடமாக 2000 ஆம் ஆண்டு லூலூ சூப்பர் மார்கட் முதன் முதலில் துபாய் அல்கோசில் தொடங்கப்பட்டது, துருக்கியின் ராம் ஸ்டோர் போன்ற அமைப்பில் உருவான இந்த லூலூ மீண்டும் அசுர வளர்ச்சி பெற்று 8 வருடங்களில் 75 கிளைகள் தொடங்கப்பட்டது, அமீரகம் மட்டும் அல்லாமல், கத்தார், பஹ்ரைன், சௌதி அரேபியா,ஏமன், எகிப்த்,குவைத் இந்தியா என இதன் சாம்ராஜ்யம் விரிந்து கொண்டேபோகிறது, போர், பொருளாதார சீரழிவு, சந்தை ஏற்ற இறக்கம் என எந்த விளைவுகளும் இவரின் கோட்டையை அசைத்தூபார்க்க முடியவில்லை, அதற்கு காரணமாக இவர் சொல்வது,இறைவணின் அருளும், எதிர் நீச்சல் போடும் குணமும், அடிப்படை திடதண்மையும்தான்.

கொச்சின் விமானத்தளத்தின் விரிவாக பணியில் இவரது பங்கு கணிசமானது, இந்திய பொருளாதாரதை நோக்கி திரும்பும் இவர் பார்வை ஒரு பொருளாதார மலர்ச்சிக்கு வித்தாக மாறலாம். இவரின் சேவையை பாராட்டி அபுதாபி சேம்பர் ஆப் காமர்ஸ் இவரை அதன் இயக்குனர்களில் ஒருவராக நியமித்து இருக்கிறது, ஒரு வெளி நாட்டு வாழ் இந்தியரை இவ்வாறு அங்கீகாரத்தது இதுவே முதல் முறை. எல்லைகள் தாணடும் இவரது தொழில் வளச்சி மற்றும் சமூக பணியை பாராட்டி இந்திய அரசு இவருக்கு "பதம்ஷ்ரி" விருதை வழங்கி இந்த ஆண்டு கௌரவித்து இருக்கிறது, விண்ணை முட்டும் இவர் வளர்ச்சிக்கு இன்னும் எத்தனை விருதுகள் காத்துக் கொண்டிருக்கிறதோ?

27 Oct 2009

தமிழ் முஸ்லிம்களின் பூர்வீகம்....


தமிழக முஸ்லிம் மக்களின் ஆரம்பகால குடியேற்றம் பற்றிய ஆய்வு குறித்து ஒரு கட்டுரை....


அரேபிய தாயகத்தில் வேரூன்றியிருந்த மடமைகளை மாய்த்து மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கிய இனியமார்க்கம் இஸ்லாம், கி.பி. ஏழாம் நூற்றாண்டில்தான் நம் தமிழகத்தில் தம் பொற்பாதங்களை மெல்லப் பதிக்கத் துவங்கியது.

சங்க காலம் முதல் தமிழகத்துடன் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர் அரபு நாட்டவர். தொடக்கத்தில் யவனர் என்று அழைக்கப்பட்டனர். பின்னர் இப்பெயர் மாறி முஸ்லிம்கள் என்றும், சோனகர், துலுக்கர் என்றும் அழைக்கப்பட்டனர். அவர்களது சிந்தனைகள், செயல்பாடுகள், வணக்க வழிபாடுகள் ஆகியவை தமிழ் மக்களைக் கவர்ந்தன. இனிய பேச்சும் இயல்பான வணிகத் தொடர்பும், சாதாரண மக்களை மட்டுமல்லாமல் சோழ – பாண்டிய மன்னர்களையும் கவர்ந்தன. இறைவன் ஒருவனே என நம்புதல், நாளொன்றுக்கு ஐந்து முறை இறைவனுக்கு வணக்கம் செலுத்துதல், ஆண்டுக்கு ஒரு திங்கள் உலக நலன் கருதி உண்ணா நோன்பிருத்தல், சாதி சமய பேதமின்றி அனைத்து மக்களையும் சகோதரர்களாகப் பாவித்து அன்பு செலுத்துதல் ஆகிய புதிய கோட்பாடுகள் தமிழக மக்களிடையே ஒரு புதிய சிந்தனையை ஏற்படுத்தின.

மதுரையம்பதியில் நின்றசீர் நெடுமாறன் என வழங்கப்பட்ட கூன் பாண்டியன், அரபு நாட்டு வணிகர்களுக்கு ஆதரவு வழங்கினான். மதுரையில் அவர்களது குடியிருப்பு அமைவதற்கு உதவினான். இதே போன்று சோழ நாட்டின் தலைநகரான உறையூரிலும் முஸ்லிம் வணிகர்கள் தங்குவதற்கு சோழ மன்னன் உதவினான். அவர்களது வழிபாட்டுத் தலம் ஒன்று உறையூரில் அமைவதற்கும் ஆதரவு நல்கினான். அந்தப் பள்ளிவாசல் (கி.பி.726) திருச்சி கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் இன்றும் இருக்கிறது.

இத்தகைய இஸ்லாமிய அரபு வணிகர்களது குடியிருப்புகள் சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் பல பகுதிகளில் எழுந்தன. அவை, அஞ்சுவண்ணம் என மக்களால் அழைக்கப்பட்டன. இந்த அஞ்சுவண்ணம் ஒன்று நாகப்பட்டினத்துக்கு அருகில் அமைந்திருந்ததை தனிப் பாடல் ஒன்றின் மூலம் தெரிந்துக்கொள்ள முடிகிறது.

பாண்டிய நாட்டின் தென்பகுதியான நாஞ்சில் நாட்டில் திருவிதாங்கோடு அருகில் அஞ்சுவண்ணம் என்ற பெயரிலேயே ஒரு சிற்றூர் இன்றும் நிலைத்திருக்கிறது. இந்தக் குடியிருப்புகளில் வாழ்ந்து வந்த அராபிய இஸ்லாமியர், நாளடைவில் வணிகத்துடன் மட்டுமல்லாமல் சமுதாய நிலைகளிலும் தங்களைத் தொடர்பு படுத்திக்கொண்டு கலந்து தமிழ் முஸ்லிம்கள் என்ற புதிய பெயரினைப் பெற்றனர்.

வாணிபத்திற்கு அவர்கள் பயன்படுத்திய வாய்மொழியான தமிழ், இப்போது அவர்தம் வழித்தோன்றல்களின் தாய் மொழியாக மாறியது. அதுவரை சோழ – பாண்டிய மன்னர்களால் மெய்க்கீர்த்திகளிலும், கல்வெட்டுகளிலும், சோனகர் – துலக்கர் எனக் குறிப்பிடப்பட்ட இந்த மேலைநாட்டு முஸ்லிம்கள், தமிழ் முஸ்லிம்கள் என்ற தகுதியையும், அரசியல் முதன்மையையும் எய்தினர்.

இந்தப் புதிய தமிழ்ச் சமுதாயத்தினரது அணிகலன்களும், ஆடைகளும், உணவு முறைகளும் தமிழ் மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. நாளடைவில் இந்தக் குடியிருப்புகளிலும், வணக்கத் தலங்களிலும் அமைக்கப்பட்ட கட்டுமானங்கள், குறிப்பாக மேற்கூரைகள், கும்ப அமைப்பில் அமைக்கப்பட்ட அலங்கார கோபுரங்கள், சாளரங்கள், முகப்பில் பயன்படுத்தப்பட்ட வில் வடிவ குதிரைக் குளம்பு அமைப்பு வளைவுகள் ஆகியவை திராவிட – இஸ்லாமிய கட்டுமானங்கள் என்ற புதிய பாணியை ஏற்படுத்தின.

தமிழகத்தில் ஏற்கனவே தழைத்து வளர்ந்து வந்த சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகிய சமயங்கள் போன்று இஸ்லாமும் தமிழகத்தில் சமயங்களில் ஒன்றாக நிலைபெற்றது. தமிழ் சமுதாயத்தில் தவிர்க்க முடியாத அங்கமாக தமிழ் முஸ்லிம்கள் அங்கீகரிக்கப்பட்டனர். இத்தகைய சமய நிலையும், நோக்கும் ஏற்படுவதற்கு, அன்று அரபகத்திலிருந்து தமிழகம் வந்த இஸ்லாமிய ஞானிகளே பெரிதும் உதவினர். இவர்கள் தங்களது அரிய வாழ்வினைத் தமிழ் மக்களின் சமூக ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் அர்ப்பணித்து வந்தனர்.

தமிழ் மக்களால் பெரிதும் போற்றப்பட்டு வந்த தமிழ்நாட்டு பதினெண் சித்தர்களைப் போன்று இந்த இஸ்லாமிய ஞானிகளின் ஆன்மீக உபதேசங்களும் தமிழ் மக்களால் மனமுவந்து ஏற்கப்பட்டன. இந்தப் பதினெண் சித்தர்களில் ஒருவரான சதுரகிரி மலையைச் சேர்ந்த இராமதேவர் இஸ்லாத்தை ஏற்று, புனித மக்கா சென்று திரும்பினார். தமது பெயரையும் யஃகூபு சித்தர் என மாற்றி அமைத்துக் கொண்டார்.

கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் சிரியா நாட்டிலிருந்து தமிழகம் வந்த இறைநேசர் நத்ஹர், காலமெல்லாம் திருச்சிப் பகுதி மக்களது ஆன்மீக வழிகாட்டியாக வாழ்ந்து, திருச்சியிலேயே இயற்கை எய்தினார். இவர்களை அடுத்து கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் அரபுநாட்டு மதீனா நகரிலிருந்து தென்பாண்டிய நாட்டிற்கு வந்த இறைநேசர் செய்யிது இபுறாஹீம், 12 ஆண்டுகளுக்கு மேலாகப் பாண்டிய நாட்டு மக்களது ஆன்மீக வழிகாட்டியாக அரிய உபதேசங்களைச் செய்து சேதுநாட்டு ஏர்வாடியில் கி.பி. 1195-ல் புகழுடம்பு பெற்றார்.

தமிழ் முஸ்லிம்கள் சிலர் அரசியலில் முதன்மையும், செல்வாக்கும் பெற்றிருந்தனர். சோனகன் சாவூர் என்பவர் ராஜராஜ சோழனது அவையில் சிறப்பிடம் பெற்று இருந்ததுடன் தஞ்சைக் கோயிலுக்குப் பல தானங்கள் வழங்கி இருப்பதைக் கோவில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இந்த வணிகர், ராஜேந்திர சோழனது அவையிலும் இடம் பெற்றிருந்தார். கந்தர்வ பேரரையன் என்ற சிறப்பு விருதினையும் அந்த வணிகருக்கு ராஜேந்திர சோழன் வழங்கிச் சிறப்பித்ததை அவனது கோலார் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த மன்னனின் சிறந்த அலுவலராக துருக்கன் அஹ்மது என்பவர் விளங்கியதை லெய்டன் செப்பேடுகள் தெரிவிக்கின்றன.

இதுபோலவே கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் இறுதியில் காயல்பட்டினத்தில் மாறவர்மன் குணசேகர பாண்டியனது அரசவையில் இருபெரும் முஸ்லிம் வணிகர்கள் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தனர். அவர்களில் ஒருவரான ஷேக் ஜக்கியுத்தீன், பாண்டியனது தலைமை அமைச்சராக இருந்தார். இன்னொருவரான ஷேக் ஜமாலுத்தீன், பாண்டிய மன்னனின் அரசியல் தூதுவராக சீன நாட்டுக்குப் பலமுறை சென்று வந்ததையும் வரலாற்றில் காணமுடிகிறது. 17-ஆம் நூற்றாண்டில் மிகச் சிறப்புடன் அரசோச்சிய சேது மன்னர் ரெகுநாத கிழவன் சேதுபதியின் நல்லமைச்சராக வள்ளல் சீதக்காதி என்ற ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் விளங்கினார். டச்சுக் கிழக்கிந்திய ஆவணங்கள் இதைத் தெரிவிக்கின்றன. இவ்விதம் அரசியலில் தமிழ் முஸ்லிம்கள் முதன்மை பெற்றிருந்ததையும், அதன் காரணமாக சோழ, பாண்டிய மன்னர்கள் மட்டுமல்லாமல், மறவர் சீமை சேதுபதிகள், மதுரை நாயக்க மன்னர்கள், தஞ்சாவூர் நாயக்க – மராட்டிய மன்னர்கள் ஆகியோரது ஊக்குவிப்புகளுக்கும் தமிழ் முஸ்லிம்கள் உரியவர்களாக விளங்கியதைப் பல வரலாற்றுச் சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன.

இங்ஙனம் தமிழ்ச் சமுதாயத்தின் தனிப்பெரும் சிறுபான்மையினராக விளங்கிய தமிழ் முஸ்லிம்கள், தங்களது தாய்மொழியாகக் கொண்ட தமிழுக்கு ஆற்றியுள்ள தொண்டுகளும் அளப்பரியவை. கி.பி. 15-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை தமிழகத்தின் ஆட்சியாளராக விளங்கிய நாயக்க மன்னர்களும், தஞ்சை மராட்டியர்களும் தமிழைப் புரக்கணித்து அவர்களது தாய்மொழியான தெலுங்கையும், மராட்டிய மொழியையும் வளர்ச்சி பெறச் செய்ததால் தமிழ்ப் புலவர்கள் அடைந்த வேதனையும் வறுமையும் பலப்பல. இத்தகைய இறுக்கமான சூழ்நிலையில் தமிழ் மொழியில் தேர்ந்து, பல புதிய இலக்கியப் படைப்புகளை முஸ்லிம்கள் யாத்து மகிழ்ந்தனர்.

தமிழ் முஸ்லிம்களது முதல் இலக்கியமான ஆயிரம் மசாலா என்ற அதிசயப் புராணம், 1572-ல் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேறியது. இதைத் தொடர்ந்து தமிழ் யாப்பு இலக்கண வழியிலான புராணம், கோவை, கலம்பகம், அந்தாதி, பிள்ளைத்தமிழ், திருப்புகழ், குறவஞ்சி, பள்ளு என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள், தமிழ் முஸ்லிம்களால் படைக்கப்பட்டு, தமிழின் வளமைக்கும் பெருமைக்கும் அணி சேர்த்துள்ளன. குறிப்பாக தக்கலை பீர் முஹம்மது அப்பா, கோட்டாறு ஞானியார் சாஹிபு, காயல் காசிம் புலவர், குணங்குடி மஸ்தான் சாஹிபு, தொண்டி மோனகுரு மஸ்தான், அருள்வாக்கி அப்துல் காதர் புலவர் ஆகியோரது இன்னிசைப் பாடல்களும், இராமநாதபுரம் வெ. இபுறாஹீம் சாஹிபு போன்றவர்களின் நாடக நூல்களும் பெருமைமிகு பட்டியலில் இடம் பெற்றவையாகும். இந்தப் படைப்புகளுடன் அரபு, பார்சி, உருது ஆகிய மொழிப் புலன்களிலிருந்து பெற்ற தங்களது புலமைத் திறனை அந்த மொழிகளின் வடிவங்களான நாமா, கிஷ்ஷா, முனாஜாத் என்ற புதிய இலக்கிய வடிவங்களையும் தமிழ் மொழியில் புகுத்தி உள்ளனர். இதன் காரணமாக அந்த மொழிகளின் சொற்கள், ஏராளமான எண்ணிக்கையில் தமிழ் வழக்கில் திசைச் சொற்களாகக் கலந்து தமிழின் வளமைக்கு ஊட்டமளித்தன. அத்துடன் வளர்ந்து வரும் மொழிக்கு உதவும் வகையில் இந்த இலக்கிய வடிவங்களும் இன்னும் பல புதிய இலக்கிய வடிவங்களும் முன்னோடியாக விளங்கி வருகின்றன.
நன்றி : தினமணி

23 Oct 2009

மர்வான் அல் ஷகப் - அதி வேக அரேபிய குதிரை


பழங்காலம் தொட்டு குதிரைகள் போக்குவரத்து, செய்தி தொடர்பு மற்றும் போர்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது, உலகின் பெருவாரியான போர்களில் பங்கெடுத்த குதிரைகள், அரசர்களின் வாழ்வில் வாள் போன்று குதிரையும் முக்கிய அங்கமாக திகழ்ந்தது.அக்காத்தில் அரசனுக்கும் பிரபுக்களுக்கும் இடையில் குதிரை பந்தயம் ஒரு விருப்பமான பொழுது போக்காக இருந்தது. அது போல் அரேபியர்களுக்கு பொதுவாக ஒட்டகம், மற்றும் குதிரை என்றால் அதீத பிரியம். வளைகுடா நாடான கத்தாரின் அரச குடுமபத்திற்கு சொந்தமான் ஒரு மிக உயர்தர குதிரைதான் மார்வான் அல் ஷகப். எட்டே வயது நிரம்பிய இக்குதிரை தொடர்ந்து மூன்றாம் முறையாக உலக அரேபிய சாம்பியன் பட்டத்தை வென்று அரேபியக் குதிரைகளின் வரலாற்றில் நீங்கா இடம் பெற்றுவிட்டது. அத்துடன் சீனியர் ஸ்டல்லியன் என்ற விருதையும் பாரிசில் நடந்த போட்டியில் பெற்றது அரபுலக குதிரைப்பிரியர்களை மகிழ்ச்சிக்கு ஆட்படுத்தியதாக காத்தார் அல் சகப் குதிரை க்ளப்பில் பனிபுரியும் குதிரை பந்தய ஆய்வாளர் தமீம் தெரிவித்தார். இதன் விலை 10 மில்லியன் அமெரிக்க டாலர்களாக கணக்கிடப்பட்டாலும் (60 கோடி இந்திய ரூபாய்), இதன் அதிவேக ஆற்றலுக்கு விலையே இல்லை என்பதே உணமை.

18 Oct 2009

உலக சித்தாந்தங்களில் மாட்டிக் கொன்ட இரு பசு மாடுகள் !!உலக சித்தாந்தங்களைப் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்பட்டுக் கொன்டிருந்தாலும், கம்யூனிசம்னா என்ன? சோசியலிசம்னா என்னனு ஒரே குழப்பமாகத்தான் இருக்கு...... அதற்காகத்தான் இரு பசுமாட்டு பொருளாதார தத்துவம் ஒன்றை ஒரு மேதை உருவாக்கியிருக்காரு... அதுதான் இது.

சோசியலிசம்: உங்களிடம் இரு பசுமாடுகள் இருந்தால் , ஓன்ன மட்டும் நீங்க வச்சிக்கிட்டு, அடுத்ததை சமர்த்தா பக்கத்து வீட்டு அலமேலு மாமிக்கு கொடுத்துடனும்.

கம்னியுசம்:
உங்களிடம் இரு பசுமாடுகள் இருந்தால், இரண்டயுமே கவர்ன்மென்ட் எடுத்துக்கிட்டு, மறக்காமல் ஒரு நாளைக்கு அரை லிட்டர் பால் இலவசமா தரும்...

பாசிசம்:உங்களிடம் இரு பசுமாடுகள் இருந்தால் இரண்டயுமே கவர்ன்மென்ட் எடுத்துக்கிட்டு, நியாயமன! விலையில் பால் விற்பாங்க.... காசு கொடுத்து வாங்கிக்கலாம்...

சர்வாதிகாரம் :உங்களிடம் இரு பசுமாடுகள் இருந்தால், இரண்டயுமே கவர்ன்மென்ட் எடுத்துக்கிட்டு, உங்களை சுட்டு கொன்னுடும்........

முதலாளித்துவம்:உங்களிடம் இரு பசுமாடுகள் இருந்தால், ஒன்னை வித்துட்டு ஒரு காளை மாடு வாங்கியே ஆகணும்.

ஜன நாயகம்:
உங்களிடம் இரு பசுமாடுகள் இருந்தால், எக்கச்சக்க வரிய போட்டு இரன்டையும் ஒரே ஒரு மாடு வச்சிருக்கிற ஒரு வெளி நாட்டுக்கு விக்க தூண்டும், முக்கியமான விஷயம் ... அந்த வெளி நாடு வச்சிருக்கிற ஒரு மாடும் உங்க நாடு கொடுத்த அன்பளிப்பாகத்தான் இருக்கும்...

மேலே பார்த்தது எல்லாம் பொதுவான சித்தாந்தங்க்ள் மட்டும்தான்,இது போல் பண்ணாட்டு கம்பெனிகள் தங்கள் நாட்டிற்கு ஏற்றார் போல தனி தனி கொள்கைகள் வச்சிருப்பாங்க..... பொதுவான பண்ணாட்டு கம்பெனிகளின் தத்துவம் என்ன தெரியுமா.........உங்களிடம் இரு பசுமாடுகள் இருந்தால், ஓன்னை வித்துட்டு, அடுத்ததை கட்டாயப்படுத்தி நாலு மாட்டிடம் கறக்க வேண்டிய பாலை கறக்க வேண்டியது, அப்புறம் அது செத்துப் போனதும் , ஏன் செத்ததுனு பெரிய ஆய்வு நடத்தி ரிபோர்ட் சமர்ப்பிக்கனும்........ அதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

22 Jul 2009

கான்டினென்டல் ஏர்லைன்சும் டாக்டர் அப்துல் கலாமும்

என்ன அணுகுமுறையோ தெரியவில்லை, அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனங்களின் அட்டூழியங்களுக்கு எல்லையே இல்லை தன் நாட்டின் அரசை போலவே... ஏர்லைன் விதிகள் ஒரு புறம் இருந்தாலும், சோதணை செய்த அமெரிக்க முதலாளிகளின் இந்திய வேலைக்காரர்களுக்கு ஒரு காமன் சென்ஸ், ஒரு கர்ட்டசி வேண்டாம், விமான துறை மந்திரி சொல்வத பார்த்தால், இந்திய அரசாஙக ப்ரட்டகாலை மீறிய செயலாக கருதி சிறையில் அடைக்க வழிவகைகளை தேடுகிறார். நேற்று வரை பணியாத கான்டினென்டல் இன்று பகிரங்க மண்ணிப்பை கோருகிறது, அமெரிக்க முதலாளிகளின் தீவிர விசுவாச இந்தியர்கள் தன் வேலை இழந்து,உள்ளே போவது உறுதிப்பாட்ட நிலையில், மௌனித்திருக்கும் டாக்டர் கலாமின் கருத்து மிக அவசியம்.

4 Aug 2008

கீழக்கரை சமூக பிரமுகர் எம்.கே.எஸ். ஷரீப் ஹாஜியார் மறைவு

இராமனாதபுரம் மாவட்டம், கீழக்கரையில், வள்ளல் சீதக்காதியினால் கட்டுமானம் செய்யப்பட்ட புகழ் மிகுந்த ஜும் ஆ பள்ளி அமைந்திருக்கும் நடுத்தெரு ஜமா அத்தின் முத்தவல்லியாக பத்து ஆண்டுகளாக சேவை செய்தவரும், கீழக்கரை அணைத்து ஜமா அத் கமிட்டியின் உப தலைவராக இருந்து சமூக நல்லிணக்கத்துக்காக பாடுபட்டவருமான எம்.கே.எஸ். ஷரீப் ஹாஜியார் அவர்கள் 03.08.2008, ஞாயிறு அன்று பிற்பகல் 2 மனி அளவில் காலமானார்கள்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். மறைந்த ஹாஜியார் அவர்கள் 1930 ஆம் ஆண்டு கீழக்கரையில் பிறந்து, இலங்கை தலை நகர் கொழும்புவில் 30 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தவர். இவர்களின் நல்லடக்கம் 04.08.2008 இன்று கீழக்கரை ஜும் ஆ பள்ளி மைய வாடியில் நடை பெறுகிறது.

7 Jul 2008

சமூக காவலர் கீழக்கரை எம்.எம்.கே - நினைவுகள்

நடை, உடை, பாவனைகளில் மிடுக்கும்,கம்பீர தோற்றமும்,அதீத அறிவுத்திறனும்,தெளிவான பேச்சுத்திறனும் ஒருங்கே பெற்ற திரு எம்.எம்.கே. முகம்மது இப்ராகீம் அவர்கள் 2008 ஜீன் மாதம் 11ஆம் தேதி காலமானார்கள். தமிழக அரசியலில் தீவிர ஈடுபாடு கொன்ட திரு எம்.எம்.கே அவர்கள் ஆரம்ப காலங்களில் இந்திரா காங்கிரஸ் கட்சியிலும், பின்பு புதிய தமிழம் கட்சியில் மா நில பொதுச் செயலாளராகவும், இறுதியில் அ.தி.மு.க விலும் இனைந்து பணி ஆற்றினார் வந்தார்கள். இவரின் இயல்பான தான் கொன்ட கொள்கையின் பிடிப்பு காரானமாக எந்த அரசியல் கட்சியிலும் நிலையாக நீடிக்கமுடியவில்லை. அஞ்சா நெஞ்சானானன இவரின் உறுதியான கருத்துக்களுடன் இவர் சார்ந்த கட்சிகளின் கொளகைகள் ஒத்துப்போகாத தன்மையயே இதற்கு காரனமாக எடுத்துக் கொள்ளலாம்.

1984ல் நடந்த சட்ட சபை தேர்தலில் கடலாடி தொகுதியில் சுயேச்சையாக களமிறங்கி சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை நழுவ விட்டாலும், தான் சார்ந்த சமூகத்தின் போர் படை தளபதியாகவே தனது இறுதி மூச்சு வரை விளங்கினார். கீழக்கரை சார்ந்த பகுதிகளின் சமூக நால்லிணக்கத்திற்காக பெரிதும் பாடுவட்டவர். புற தோற்றத்தில் கரடு முரடாக தெரிந்தாலும், வெள்ளை அகத்தினர். அவர் இறுதிவரை அணிந்து வந்த ஆடை போன்றே. கீழக்கரை தெற்குத்தெரு இஸ்லாமியா உயர் நிலை, மற்றும்,மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் நிரவாகியாக பல காலம் பனிபுரிந்து, அந்தா கல்வி ஸ்தாபனங்களின் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டவர். கடந்த உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலாராக வெற்றிபெற்று சமூக பணி பலவும் ஆற்றிவந்தவர், இன்று நம்மிடம் இல்லை.

வள்ளல்களுக்கும், பெரும் தொழில் வணிகர்களுக்கும், ஆண்மீக குருக்களுக்கும் பெயர் பெற்ற கீழக்கரை சமூகத்தின் காவலனாக திகழ்ந்த திரு எம். எம். கே அவர்களின் மரனத்தால் கீழக்கரை சமூகம் தனது பாதுகாப்பு கேடயத்தினை இழந்து தவிக்கிறது............

11 Jun 2008

கீழக்கரை சமூக பிரமுகர் எம்.எம்.கே மறைவு

இராமனாதபுரம் மாவட்டம், கீழக்கரையை சேர்ந்த சமூக பிரமுகரும், கல்வி சேவகரும், இந்த பகுதியின் நலன்களுக்கு பெரிதும் உழைத்தவரான எம். எம். கே என்று அழைக்கப்பட்ட திரு முகம்மது இபுராகீம் அவர்கள் இன்று 11.06.2008 காலை 6 மணி அளவில் காலமானார்

31 Jan 2008

சமுதாய செம்மல் கீழக்கரை எஸ்.எம்.ஏ பஷீர் முகைதீன் - இரன்டாம் ஆண்டு நினைவஞ்சலி


தென் தமிழக கட்லோர மாவட்டமான இராமனாதபுரம் பகுதியில் எஸ்.எம்.ஏ என அறியப்பட்ட பஷீர் முகைதீன் அவர்கள் காலமாகி இரண்டு வருடங்கள் நிறைவு பெறும் நிலையில் அவர் சார்ந்த சமூகம் மற்றும் பகுதி மக்கள் அவரை நினைவு கூறும் முகமாக அவரை பற்றிய சிறு குறிப்புகள்:

பஷீர் முகைதீன் அவர்கள் தமிழக தென் பகுதி கடலோரப் புரதான பகுதியான கீழக்கரையில் 1945 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் நாள் பிறந்தார். தனது ஆரம்ப கால பள்ளிப் படிப்பினை இலங்கை தலை நகர் கொழும்புவிலும், பின் இந்தியாவில் இராமனாதபுரம் இராஜா உயர் நிலை பாடசாலையிலும்,தொடர்ந்து திருச்சி பிஷப் கேபர் பள்ளியிலும் தனது இள் நிலை அறிவியல் (இயற்பியல்) பட்டப்படிப்பினை புகழ் பெற்ற சென்னை கிருஷ்துவ கல்லூரியிலும் படித்தவர்.

பாரம்பரியமிக்க கீழக்கரை எஸ்.வி.எம். குடும்பத்தில் பிறந்த இவர் தனது இளமை முதல் கடல் வாழ் உயிரினங்களின் மீது அளவில்லாத ஈடுபாடு கொண்டு அதனை பற்றிய ஆராய்ச்சியினில் சிறப்பு நிபுனத்துவம் கொண்டிருந்தார். தங்களது முன்னோர்களின் தொழிலான முத்து சிலாபம் மற்றும் சங்கு குளித் தொழிலில் ஈடுபட்டு திறனுடன் சிறப்பாக நிர்வாகித்து வந்தார். எவ்வளவு அறியவகை கடல் வாழ் உயிரினத்தையும் பார்த்த மாத்திரத்தில் அடயாளம் கண்டு அதன் விபரங்களை சொல்வதில் அவருக்கு நிகர் அப்பகுதியில் எவரும் இல்லை என்பது தின்னம்.

இத்த்கைய தொழிலில் தொடர்புடைய ஐரோப்பிய மற்றும் கீழ்திசை நாடுகளை சார்ந்த வர்த்தகர்கள் இவருடன் கல்ந்துரையாட அவ்வப்பொழுது கீழக்கரைக்கு விஜயம் செய்வதை இப்பகுதி மக்கள் இன்றும் நிணவு கூறுவது இவரின் சிறப்புக்கு எடுத்துக்காட்டு.
சமுதாய பனிகளில் தீராததாகம் கொன்ட பஷீர் முகைதீன் அவர்கள் அனைத்து அரசியல் கட்சியுனுடனும், சமுதய மக்களினுடனும் நல்லிணக்கம் கொன்டிருத்தார். சமூக நல்லினக்கத்தை இவர் கீழக்கரையில் ஏற்படுத்துவதில் தனது இறுதி காலம் வரை பெறும் முயற்சியில் ஈடுபட்டது இன்றும் போற்றத்தகதாக கருதப்ப்டுகிறது.

"கிட்டங்கி"என அழைக்கப்படும் இவரது அலுவலகத்தில் சமூகத்தில் ஏற்படும் கடும் சிக்கலான விவகாரங்களுக்கு தனது எதார்த்தமான அணுகு முறையாலும் மற்றும் சட்டரீதியான அனவரும் ஏற்கக்கூடிய தீர்வை சொல்லுவதிலும் இவர் திறன் பெற்றிருந்தது இப் பகுதியினருக்கு மிகவும் உத்வியாக இருந்தது உண்மை. தெளிவாக விபரங்களை உணர்ந்து கொள்ளுவதும், விழிப்புடன் அதனை ஆராய்வதிலும்,சரியான முடிவெடுப்பதிலும், சாதக பாதகங்களை அறிந்திருத்தலிலும் சிறப்பு நிபுனத்துவம் கொன்ட ஒரு மேலான்மை தத்துவத்தின் மொத்த உருவம்தான் பஷீர் முகதீன் அவர்கள். தூய பழக்க வழக்கமும், எளிமையான வெண்ணிற ஆடை அனிவதும், நேர ஒழுங்கு முறை கடப்பிடித்தலும், அயராத உழைப்பும்,கோபமில்லாத்தன்மையும்,சாந்த குனமும், அதிர்வில்லா பேச்சும்,தண்ணடக்கமும்,முதிர்ந்த அறிவுணர்வும்,ஆழ்ந்த சிந்தனையும் இவரின் சிறப்பு குணங்களாக அறியப்பட்டது.
பதவி ஆசை சிறிதும் இன்றி தன் வாழ்க்கையில் பயனித்த இவர் பல் வேறு சமூக நிறுவணங்களில் முக்கிய நிர்வாகியாக இருந்து கடமை ஆற்றியது கீழக்கரை சமுதாய பிரமுகர்கள், மற்றும் அரசியல் பிரமுகர்களால் இன்றும் நினைவு கூறப்படுகிறது. 2000 ஆம் ஆன்டு நடைபெற்ற சீதக்கதி நினவு நாள் விழாவினை திறம் பட நடத்திவைத்த செயலின் முழு உள்செயல்லாக்க வேலையினை சீதக்காதி, மற்றும், சதக் அறக்கட்டளை நிர்வாகிகள் முழுதும் அறிவர்.

சதக்கத்துன் ஜாரியா நடு நிலைப்பள்ளியின் தாளாளராக 1975 முதல் தனது இறுதி காலம் வரை கிட்டட்தட்ட 30 ஆன்டுகாலம் திறம் பட நிருவகித்தார்கள். தனது பணி காலத்தில் மானவர்களின் நலனில் பெரிதும் கவனம் செலுத்தி செய்த சேவைகளயும், கீழக்கரை நகராட்சியின் செயல்பாடுகளில் தனிகவனம் செலுத்தி மக்க்ளின் அரனாக நின்றதையும் யாவரும் அறிவர்.

கீழக்கரை பைத்துல்மாலின் நிறுவன நிர்வாகிகளின் ஒருவரான இவர் அதன் உப தலைவராக தனது இறுதி காலம் வரை தொடர்ந்தார்.கீழக்கரை அணைத்து ஜமாத் கூட்ட்மைப்பின் பொருளாளராகவும்,மற்றும் இராம நாதபுரம் தமிழ் சங்கத்தின் முக்கிய பிரமுகராகவும் இவர் செய்த சேவைகள் காலத்தில் அழியாதது.இவரின் செய்த சேவைகள் சில எல்லைகள் கடந்தது, பிரமிக்கதக்கது.
2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏற்பட்ட சுகக்குறைவால் உடல் அவயங்களில் ஏற்பட்ட பாதிப்புகளினாலும் மருத்துவ பராமரிப்பில் இருந்த சமுதாய செம்மல் பஷீர் முகைதீன் அவர்கள் 2006, பிப்ரவரி மாதம் 2 ஆம் நாள், வியாழன் அன்று பகல் 11.35 மனியளவில் மதுரை அப்போலோ மருத்துவம்னையில் கால்மானார்கள். அண்ணாரின் உடல் பிப்ரவரி 3 ஆம் நாள் கீழக்கரை, நடுத்தெரு, ஜும்மாப்பள்ளி மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது

4 Nov 2007

ஆட்டோடெக் முகைதீன் - 4 ஆம் ஆன்டு நினைவு நாள்.

மலர்ந்தது : 29 மே 1970 உதிர்ந்தது : 04 நவம்பர் 2003

மறைந்து நாலான்டுகள் சக்கரமாக சுழன்று விட்டலும் எம் நினைவுகள் உம்மையே சுற்றி வருகிறதே..

10 Mar 2007

செய்யது எம். சலாஹுதீன் - தொழில் முனைப்பாளர்களின் உத்வேகம்
செய்யது எம். சலஹுதீன், ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிக நகரான துபாயில் வசிக்கும் இந்தியர். இந்திய அரசின் வெளி நாடு வாழ் இந்தியர்கள் நலத்துறையின் சார்பில் ஆண்டுதோரும் நடத்தப்படும் பிரவாசி பாரதிய திவாஸ் என்ற விழாவின் 2007 ஆம் ஆண்டுக்கான நிகழ்ச்சியின் கடைசி நாளான கடந்த பிப்ரவரி மாதம் 9ஆம், நாள் புது டில்லியில், மேதகு இந்திய ஜனாதிபதி திரு ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களினால் சிறந்த இந்திய தொழில்ஜீவிக்கான விருது பெற்றவர்
துபாயை தலமையிடமாக கொண்ட ஈ.டி.ஏ அஸ்கான் மற்றும் ஈ.டி.ஏ. ஸ்டார் தொழில் குழுமங்களின் மேலான்மை நிர்வாகியான செய்யது.எம். சலாஹுதீன் அவர்களின் அயராத உழைப்பும், தீவிர தொழில் ஈடுபாடும், எதர்த்த நிர்வாக முடிவுகளும்,தொலை நோக்க பார்வை கொண்ட திட்டமிடுதலும், குறிப்பறிந்து அளவளாவும் தன்மையும், சமூகம்,பன்பாடு சார்ந்த தொழில்முறை பானி என பல் வேறு வகைப்பட்ட தனிதன்மையின் மொத்த உருவமாக திகழ்கிறார். கடந்த 37 வருடங்களாக அமீரகத்தில் வாழ்ந்து வரும் செய்யது எம். சலாஹுதீன் அவர்களின் மேலான்மைதிறனுக்கு சாட்சியாக 50 ஆயிரம் தொழிலாளர்கள் பனிபுரியும் ஆலமரமாக இன்று ஈ.டி.ஏ நிறுவனம் திகழ்கிறது. இத்தகைய பெரும் தொழில் சாம்ராஜ்யத்திற்கு வித்திட்ட வள்ளல் பி.எஸ். அப்துர்ரஹ்மான் அவர்களினால் தொழிலுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டதை இன்றும் நினவு கூறும் இவரின் அளப்பறிய பணி அமீரக அரசினால் பலமுறை அங்கீகரிக்கப்பட்டும், கௌரவிக்கப்பட்டும் வந்துள்ளது.
செய்யது எம். சலாஹுதீன் அவர்கள் தென் தமிழகத்தின் சேதுபதி சீமை என அறியப்பட்ட இரம நாதபுரம் மவட்டம் கீழக்கரையில் 1940 ஆம் அன்டுகளின் தொடக்கத்தில் பிறந்தவர், தனது பள்ளி படிப்பினை கீழக்கரையிலும்,கல்லூரி படிப்பினை சென்னையிலும் பயின்றவர், தனது இளமை காலத்தில் இலட்ச்சிய நோக்கம் கொன்டு இலங்கை, மற்றும் கிழக்காசிய நாடுகளுக்கு பயனம் மேற்கன்டவர். சமுதாய நலனில் ஆர்வம் கொணடு இவர் ஆற்றிய பனிகளும், கல்வி மற்றும் வளர்ச்சி பனியில் இவரின் அக்கரையுமே இத்தகைய பெரும் விருதால் இவர் கௌரவிக்கப்படுகிறார் என்பது உண்மை.


2 Feb 2007

சமுதாய செம்மல் பஷீர் முகைதீன் - நினைவுகள்

15-02-1945 - 02-02-2006

தென் தமிழக கட்லோர மாவட்டமான இராமனாதபுரம் பகுதியில் எஸ்.எம்.ஏ என அறியப்பட்ட பஷீர் முகைதீன் அவர்கள் காலமாகி ஓராண்டு நிறைவு பெறும் நிலையில் அவர் சார்ந்த சமூகம் மற்றும் பகுதி மக்கள் அவரை நினைவு கூறும் முகமாக அவரை பற்றிய சிறு குறிப்புகள்:


பஷீர் முகைதீன் அவர்கள் தமிழக தென் பகுதி கடலோரப் புரதான பகுதியான கீழக்கரையில் 1945 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் நாள் பிறந்தார். தனது ஆரம்ப கால பள்ளிப் படிப்பினை இலங்கை தலை நகர் கொழும்புவிலும், பின் இந்தியாவில் இராமனாதபுரம் இராஜா உயர் நிலை பாடசாலையிலும்,தொடர்ந்து திருச்சி பிஷப் கேபர் பள்ளியிலும் தனது இள் நிலை அறிவியல் (இயற்பியல்) பட்டப்படிப்பினை புகழ் பெற்ற சென்னை கிருஷ்துவ கல்லூரியிலும் படித்தவர்.


பாரம்பரியமிக்க கீழக்கரை எஸ்.வி.எம். குடும்பத்தில் பிறந்த இவர் தனதி இளமை முதல் கடல் வாழ் உயிரினங்களின் மீது அளவில்லாத ஈடுபாடு கொண்டு அதனை பற்றிய ஆராய்ச்சியினில் சிறப்பு நிபுனத்துவம் கொண்டிருந்தார் என்றால் மிகயாகாது தங்களது முன்னோர்களின் தொழிலான முத்து சிலாபம் மற்றும் சங்குகுளித் தொழிலில் ஈடுபட்டு திறனுடன் சிறப்பாக நிர்வாகித்து வந்தார். எவ்வளவு அறியவகை கடல் வாழ் உயிரினத்தையும் பார்த்த மாத்திரத்தில் அடயாளம் கண்டு அதன் விபரங்களை சொல்வதில் அவருக்கு நிகர் அப்பகுதியில் எவரும் இல்லை என்பது தின்னம்.


இத்த்கைய தொழிலில் தொடர்புடைய ஐரோப்பிய மற்றும் கீழ்திசை நாடுகளை சார்ந்த வர்த்தகர்கள் இவருடன் கல்ந்துரையாட அவ்வப்பொழுது கீழக்கரைக்கு விஜயம் செய்வதை இப்பகுதி மக்கள் இன்றும் நிணவு கூறுவது இவரின் சிறப்புக்கு எடுத்துக்காட்டு.சமுதாய பனிகளில் தீராததாகம் கொன்ட பஷீர் முகைதீன் அவர்கள் அனைத்து அரசியல் கட்சியுனுடனும், சமுதய மக்களினுடனும் நல்லிணக்கம் கொன்டிருத்தார். சமூக நல்லினக்கத்தை இவர் கீழக்கரையில் ஏற்படுத்துவதில் தனது இறுதி காலம் வரை பெறும் முயற்சியில் ஈடுபட்டது இன்றும் போற்றத்தகதாக கருதப்ப்டுகிறது.


"கிட்டங்கி"என அழைக்கப்படும் இவரது அலுவலகத்தில் சமூகத்தில் ஏற்படும் கடும் சிக்கலான விவகாரங்களுக்கு தனடு எதார்த்தமான அணுகு முறையாலும் மற்றும் சட்டரீதியான அனவரும் ஏற்கக்கூடிய தீர்வை சொல்லுவதிலும் இவர் திறன் பெற்றிருந்தது இப் பகுதியினருக்கு மிகவும் உத்வியாக இருந்தது உண்மை. தெளிவாக விபரங்களை உணர்ந்து கொள்ளுவதும், விழிப்புடன் அதனை ஆராய்வதிலும்,சரியான முடிவெடுப்பதிலும், சாதக பாதகங்களை அறிந்திருத்தலிலும் சிறப்பு நிபுனத்துவம் கொன்ட ஒரு மேலான்மை தத்துவத்தின் மொத்த உருவம்தான் பஷீர் முகதீன் அவர்கள். தூய பழக்க வழக்கமும், எளிமையான வெண்ணிற ஆடை அனிவதும், நேர ஒழுங்கு முறை கடப்பிடித்தலும், அயராத உழைப்பும்,கோபமில்லாத்தன்மையும்,சாந்த குனமும்,அதிர்வில்லா பேச்சும்,தண்ணடக்கமும்,முதிர்ந்த அறிவுணர்வும்,ஆழ்ந்த சிந்தனையும் இவரின் சிறப்பு குணங்களாக அறியப்பட்டது.


பதவி ஆசை சிறிதும் இன்றி தன் வாழ்க்கையில் பயனித்த இவர் பல் வேறு சமூக நிறுவணங்களில் முக்கிய நிர்வாகியாக இருந்து கடமை ஆற்றியது கீழக்கரை சமுதாய பிரமுகர்கள், மற்றும் அரசியல் பிரமுகர்களால் இன்றும் நினைவு கூறப்படுகிறது. 2000 ஆம் ஆன்டு நடைபெற்ற சீதக்கதி நினவு நாள் விழாவினை திறம் பட நடத்திவைத்த செயலின் முழு உள்செயல்லாக்க வேலையினை சீதக்காதி, மற்றும், சதக் அறக்கட்டளை நிர்வாகிகள் முழுதும் அறிவர்.சதக்கத்துன் ஜாரியா நடு நிலைப்பள்ளியின் தாளாளராக 1975 முதல் தனடு இறுதிகாலம் வரை கிட்டட்தட்ட 30 ஆன்டுகாலம் திறம் பட நிருவகித்தார்கள். தனது பணி காலத்தில் மானவர்களின் நலனில் பெரிதும் கவணம் செலுத்தி செய்த சேவகளுக்கு இன்றைய கீழக்கரை சேர்மன் அவர்களே சாட்சி.மேலும் கீழக்கரை நகராட்சியின் செயல்பாடுகளில் தனிகவனம் செலுத்தி மக்க்ளின் அரனாக நின்றத யாவரும் அறிவர்.

கீழக்கரை பைத்துல்மாலின் நிறுவன நிர்வாகிகளின் ஒருவரான இவர் அதன் உப தலைவராக தனது இறுதி காலம் வரை தொடர்ந்தார்.கீழக்கரை அணைத்து ஜமாத் கூட்ட்மைப்பின் பொருளாளராகவும்,மற்றும் இராம நாதபுரம் தமிழ் சங்கத்தின் முக்கிய பிரமுகராகவும் இவர் செய்த சேவைகள் காலத்தில் அழியாதது.இவரின் செய்த சேவைகள் சில எல்லைகள் கடந்தது, பிரமிக்கதக்கது.


2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏற்பட்ட சுகக்குறைவால் உடல் அவயங்களில் ஏற்பட்ட பாதிப்புகளினாலும் மருத்துவ பராமரிப்பில் இருந்த சமுதாய செம்மல் பஷீர் முகைதீன் அவர்கள் 2006, பிப்ரவரி மாதம் 2 ஆம் நாள், வியாழன் அன்று பகல் 11.35 மனியளவில் மதுரை அப்போலோ மருத்துவம்னையில் கால்மானார்கள். அண்ணாரின் உடல் பிப்ரவரி 3 ஆம் நாள் கீழக்கரை, நடுத்தெரு, ஜும்மாப்பள்ளி மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது

31 Jan 2007

இருமி யான்வர் (ஜனவரி 20 1991)அப்சரான் பெனிசூலாவில்மார்க்கங்கள் சங்கமிக்கும்
அகன்ற ரஸ்தா...
அதரங்களில் நெருப்புப் பொறிகள்
வின்னை முட்டும் இடி முழக்கம்
விடுதலை வேட்கை பற்றிக் கொள்ளஅடைந்து
விடும் துடிப்புடன்
உயர்ந்து சிவந்த அஜரி வாலிபர்கள்
மணித் துளிகள் விரைகிறது எல்லையின்
முனையிலிருந்து
ஊர்ந்து வரும் டாங்கிகள்"கலைந்து செல்ல"
எச்சரிக்கை ஓசை எழுப்ப

கூர்வாள் நெஞ்சத்தினரின் மறுத்தல்கள்ககாகஸ்
மலை உச்சியில் எதிரொலிக்க
தட்ப வெட்ப நிலை மாறி பனியை அதிகரிக்கிறது

செம்படையினரின் வாசனை மூக்கை துளைக்கிறது
அழிவாயுதங்கள், நாசகாரிகளின் விசைகள்
கனப் பொழுதில்முடுக்கப்படயுத்த பிரளயம்,
வெட்ப விஷ வாயு, அக்கினி பிரவாகம்
புயல் ஓயும் பொழுதுபச்சை அங்கி செம்படைகள்
எண்ணிக்கையை தொடங்க
ஈராயிரம் உடல்கள் உயிரற்ற சடலமாக

இன்றும் ......இவர்களின் தீரம் வணங்கப் படுகிறது,
இந்துகுஸ் மலை அடிவார சமுதாய விடுதலையில்
இது வெறும் நிகழ்வல்ல ஜீவனுள்ள வேர்

அஜர்பஜானில், பாக்கு புற நகரில் நீலக் கடலும்,
மலை தாழும் சந்திக்கும்"கோபர்ஸ்தானில்" நாளும்
தீபங்கள் ஏற்றப் படுகிறதுநானும் ஏற்றிணேன்
சுதந்திர வசானை நறுமனமாக இங்கு வீசுகிறது

21 Dec 2006

சோனகர் யார்

சோனகர் என்ற இனம் பண்டய தமிழ் இலக்கியங்களில் குறிப்பாக தென் தமிழக பாண்டியர்களின் வரலாற்றில் தவிர்க்க முடியாத மக்கள் குழு, கடல் சார்ந்த தொழிலின் தம்மை ஈடுபடுத்தி உயர்ந்த பூர்வீக தமிழ் குடிமக்கள். தமிழகதுடன் வர்த்தக தொடர்பினை பண்ணெடுங்காலமாக பேணி வந்த அரேபியர்கள் குறிப்பாக எமனிகளுடன் இவர்களுடய தொடர்பு குறிப்பிடதக்கது.