Showing posts with label நன்மக்கள். Show all posts
Showing posts with label நன்மக்கள். Show all posts

23 Aug 2010

வட்டார வைத்தியர் -மறைந்த டாக்டர் காசிராஜன்

கீழக்கரை மக்களுக்கும் வைத்தியத்துக்கும் உள்ள தொடர்பு பிரிக்க முடியாத விஷயம் என யாவரும் அறிந்ததே.

" உலகில் உள்ள எல்லா நோய்களுக்கும் ஒரே மருந்து பலம் மட்டுமே. எப்போதெல்லாம் கொடுமைகளுக்கு உட்படுகிறாமோ, அப்போதெல்லாம் மனபலம் நமக்கு அதிகம் தேவைப்படும். என விவேகானந்தரின் கூற்றை அறிந்தோ, அறியாமலோ கீழக்கரை மக்கள் பொருந்தி கொன்டார்கள். மலேரியா, டபுள் மலேரியா!, சிக்கன் குனியா, என உள்ளூரில் வசிக்கும் மக்களை மட்டுமின்றி, துபாயில் இருந்து லீவுக்கு ஊருக்கு போகும் சபராளிகளையும் ஒரு கை பார்க்காமல் ஓய்வதில்லை. நகராட்சியும், வெல்பேர் சங்கமும், உள்ளூர் வைத்த்தியர்களும் போராடி, போராடி அலுத்து போய், இந்த கொடிய நோய்கள் ரெம்ப சாதாரணமான விஷயாமாகி விட்டது.

1940 களில் இருந்து 1980கள் வரை, காலராவும், பெரியமமை நோயும் மாறி மாறி வந்து நூற்றுக்கணக்கான மக்களை காவு கொண்டது, எனது பள்ளி பருவத்தில் காலராவுக்கு ஊசி போட மருத்துவர்களும், நர்ஸ்களும் பள்ளிக்கு வரும் பொழுது பள்ளியே பயந்து ஒடுங்கும், ஊசி போட்ட பின் இரவில் சுடு தன்னிவைத்து ஒத்து கொடுத்தால்தான் வலி தீரும்.

இது போன்ற வலிகளே காலரா நோய்க்கு எமனாகி காலராவை இல்லாமல் ஆக்கியது. அப்படியும் யாராவதும் ஒரு குழந்தை காலாராவில் பீடிக்கப்பட்டால் இராமனாதபுரம் குழந்தை டாகடர் காசிராஜனை தவிர வேறு யாராலும்காப்பாற்ற முடியாது,  ஆபத்பாந்தாவனான இவர் கொஞம் முன் கோபியானலும் இவரால் உயிர் பிழைத்த மழலைகள் ஏராளம், ஒவ்வொரு முறையும் இராம நாதபுரம் கேனிக்கரை செல்லும் பொழுதும் மறைந்த டாக்டர் காசிராஜன் நினைவுகளில் என் மனம் சில கனங்கள் மூழ்கும்.

8 Nov 2009

கீழை முதல் ஹாங்காங்க் வரை


வள்ளல் பி.எஸ்.ஏ அவர்களின் இளமை வாழ்க்கை பற்றிய சில குறிப்புகள் .....
“விளையும் பயிர் முளையிலே தெரியும்” என்பது தமிழ் முதுமொழி, எல்லா குழந்தைகளும் ஒன்று போல் இருப்பதில்லை, அது போல் செம்மல்களின் அடயாளம் பருவம் எட்டும் முன்பே தெரியும் அப்படியான ஒருவர்தான் வள்ளல் பி. எஸ்.ஏ , தனது பத்தாவது வயதிலேயே தனது இலட்சியங்களின் வழியில் பயணம் செய்ய மிகப் பெரும் கனவு கண்டவர். அக்கலத்தில் கீழக்கரை சமுதாயத்தில் பள்ளிக்கூடம் செல்லாத மாணவர்களை வீடு தேடி சென்று பள்ளி செல்ல வழியுறுத்தும் இயக்கத்தினை தனது நண்பர்களுடன் இனைந்து தலமையேற்று நடத்தியவர்.
தனது ஐந்தாம் வகுப்பு பள்ளி படிப்பினை கீழக்கரை ஹமீதியா பள்ளியில் முடித்த பின், இராமனாதபுரத்தில் கிருஷ்துவ மிஷனரிகளால் நடத்தப்படும் புகழ் பெற்ற சுவாட்ஸ் பள்ளியில் இனைந்தார், முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் இப் பள்ளியின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காலக்கட்டத்தில் இவருக்குள் எழும் கேள்விகள் ஏன் இது போன்ற தரமான பள்ளிகள் கிராமப் பகுதிகளில் குறைவாக அமையப்பெற்றுள்ளது? இதற்கான விடிவுதான் என்ன?
பி.எஸ்.ஏ. அவர்கள் தனது இளவயதிலேயே பனத்தின் மதிப்பினையும், பண்டங்கள் மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்களயும் உணர்ந்தவரானார். தனது சம வயது மாணவர்களில் சிலர் தேவையான தின்பண்டங்கள் வாங்க போதுமான பணம் வைத்திருப்பதையும், மேலும் சிலர் தின்பணடங்களே வாங்க பணமில்லாமல் வேடிக்கை பார்ப்பதையும் அறிந்து இந்த ஏற்றதாழ்வுகளுக்கு முடிவு கட்ட தனது நண்பர்களுடன் இனைந்து தின்பணடங்களை குறைந்த விலையில் மொத்த கொள்முதல் செய்து பணக்கார மாணவர்க்ளுக்கு அதிக விலையில் விற்று அதன் மூலம் கிடைத்த இலாபத்தில் வசதி குறைந்த மாணவர்களுக்கு இலவசமாக வினியோகித்து தனது தொழில் கோட்பாட்டிற்கு முண்னுரை எழுதினார்
தனது எட்டாம் வகுப்பினை முடித்த காலத்தில், இவரின் தனியாத வியாபாரத் தாகம் இவரது பள்ளிப்படிப்பினை தொடர முடியாமல் தொந்தரவு செய்ய தனது தந்தையர் புஹாரி ஆலிம் அவர்களின் அணுமதி பெற்று , தனது 20 ஆவது வயதில் தனது கையில் வெறும் 149 இந்திய ரூபாயும், ஒரு சின்ன துனிப் பையுமாக கொழும்பு வந்து சேர்ந்தார், சோதனையான காலக்கட்டம்..., முதலில் இவரது அறையில் வசித்து வந்த வியாபாரிகளின் மனதை அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்வதன் மூலம் கவர்ந்தார். இதற்காக இரவு பகல் பாராமல் உழைத்தார்.

வைர வியாபாரியான் தனது தந்தையருடன் முன்பு பலமுறை வைர வியாபரத்திற்காக கொழும்பு வந்தவர் அவர், அதனால் இதே வியாபாரத்தினால் கவரப்பட்டு அதனை பற்றிய நுட்பத்தினை மெல்ல மெல்ல கற்று அறிந்த பின்னும் அவருடய பொருளாதார சூழ் நிலை தனியாக வியாபாரம் செய்ய அணுமதிக்காத நிலையில் காலம் கணியும் வரை சில காலம் கொழும்பு நகரிலேயே அமைதி காத்தார். ஆனால் தனது வியாபார தொடர்புகளை எல்லையில்லமல் வளர்த்து கொண்டும் இருந்தார். விரைவில் ஒரு நேரம் சாதகமாக வந்தது, தனது தொழிலை முதலில் ஹாங்காங்கில் தொடர்ந்தவர் பின்பு, ஜப்பான், இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் என கீழ்திசை நாடுகள் முழுவதும் பரந்து விரிந்தது, இதுவே வள்ளல் அவர்களின் வாழ்க்கையில் இனிமையான தருனமாக கொள்ளலாம், வைர வியாபாரத்தில் அதீத ஈடுபாடு கொண்டு மேலை நாடுகளான பெல்ஜியம், அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளிலும் தனது தொழிலரசின் எல்லைகளை விரிவுபடுத்தினார், 1950 களில் வைரத்தொழில் ஸ்தாபனத்தை ஹாங்காக் மற்றும் பெல்ஜியத்தில் நிறுவிய முதல் தென்னிந்தியர் இவர்தான் என்பது நாடறிந்த உண்மை.
மதி நுட்பமும், விவேகமும், நுண்ணிய நினைவாற்றலும் தாம் பி. எஸ்.ஏ அவர்களின் மூலதனமாக இருந்திருக்க முடியும், எதார்த்த தன்மையும், நகைசுவை உணர்வும் ஒருங்கே பெற்ற வள்ளல் அவர்கள் ஒருவரின் குறையை நேர்த்தியாக, நகைச்சுவையுடன் அந்த நபரின் எதிரிலேய சொல்லிவிடுவதில் அவருக்கு நிகர் எவருமே இல்லை எனலாம், வள்ளல் அவர்களை பற்றி முழு வாழ்க்கை வரலாறு நூல் வடிவத்தில் வந்துவிட்டது, இது அவரின் இளமை பற்றிய சிறு தொகுப்புதான், அவர்தம் சேவைகளும் இன்னும் அவர் தொழில் போல விரிந்து கொன்டேதான் போகிறது. கணக்கிலடங்கா குடும்பங்களின் ஒளி விளக்காகான வள்ளல் அவர்கள் நீடூழி வாழ வாழ்த்துவோமாக.........
நன்றி- திரு எம்.எம்.முகைதீன்

29 Oct 2009

லூலூ யூசுப்அலி - சில்லறை வணிக உலகின் முத்து



வளைகுடா நாடுகளில் வசிப்பவர்களின் சுவாசமாக விளங்கும் சங்கிலித் தொடர் சூப்பர் மார்க்கெட்தான் "லூலூ " இதன் வாசல் மிதிக்காதவர்கள் இந்த பிரதேசத்தில் எவருமே இருக்க முடியாது. எம். கே குழுமத்திற்கு சொந்தாமான இந்த நிறுவணத்தின் மிக குறுகிய கால அபார வளர்ச்சிக்கு வித்திட்டவர்தான் எம்.கே குழுமங்களின் மேலாண்மை நிர்வாகி 54 வயதான யூசுப் அலி, தென்னின்ந்தியாவின் , கேரள மாநிலத்தில், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமமான நட்டிகாலில் 1958 ஆம் ஆன்டு பிறந்த யூசுப் அலி தனது 15 ஆவது வயதில், 1973 ஆம் வருடம் ஒரு சூட்கேசும், கையில் கொஞம் தொகையுமாக மும்பையில் இருந்து கடல் மார்க்கமாக துபாய் துறைமுகம் வந்து இறங்கினார்.

முப்பது வருடங்களுக்குள் 15000 கோடி ருபாய்க்கு சொந்மான எம். கே தொழிழ் குழுமத்தின் சூத்திரதாரியான வரலாறு ஒரு நெடும் கதை, தன்னை துபாய் துறைமுகத்திலிருந்து அழைத்து செல்ல வந்த தனது பெரிய தந்தையான எம். கே அப்துல்லவுடன் 5 மணி நேர பயணத்திற்கு பின் அபுதாபி வந்து சேர்ந்த யூசிப் அலி, பின் அவருடன் இணனைந்து அவரின் சிறிய மளிகை கடையில் அவருக்கு உதவியாக சில காலம் பொருட்களை ஏற்றி, இறக்குவது, வினியோகம் செய்வது என வேலைகள் என இருந்தவர், பதனப்படுத்தப்ப்ட உணவுப் பொருட்களை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து அபுதாபி நகரம் மட்டுமல்லாமல் புற நகர் பகுதி, மேற்கு அபுதாபி அமீரகத்திலும் வினியோகம் செய்ய ஆரம்பித்து 25 ஆயிரம் பணியாளர்கள் பணி புரியும் மாபெரும் தொழில் பேரரசின் வளர்ச்சிக்கு வித்திட்டார்.

சில காலங்களில் இவரது தொழில் இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்தது, உணவு பொருட்களை கப்பல், நட்சத்திர விடுதிகள், கேட்டரிங் கம்பெனிகள் என பல்வேறு துறைகளுக்கு வினியோகம் செய்து, தனது மூலதனத்கை பல மடங்குகள் பெருக்க ஆரம்பித்தது. 1980 களில் அமீரகத்தின் சில்ல்றை வணிகத்தின் கணிசமான பங்கு இவரது நிறுவனத்தை சார்ந்தாக கருதப்பட்டது. தனது பெரிய தந்தையின் ஓய்விற்கு பிறகு இதன் நிர்வாகம் இவர் வசம் வரும்பொழுது, தனது கணவுகளின் கோட்டைகான ஆயத்த வேலைகளை தொலை தூர நம்பிக்கை பார்வையுடன் தொடங்கினார். இவரது இத்தகைய நம்பிக்கைக்கு காரணமாக இவர் சொல்வது மறைந்த தலைவர் சேக் சயித் பின் அல் நக்யான் அவர்களின் "எதிர்காலத்த நோக்கிய வீரப்பயனம்" என்ற கொள்கையை பின்பற்றியதுதான். 1990கலீள் வளைகுடா போர்க்காலங்கள் இவரது பொற்காலங்கள் என கொள்ளலாம், அசாதாரணமான காலகட்டத்தை சரியான காலமாக திட்டமிட்ட்டது மிகப் பெரும் விந்தை ஆம் இவரின் சூப்பர் மார்கட்களும்,டிபார்ட்மென்ட் ஸ்டோர்களும் இந்த காலத்தில்தான் தொடஙகப்பட்டது.

இறைவனின் அருளால் இதன் வளர்ச்சி உச்சானிக்கு போய் இதன் மகுடமாக 2000 ஆம் ஆண்டு லூலூ சூப்பர் மார்கட் முதன் முதலில் துபாய் அல்கோசில் தொடங்கப்பட்டது, துருக்கியின் ராம் ஸ்டோர் போன்ற அமைப்பில் உருவான இந்த லூலூ மீண்டும் அசுர வளர்ச்சி பெற்று 8 வருடங்களில் 75 கிளைகள் தொடங்கப்பட்டது, அமீரகம் மட்டும் அல்லாமல், கத்தார், பஹ்ரைன், சௌதி அரேபியா,ஏமன், எகிப்த்,குவைத் இந்தியா என இதன் சாம்ராஜ்யம் விரிந்து கொண்டேபோகிறது, போர், பொருளாதார சீரழிவு, சந்தை ஏற்ற இறக்கம் என எந்த விளைவுகளும் இவரின் கோட்டையை அசைத்தூபார்க்க முடியவில்லை, அதற்கு காரணமாக இவர் சொல்வது,இறைவணின் அருளும், எதிர் நீச்சல் போடும் குணமும், அடிப்படை திடதண்மையும்தான்.

கொச்சின் விமானத்தளத்தின் விரிவாக பணியில் இவரது பங்கு கணிசமானது, இந்திய பொருளாதாரதை நோக்கி திரும்பும் இவர் பார்வை ஒரு பொருளாதார மலர்ச்சிக்கு வித்தாக மாறலாம். இவரின் சேவையை பாராட்டி அபுதாபி சேம்பர் ஆப் காமர்ஸ் இவரை அதன் இயக்குனர்களில் ஒருவராக நியமித்து இருக்கிறது, ஒரு வெளி நாட்டு வாழ் இந்தியரை இவ்வாறு அங்கீகாரத்தது இதுவே முதல் முறை. எல்லைகள் தாணடும் இவரது தொழில் வளச்சி மற்றும் சமூக பணியை பாராட்டி இந்திய அரசு இவருக்கு "பதம்ஷ்ரி" விருதை வழங்கி இந்த ஆண்டு கௌரவித்து இருக்கிறது, விண்ணை முட்டும் இவர் வளர்ச்சிக்கு இன்னும் எத்தனை விருதுகள் காத்துக் கொண்டிருக்கிறதோ?

4 Aug 2008

கீழக்கரை சமூக பிரமுகர் எம்.கே.எஸ். ஷரீப் ஹாஜியார் மறைவு

இராமனாதபுரம் மாவட்டம், கீழக்கரையில், வள்ளல் சீதக்காதியினால் கட்டுமானம் செய்யப்பட்ட புகழ் மிகுந்த ஜும் ஆ பள்ளி அமைந்திருக்கும் நடுத்தெரு ஜமா அத்தின் முத்தவல்லியாக பத்து ஆண்டுகளாக சேவை செய்தவரும், கீழக்கரை அணைத்து ஜமா அத் கமிட்டியின் உப தலைவராக இருந்து சமூக நல்லிணக்கத்துக்காக பாடுபட்டவருமான எம்.கே.எஸ். ஷரீப் ஹாஜியார் அவர்கள் 03.08.2008, ஞாயிறு அன்று பிற்பகல் 2 மனி அளவில் காலமானார்கள்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். மறைந்த ஹாஜியார் அவர்கள் 1930 ஆம் ஆண்டு கீழக்கரையில் பிறந்து, இலங்கை தலை நகர் கொழும்புவில் 30 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தவர். இவர்களின் நல்லடக்கம் 04.08.2008 இன்று கீழக்கரை ஜும் ஆ பள்ளி மைய வாடியில் நடை பெறுகிறது.

11 Jun 2008

கீழக்கரை சமூக பிரமுகர் எம்.எம்.கே மறைவு

இராமனாதபுரம் மாவட்டம், கீழக்கரையை சேர்ந்த சமூக பிரமுகரும், கல்வி சேவகரும், இந்த பகுதியின் நலன்களுக்கு பெரிதும் உழைத்தவரான எம். எம். கே என்று அழைக்கப்பட்ட திரு முகம்மது இபுராகீம் அவர்கள் இன்று 11.06.2008 காலை 6 மணி அளவில் காலமானார்

31 Jan 2008

சமுதாய செம்மல் கீழக்கரை எஸ்.எம்.ஏ பஷீர் முகைதீன் - இரன்டாம் ஆண்டு நினைவஞ்சலி


தென் தமிழக கட்லோர மாவட்டமான இராமனாதபுரம் பகுதியில் எஸ்.எம்.ஏ என அறியப்பட்ட பஷீர் முகைதீன் அவர்கள் காலமாகி இரண்டு வருடங்கள் நிறைவு பெறும் நிலையில் அவர் சார்ந்த சமூகம் மற்றும் பகுதி மக்கள் அவரை நினைவு கூறும் முகமாக அவரை பற்றிய சிறு குறிப்புகள்:

பஷீர் முகைதீன் அவர்கள் தமிழக தென் பகுதி கடலோரப் புரதான பகுதியான கீழக்கரையில் 1945 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் நாள் பிறந்தார். தனது ஆரம்ப கால பள்ளிப் படிப்பினை இலங்கை தலை நகர் கொழும்புவிலும், பின் இந்தியாவில் இராமனாதபுரம் இராஜா உயர் நிலை பாடசாலையிலும்,தொடர்ந்து திருச்சி பிஷப் கேபர் பள்ளியிலும் தனது இள் நிலை அறிவியல் (இயற்பியல்) பட்டப்படிப்பினை புகழ் பெற்ற சென்னை கிருஷ்துவ கல்லூரியிலும் படித்தவர்.

பாரம்பரியமிக்க கீழக்கரை எஸ்.வி.எம். குடும்பத்தில் பிறந்த இவர் தனது இளமை முதல் கடல் வாழ் உயிரினங்களின் மீது அளவில்லாத ஈடுபாடு கொண்டு அதனை பற்றிய ஆராய்ச்சியினில் சிறப்பு நிபுனத்துவம் கொண்டிருந்தார். தங்களது முன்னோர்களின் தொழிலான முத்து சிலாபம் மற்றும் சங்கு குளித் தொழிலில் ஈடுபட்டு திறனுடன் சிறப்பாக நிர்வாகித்து வந்தார். எவ்வளவு அறியவகை கடல் வாழ் உயிரினத்தையும் பார்த்த மாத்திரத்தில் அடயாளம் கண்டு அதன் விபரங்களை சொல்வதில் அவருக்கு நிகர் அப்பகுதியில் எவரும் இல்லை என்பது தின்னம்.

இத்த்கைய தொழிலில் தொடர்புடைய ஐரோப்பிய மற்றும் கீழ்திசை நாடுகளை சார்ந்த வர்த்தகர்கள் இவருடன் கல்ந்துரையாட அவ்வப்பொழுது கீழக்கரைக்கு விஜயம் செய்வதை இப்பகுதி மக்கள் இன்றும் நிணவு கூறுவது இவரின் சிறப்புக்கு எடுத்துக்காட்டு.
சமுதாய பனிகளில் தீராததாகம் கொன்ட பஷீர் முகைதீன் அவர்கள் அனைத்து அரசியல் கட்சியுனுடனும், சமுதய மக்களினுடனும் நல்லிணக்கம் கொன்டிருத்தார். சமூக நல்லினக்கத்தை இவர் கீழக்கரையில் ஏற்படுத்துவதில் தனது இறுதி காலம் வரை பெறும் முயற்சியில் ஈடுபட்டது இன்றும் போற்றத்தகதாக கருதப்ப்டுகிறது.

"கிட்டங்கி"என அழைக்கப்படும் இவரது அலுவலகத்தில் சமூகத்தில் ஏற்படும் கடும் சிக்கலான விவகாரங்களுக்கு தனது எதார்த்தமான அணுகு முறையாலும் மற்றும் சட்டரீதியான அனவரும் ஏற்கக்கூடிய தீர்வை சொல்லுவதிலும் இவர் திறன் பெற்றிருந்தது இப் பகுதியினருக்கு மிகவும் உத்வியாக இருந்தது உண்மை. தெளிவாக விபரங்களை உணர்ந்து கொள்ளுவதும், விழிப்புடன் அதனை ஆராய்வதிலும்,சரியான முடிவெடுப்பதிலும், சாதக பாதகங்களை அறிந்திருத்தலிலும் சிறப்பு நிபுனத்துவம் கொன்ட ஒரு மேலான்மை தத்துவத்தின் மொத்த உருவம்தான் பஷீர் முகதீன் அவர்கள். தூய பழக்க வழக்கமும், எளிமையான வெண்ணிற ஆடை அனிவதும், நேர ஒழுங்கு முறை கடப்பிடித்தலும், அயராத உழைப்பும்,கோபமில்லாத்தன்மையும்,சாந்த குனமும், அதிர்வில்லா பேச்சும்,தண்ணடக்கமும்,முதிர்ந்த அறிவுணர்வும்,ஆழ்ந்த சிந்தனையும் இவரின் சிறப்பு குணங்களாக அறியப்பட்டது.
பதவி ஆசை சிறிதும் இன்றி தன் வாழ்க்கையில் பயனித்த இவர் பல் வேறு சமூக நிறுவணங்களில் முக்கிய நிர்வாகியாக இருந்து கடமை ஆற்றியது கீழக்கரை சமுதாய பிரமுகர்கள், மற்றும் அரசியல் பிரமுகர்களால் இன்றும் நினைவு கூறப்படுகிறது. 2000 ஆம் ஆன்டு நடைபெற்ற சீதக்கதி நினவு நாள் விழாவினை திறம் பட நடத்திவைத்த செயலின் முழு உள்செயல்லாக்க வேலையினை சீதக்காதி, மற்றும், சதக் அறக்கட்டளை நிர்வாகிகள் முழுதும் அறிவர்.

சதக்கத்துன் ஜாரியா நடு நிலைப்பள்ளியின் தாளாளராக 1975 முதல் தனது இறுதி காலம் வரை கிட்டட்தட்ட 30 ஆன்டுகாலம் திறம் பட நிருவகித்தார்கள். தனது பணி காலத்தில் மானவர்களின் நலனில் பெரிதும் கவனம் செலுத்தி செய்த சேவைகளயும், கீழக்கரை நகராட்சியின் செயல்பாடுகளில் தனிகவனம் செலுத்தி மக்க்ளின் அரனாக நின்றதையும் யாவரும் அறிவர்.

கீழக்கரை பைத்துல்மாலின் நிறுவன நிர்வாகிகளின் ஒருவரான இவர் அதன் உப தலைவராக தனது இறுதி காலம் வரை தொடர்ந்தார்.கீழக்கரை அணைத்து ஜமாத் கூட்ட்மைப்பின் பொருளாளராகவும்,மற்றும் இராம நாதபுரம் தமிழ் சங்கத்தின் முக்கிய பிரமுகராகவும் இவர் செய்த சேவைகள் காலத்தில் அழியாதது.இவரின் செய்த சேவைகள் சில எல்லைகள் கடந்தது, பிரமிக்கதக்கது.
2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏற்பட்ட சுகக்குறைவால் உடல் அவயங்களில் ஏற்பட்ட பாதிப்புகளினாலும் மருத்துவ பராமரிப்பில் இருந்த சமுதாய செம்மல் பஷீர் முகைதீன் அவர்கள் 2006, பிப்ரவரி மாதம் 2 ஆம் நாள், வியாழன் அன்று பகல் 11.35 மனியளவில் மதுரை அப்போலோ மருத்துவம்னையில் கால்மானார்கள். அண்ணாரின் உடல் பிப்ரவரி 3 ஆம் நாள் கீழக்கரை, நடுத்தெரு, ஜும்மாப்பள்ளி மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது

10 Mar 2007

செய்யது எம். சலாஹுதீன் - தொழில் முனைப்பாளர்களின் உத்வேகம்




செய்யது எம். சலஹுதீன், ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிக நகரான துபாயில் வசிக்கும் இந்தியர். இந்திய அரசின் வெளி நாடு வாழ் இந்தியர்கள் நலத்துறையின் சார்பில் ஆண்டுதோரும் நடத்தப்படும் பிரவாசி பாரதிய திவாஸ் என்ற விழாவின் 2007 ஆம் ஆண்டுக்கான நிகழ்ச்சியின் கடைசி நாளான கடந்த பிப்ரவரி மாதம் 9ஆம், நாள் புது டில்லியில், மேதகு இந்திய ஜனாதிபதி திரு ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களினால் சிறந்த இந்திய தொழில்ஜீவிக்கான விருது பெற்றவர்
துபாயை தலமையிடமாக கொண்ட ஈ.டி.ஏ அஸ்கான் மற்றும் ஈ.டி.ஏ. ஸ்டார் தொழில் குழுமங்களின் மேலான்மை நிர்வாகியான செய்யது.எம். சலாஹுதீன் அவர்களின் அயராத உழைப்பும், தீவிர தொழில் ஈடுபாடும், எதர்த்த நிர்வாக முடிவுகளும்,தொலை நோக்க பார்வை கொண்ட திட்டமிடுதலும், குறிப்பறிந்து அளவளாவும் தன்மையும், சமூகம்,பன்பாடு சார்ந்த தொழில்முறை பானி என பல் வேறு வகைப்பட்ட தனிதன்மையின் மொத்த உருவமாக திகழ்கிறார். கடந்த 37 வருடங்களாக அமீரகத்தில் வாழ்ந்து வரும் செய்யது எம். சலாஹுதீன் அவர்களின் மேலான்மைதிறனுக்கு சாட்சியாக 50 ஆயிரம் தொழிலாளர்கள் பனிபுரியும் ஆலமரமாக இன்று ஈ.டி.ஏ நிறுவனம் திகழ்கிறது. இத்தகைய பெரும் தொழில் சாம்ராஜ்யத்திற்கு வித்திட்ட வள்ளல் பி.எஸ். அப்துர்ரஹ்மான் அவர்களினால் தொழிலுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டதை இன்றும் நினவு கூறும் இவரின் அளப்பறிய பணி அமீரக அரசினால் பலமுறை அங்கீகரிக்கப்பட்டும், கௌரவிக்கப்பட்டும் வந்துள்ளது.
செய்யது எம். சலாஹுதீன் அவர்கள் தென் தமிழகத்தின் சேதுபதி சீமை என அறியப்பட்ட இரம நாதபுரம் மவட்டம் கீழக்கரையில் 1940 ஆம் அன்டுகளின் தொடக்கத்தில் பிறந்தவர், தனது பள்ளி படிப்பினை கீழக்கரையிலும்,கல்லூரி படிப்பினை சென்னையிலும் பயின்றவர், தனது இளமை காலத்தில் இலட்ச்சிய நோக்கம் கொன்டு இலங்கை, மற்றும் கிழக்காசிய நாடுகளுக்கு பயனம் மேற்கன்டவர். சமுதாய நலனில் ஆர்வம் கொணடு இவர் ஆற்றிய பனிகளும், கல்வி மற்றும் வளர்ச்சி பனியில் இவரின் அக்கரையுமே இத்தகைய பெரும் விருதால் இவர் கௌரவிக்கப்படுகிறார் என்பது உண்மை.


2 Feb 2007

சமுதாய செம்மல் பஷீர் முகைதீன் - நினைவுகள்

15-02-1945 - 02-02-2006

தென் தமிழக கட்லோர மாவட்டமான இராமனாதபுரம் பகுதியில் எஸ்.எம்.ஏ என அறியப்பட்ட பஷீர் முகைதீன் அவர்கள் காலமாகி ஓராண்டு நிறைவு பெறும் நிலையில் அவர் சார்ந்த சமூகம் மற்றும் பகுதி மக்கள் அவரை நினைவு கூறும் முகமாக அவரை பற்றிய சிறு குறிப்புகள்:


பஷீர் முகைதீன் அவர்கள் தமிழக தென் பகுதி கடலோரப் புரதான பகுதியான கீழக்கரையில் 1945 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் நாள் பிறந்தார். தனது ஆரம்ப கால பள்ளிப் படிப்பினை இலங்கை தலை நகர் கொழும்புவிலும், பின் இந்தியாவில் இராமனாதபுரம் இராஜா உயர் நிலை பாடசாலையிலும்,தொடர்ந்து திருச்சி பிஷப் கேபர் பள்ளியிலும் தனது இள் நிலை அறிவியல் (இயற்பியல்) பட்டப்படிப்பினை புகழ் பெற்ற சென்னை கிருஷ்துவ கல்லூரியிலும் படித்தவர்.


பாரம்பரியமிக்க கீழக்கரை எஸ்.வி.எம். குடும்பத்தில் பிறந்த இவர் தனதி இளமை முதல் கடல் வாழ் உயிரினங்களின் மீது அளவில்லாத ஈடுபாடு கொண்டு அதனை பற்றிய ஆராய்ச்சியினில் சிறப்பு நிபுனத்துவம் கொண்டிருந்தார் என்றால் மிகயாகாது தங்களது முன்னோர்களின் தொழிலான முத்து சிலாபம் மற்றும் சங்குகுளித் தொழிலில் ஈடுபட்டு திறனுடன் சிறப்பாக நிர்வாகித்து வந்தார். எவ்வளவு அறியவகை கடல் வாழ் உயிரினத்தையும் பார்த்த மாத்திரத்தில் அடயாளம் கண்டு அதன் விபரங்களை சொல்வதில் அவருக்கு நிகர் அப்பகுதியில் எவரும் இல்லை என்பது தின்னம்.


இத்த்கைய தொழிலில் தொடர்புடைய ஐரோப்பிய மற்றும் கீழ்திசை நாடுகளை சார்ந்த வர்த்தகர்கள் இவருடன் கல்ந்துரையாட அவ்வப்பொழுது கீழக்கரைக்கு விஜயம் செய்வதை இப்பகுதி மக்கள் இன்றும் நிணவு கூறுவது இவரின் சிறப்புக்கு எடுத்துக்காட்டு.சமுதாய பனிகளில் தீராததாகம் கொன்ட பஷீர் முகைதீன் அவர்கள் அனைத்து அரசியல் கட்சியுனுடனும், சமுதய மக்களினுடனும் நல்லிணக்கம் கொன்டிருத்தார். சமூக நல்லினக்கத்தை இவர் கீழக்கரையில் ஏற்படுத்துவதில் தனது இறுதி காலம் வரை பெறும் முயற்சியில் ஈடுபட்டது இன்றும் போற்றத்தகதாக கருதப்ப்டுகிறது.


"கிட்டங்கி"என அழைக்கப்படும் இவரது அலுவலகத்தில் சமூகத்தில் ஏற்படும் கடும் சிக்கலான விவகாரங்களுக்கு தனடு எதார்த்தமான அணுகு முறையாலும் மற்றும் சட்டரீதியான அனவரும் ஏற்கக்கூடிய தீர்வை சொல்லுவதிலும் இவர் திறன் பெற்றிருந்தது இப் பகுதியினருக்கு மிகவும் உத்வியாக இருந்தது உண்மை. தெளிவாக விபரங்களை உணர்ந்து கொள்ளுவதும், விழிப்புடன் அதனை ஆராய்வதிலும்,சரியான முடிவெடுப்பதிலும், சாதக பாதகங்களை அறிந்திருத்தலிலும் சிறப்பு நிபுனத்துவம் கொன்ட ஒரு மேலான்மை தத்துவத்தின் மொத்த உருவம்தான் பஷீர் முகதீன் அவர்கள். தூய பழக்க வழக்கமும், எளிமையான வெண்ணிற ஆடை அனிவதும், நேர ஒழுங்கு முறை கடப்பிடித்தலும், அயராத உழைப்பும்,கோபமில்லாத்தன்மையும்,சாந்த குனமும்,அதிர்வில்லா பேச்சும்,தண்ணடக்கமும்,முதிர்ந்த அறிவுணர்வும்,ஆழ்ந்த சிந்தனையும் இவரின் சிறப்பு குணங்களாக அறியப்பட்டது.


பதவி ஆசை சிறிதும் இன்றி தன் வாழ்க்கையில் பயனித்த இவர் பல் வேறு சமூக நிறுவணங்களில் முக்கிய நிர்வாகியாக இருந்து கடமை ஆற்றியது கீழக்கரை சமுதாய பிரமுகர்கள், மற்றும் அரசியல் பிரமுகர்களால் இன்றும் நினைவு கூறப்படுகிறது. 2000 ஆம் ஆன்டு நடைபெற்ற சீதக்கதி நினவு நாள் விழாவினை திறம் பட நடத்திவைத்த செயலின் முழு உள்செயல்லாக்க வேலையினை சீதக்காதி, மற்றும், சதக் அறக்கட்டளை நிர்வாகிகள் முழுதும் அறிவர்.சதக்கத்துன் ஜாரியா நடு நிலைப்பள்ளியின் தாளாளராக 1975 முதல் தனடு இறுதிகாலம் வரை கிட்டட்தட்ட 30 ஆன்டுகாலம் திறம் பட நிருவகித்தார்கள். தனது பணி காலத்தில் மானவர்களின் நலனில் பெரிதும் கவணம் செலுத்தி செய்த சேவகளுக்கு இன்றைய கீழக்கரை சேர்மன் அவர்களே சாட்சி.மேலும் கீழக்கரை நகராட்சியின் செயல்பாடுகளில் தனிகவனம் செலுத்தி மக்க்ளின் அரனாக நின்றத யாவரும் அறிவர்.

கீழக்கரை பைத்துல்மாலின் நிறுவன நிர்வாகிகளின் ஒருவரான இவர் அதன் உப தலைவராக தனது இறுதி காலம் வரை தொடர்ந்தார்.கீழக்கரை அணைத்து ஜமாத் கூட்ட்மைப்பின் பொருளாளராகவும்,மற்றும் இராம நாதபுரம் தமிழ் சங்கத்தின் முக்கிய பிரமுகராகவும் இவர் செய்த சேவைகள் காலத்தில் அழியாதது.இவரின் செய்த சேவைகள் சில எல்லைகள் கடந்தது, பிரமிக்கதக்கது.


2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏற்பட்ட சுகக்குறைவால் உடல் அவயங்களில் ஏற்பட்ட பாதிப்புகளினாலும் மருத்துவ பராமரிப்பில் இருந்த சமுதாய செம்மல் பஷீர் முகைதீன் அவர்கள் 2006, பிப்ரவரி மாதம் 2 ஆம் நாள், வியாழன் அன்று பகல் 11.35 மனியளவில் மதுரை அப்போலோ மருத்துவம்னையில் கால்மானார்கள். அண்ணாரின் உடல் பிப்ரவரி 3 ஆம் நாள் கீழக்கரை, நடுத்தெரு, ஜும்மாப்பள்ளி மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது