23 Oct 2009

மர்வான் அல் ஷகப் - அதி வேக அரேபிய குதிரை


பழங்காலம் தொட்டு குதிரைகள் போக்குவரத்து, செய்தி தொடர்பு மற்றும் போர்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது, உலகின் பெருவாரியான போர்களில் பங்கெடுத்த குதிரைகள், அரசர்களின் வாழ்வில் வாள் போன்று குதிரையும் முக்கிய அங்கமாக திகழ்ந்தது.அக்காத்தில் அரசனுக்கும் பிரபுக்களுக்கும் இடையில் குதிரை பந்தயம் ஒரு விருப்பமான பொழுது போக்காக இருந்தது. அது போல் அரேபியர்களுக்கு பொதுவாக ஒட்டகம், மற்றும் குதிரை என்றால் அதீத பிரியம். வளைகுடா நாடான கத்தாரின் அரச குடுமபத்திற்கு சொந்தமான் ஒரு மிக உயர்தர குதிரைதான் மார்வான் அல் ஷகப். எட்டே வயது நிரம்பிய இக்குதிரை தொடர்ந்து மூன்றாம் முறையாக உலக அரேபிய சாம்பியன் பட்டத்தை வென்று அரேபியக் குதிரைகளின் வரலாற்றில் நீங்கா இடம் பெற்றுவிட்டது. அத்துடன் சீனியர் ஸ்டல்லியன் என்ற விருதையும் பாரிசில் நடந்த போட்டியில் பெற்றது அரபுலக குதிரைப்பிரியர்களை மகிழ்ச்சிக்கு ஆட்படுத்தியதாக காத்தார் அல் சகப் குதிரை க்ளப்பில் பனிபுரியும் குதிரை பந்தய ஆய்வாளர் தமீம் தெரிவித்தார். இதன் விலை 10 மில்லியன் அமெரிக்க டாலர்களாக கணக்கிடப்பட்டாலும் (60 கோடி இந்திய ரூபாய்), இதன் அதிவேக ஆற்றலுக்கு விலையே இல்லை என்பதே உணமை.

4 comments:

  1. ஒரு குதிரையின் விலை ஆறு கோடி ரூபாய்!!அடேங்கப்பா!தெரியாத தகவல்.தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  2. ஆறு கோடி டாலர் என்பது சரியா?கணக்குப்பார்த்து சரிபடுத்துங்கள்

    ReplyDelete
  3. கணக்கில் விடுபட்ட பூஜ்யம் சேர்க்கப்பட்டுவிட்டது, தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. குதிரையின் விலை 60 கோடி ரூபாய், ஆக உங்களுக்கு மீண்டும் ஒரு ஆச்சரியம்!!!!

    ReplyDelete
  4. ஓ... அரபிக்குதிரை என்பது இதுதானா? ;)

    ReplyDelete