23 Aug 2010

வட்டார வைத்தியர் -மறைந்த டாக்டர் காசிராஜன்

கீழக்கரை மக்களுக்கும் வைத்தியத்துக்கும் உள்ள தொடர்பு பிரிக்க முடியாத விஷயம் என யாவரும் அறிந்ததே.

" உலகில் உள்ள எல்லா நோய்களுக்கும் ஒரே மருந்து பலம் மட்டுமே. எப்போதெல்லாம் கொடுமைகளுக்கு உட்படுகிறாமோ, அப்போதெல்லாம் மனபலம் நமக்கு அதிகம் தேவைப்படும். என விவேகானந்தரின் கூற்றை அறிந்தோ, அறியாமலோ கீழக்கரை மக்கள் பொருந்தி கொன்டார்கள். மலேரியா, டபுள் மலேரியா!, சிக்கன் குனியா, என உள்ளூரில் வசிக்கும் மக்களை மட்டுமின்றி, துபாயில் இருந்து லீவுக்கு ஊருக்கு போகும் சபராளிகளையும் ஒரு கை பார்க்காமல் ஓய்வதில்லை. நகராட்சியும், வெல்பேர் சங்கமும், உள்ளூர் வைத்த்தியர்களும் போராடி, போராடி அலுத்து போய், இந்த கொடிய நோய்கள் ரெம்ப சாதாரணமான விஷயாமாகி விட்டது.

1940 களில் இருந்து 1980கள் வரை, காலராவும், பெரியமமை நோயும் மாறி மாறி வந்து நூற்றுக்கணக்கான மக்களை காவு கொண்டது, எனது பள்ளி பருவத்தில் காலராவுக்கு ஊசி போட மருத்துவர்களும், நர்ஸ்களும் பள்ளிக்கு வரும் பொழுது பள்ளியே பயந்து ஒடுங்கும், ஊசி போட்ட பின் இரவில் சுடு தன்னிவைத்து ஒத்து கொடுத்தால்தான் வலி தீரும்.

இது போன்ற வலிகளே காலரா நோய்க்கு எமனாகி காலராவை இல்லாமல் ஆக்கியது. அப்படியும் யாராவதும் ஒரு குழந்தை காலாராவில் பீடிக்கப்பட்டால் இராமனாதபுரம் குழந்தை டாகடர் காசிராஜனை தவிர வேறு யாராலும்காப்பாற்ற முடியாது,  ஆபத்பாந்தாவனான இவர் கொஞம் முன் கோபியானலும் இவரால் உயிர் பிழைத்த மழலைகள் ஏராளம், ஒவ்வொரு முறையும் இராம நாதபுரம் கேனிக்கரை செல்லும் பொழுதும் மறைந்த டாக்டர் காசிராஜன் நினைவுகளில் என் மனம் சில கனங்கள் மூழ்கும்.

3 comments:

  1. டாக்டர் காசி ராச்ஜனை நினைவு கூர்ந்தது என்னை பழைய காலத்திற்கு இழுத்துச்சென்று விட்டது.அவர் முன் கோபி என்று சாதாரணமாக சொல்லி விட்டீர்கள்.அவர் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் நெருப்புத்துண்டங்கள்.இருப்பினும் கூட்டம் ஏனைய குழந்தை மருத்துவர்களை விட களைக்கட்டும் .ஏனென்றால் அந்தளவு கைராசி மிக்கவர்.(என் அப்பாவுக்கு பிரண்ட் என்பதால் அவர் எங்களை மட்டும் நெருப்புத்துண்டங்களால் சாடுவதில்லை)அவரின் மரைவு முகவை மாவட்டத்தினருக்கு பேரிழப்புத்தான்.

    ReplyDelete
  2. மறு மொழிக்கும் நன்றி, உன்மைதான், அவரை பற்றி நான் அறிந்தத தகவல்களை விட தங்கள் அதிகம் அறிந்து இருப்பீர்கள், எனது சிறு வயதில் எனக்கு காசிராஜனை ஒரு ஹீரோ போலவே அறிமுகப்படுத்த பட்டிருக்கிறேன், இவரின் அளப்பறிய சேவை இந்த பகுதி மக்களால் நினைவு கூறப்பட வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம்.

    ReplyDelete
  3. இன்னமும்கூட டாக்டர் காசிராஜனின் இழப்பு நம் மாவட்ட மக்களுக்கு உண்மையில் பேரிழப்பே, அவர் முன்கோபிதான், ஆனாலும் அவருடைய சேவைகள் உண்மையில் அளப்பரியது. அவரைப்பற்றி இன்னும் நிறைய எழுதியிருக்கலாம்!

    ReplyDelete