18 Oct 2009

உலக சித்தாந்தங்களில் மாட்டிக் கொன்ட இரு பசு மாடுகள் !!



உலக சித்தாந்தங்களைப் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்பட்டுக் கொன்டிருந்தாலும், கம்யூனிசம்னா என்ன? சோசியலிசம்னா என்னனு ஒரே குழப்பமாகத்தான் இருக்கு...... அதற்காகத்தான் இரு பசுமாட்டு பொருளாதார தத்துவம் ஒன்றை ஒரு மேதை உருவாக்கியிருக்காரு... அதுதான் இது.

சோசியலிசம்: உங்களிடம் இரு பசுமாடுகள் இருந்தால் , ஓன்ன மட்டும் நீங்க வச்சிக்கிட்டு, அடுத்ததை சமர்த்தா பக்கத்து வீட்டு அலமேலு மாமிக்கு கொடுத்துடனும்.

கம்னியுசம்:
உங்களிடம் இரு பசுமாடுகள் இருந்தால், இரண்டயுமே கவர்ன்மென்ட் எடுத்துக்கிட்டு, மறக்காமல் ஒரு நாளைக்கு அரை லிட்டர் பால் இலவசமா தரும்...

பாசிசம்:உங்களிடம் இரு பசுமாடுகள் இருந்தால் இரண்டயுமே கவர்ன்மென்ட் எடுத்துக்கிட்டு, நியாயமன! விலையில் பால் விற்பாங்க.... காசு கொடுத்து வாங்கிக்கலாம்...

சர்வாதிகாரம் :உங்களிடம் இரு பசுமாடுகள் இருந்தால், இரண்டயுமே கவர்ன்மென்ட் எடுத்துக்கிட்டு, உங்களை சுட்டு கொன்னுடும்........

முதலாளித்துவம்:உங்களிடம் இரு பசுமாடுகள் இருந்தால், ஒன்னை வித்துட்டு ஒரு காளை மாடு வாங்கியே ஆகணும்.

ஜன நாயகம்:
உங்களிடம் இரு பசுமாடுகள் இருந்தால், எக்கச்சக்க வரிய போட்டு இரன்டையும் ஒரே ஒரு மாடு வச்சிருக்கிற ஒரு வெளி நாட்டுக்கு விக்க தூண்டும், முக்கியமான விஷயம் ... அந்த வெளி நாடு வச்சிருக்கிற ஒரு மாடும் உங்க நாடு கொடுத்த அன்பளிப்பாகத்தான் இருக்கும்...

மேலே பார்த்தது எல்லாம் பொதுவான சித்தாந்தங்க்ள் மட்டும்தான்,இது போல் பண்ணாட்டு கம்பெனிகள் தங்கள் நாட்டிற்கு ஏற்றார் போல தனி தனி கொள்கைகள் வச்சிருப்பாங்க..... பொதுவான பண்ணாட்டு கம்பெனிகளின் தத்துவம் என்ன தெரியுமா.........உங்களிடம் இரு பசுமாடுகள் இருந்தால், ஓன்னை வித்துட்டு, அடுத்ததை கட்டாயப்படுத்தி நாலு மாட்டிடம் கறக்க வேண்டிய பாலை கறக்க வேண்டியது, அப்புறம் அது செத்துப் போனதும் , ஏன் செத்ததுனு பெரிய ஆய்வு நடத்தி ரிபோர்ட் சமர்ப்பிக்கனும்........ அதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

3 comments:

  1. ஆஹா..அசத்துகின்றீர்கள் சோனகரே!அந்த மேதை பெயரயும் போட்டு இருக்கலாமே?

    ReplyDelete
  2. தங்களின் பின்னூட்டதிற்கு மிகவும் நன்றி. அந்த மேதையயை விரைவில் தேடி கௌரவிக்கவிருக்கிறோம்......

    ReplyDelete
  3. முதலாளித்துவம்:உங்களிடம் இரு பசுமாடுகள் இருந்தால், ஒன்னை வித்துட்டு ஒரு காளை மாடு வாங்கியே ஆகணும்.//

    சிரிப்ப அடக்க முடியல.

    குடுகுடுப்பை.

    ReplyDelete