2 Feb 2007

சமுதாய செம்மல் பஷீர் முகைதீன் - நினைவுகள்

15-02-1945 - 02-02-2006

தென் தமிழக கட்லோர மாவட்டமான இராமனாதபுரம் பகுதியில் எஸ்.எம்.ஏ என அறியப்பட்ட பஷீர் முகைதீன் அவர்கள் காலமாகி ஓராண்டு நிறைவு பெறும் நிலையில் அவர் சார்ந்த சமூகம் மற்றும் பகுதி மக்கள் அவரை நினைவு கூறும் முகமாக அவரை பற்றிய சிறு குறிப்புகள்:


பஷீர் முகைதீன் அவர்கள் தமிழக தென் பகுதி கடலோரப் புரதான பகுதியான கீழக்கரையில் 1945 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் நாள் பிறந்தார். தனது ஆரம்ப கால பள்ளிப் படிப்பினை இலங்கை தலை நகர் கொழும்புவிலும், பின் இந்தியாவில் இராமனாதபுரம் இராஜா உயர் நிலை பாடசாலையிலும்,தொடர்ந்து திருச்சி பிஷப் கேபர் பள்ளியிலும் தனது இள் நிலை அறிவியல் (இயற்பியல்) பட்டப்படிப்பினை புகழ் பெற்ற சென்னை கிருஷ்துவ கல்லூரியிலும் படித்தவர்.


பாரம்பரியமிக்க கீழக்கரை எஸ்.வி.எம். குடும்பத்தில் பிறந்த இவர் தனதி இளமை முதல் கடல் வாழ் உயிரினங்களின் மீது அளவில்லாத ஈடுபாடு கொண்டு அதனை பற்றிய ஆராய்ச்சியினில் சிறப்பு நிபுனத்துவம் கொண்டிருந்தார் என்றால் மிகயாகாது தங்களது முன்னோர்களின் தொழிலான முத்து சிலாபம் மற்றும் சங்குகுளித் தொழிலில் ஈடுபட்டு திறனுடன் சிறப்பாக நிர்வாகித்து வந்தார். எவ்வளவு அறியவகை கடல் வாழ் உயிரினத்தையும் பார்த்த மாத்திரத்தில் அடயாளம் கண்டு அதன் விபரங்களை சொல்வதில் அவருக்கு நிகர் அப்பகுதியில் எவரும் இல்லை என்பது தின்னம்.


இத்த்கைய தொழிலில் தொடர்புடைய ஐரோப்பிய மற்றும் கீழ்திசை நாடுகளை சார்ந்த வர்த்தகர்கள் இவருடன் கல்ந்துரையாட அவ்வப்பொழுது கீழக்கரைக்கு விஜயம் செய்வதை இப்பகுதி மக்கள் இன்றும் நிணவு கூறுவது இவரின் சிறப்புக்கு எடுத்துக்காட்டு.சமுதாய பனிகளில் தீராததாகம் கொன்ட பஷீர் முகைதீன் அவர்கள் அனைத்து அரசியல் கட்சியுனுடனும், சமுதய மக்களினுடனும் நல்லிணக்கம் கொன்டிருத்தார். சமூக நல்லினக்கத்தை இவர் கீழக்கரையில் ஏற்படுத்துவதில் தனது இறுதி காலம் வரை பெறும் முயற்சியில் ஈடுபட்டது இன்றும் போற்றத்தகதாக கருதப்ப்டுகிறது.


"கிட்டங்கி"என அழைக்கப்படும் இவரது அலுவலகத்தில் சமூகத்தில் ஏற்படும் கடும் சிக்கலான விவகாரங்களுக்கு தனடு எதார்த்தமான அணுகு முறையாலும் மற்றும் சட்டரீதியான அனவரும் ஏற்கக்கூடிய தீர்வை சொல்லுவதிலும் இவர் திறன் பெற்றிருந்தது இப் பகுதியினருக்கு மிகவும் உத்வியாக இருந்தது உண்மை. தெளிவாக விபரங்களை உணர்ந்து கொள்ளுவதும், விழிப்புடன் அதனை ஆராய்வதிலும்,சரியான முடிவெடுப்பதிலும், சாதக பாதகங்களை அறிந்திருத்தலிலும் சிறப்பு நிபுனத்துவம் கொன்ட ஒரு மேலான்மை தத்துவத்தின் மொத்த உருவம்தான் பஷீர் முகதீன் அவர்கள். தூய பழக்க வழக்கமும், எளிமையான வெண்ணிற ஆடை அனிவதும், நேர ஒழுங்கு முறை கடப்பிடித்தலும், அயராத உழைப்பும்,கோபமில்லாத்தன்மையும்,சாந்த குனமும்,அதிர்வில்லா பேச்சும்,தண்ணடக்கமும்,முதிர்ந்த அறிவுணர்வும்,ஆழ்ந்த சிந்தனையும் இவரின் சிறப்பு குணங்களாக அறியப்பட்டது.


பதவி ஆசை சிறிதும் இன்றி தன் வாழ்க்கையில் பயனித்த இவர் பல் வேறு சமூக நிறுவணங்களில் முக்கிய நிர்வாகியாக இருந்து கடமை ஆற்றியது கீழக்கரை சமுதாய பிரமுகர்கள், மற்றும் அரசியல் பிரமுகர்களால் இன்றும் நினைவு கூறப்படுகிறது. 2000 ஆம் ஆன்டு நடைபெற்ற சீதக்கதி நினவு நாள் விழாவினை திறம் பட நடத்திவைத்த செயலின் முழு உள்செயல்லாக்க வேலையினை சீதக்காதி, மற்றும், சதக் அறக்கட்டளை நிர்வாகிகள் முழுதும் அறிவர்.சதக்கத்துன் ஜாரியா நடு நிலைப்பள்ளியின் தாளாளராக 1975 முதல் தனடு இறுதிகாலம் வரை கிட்டட்தட்ட 30 ஆன்டுகாலம் திறம் பட நிருவகித்தார்கள். தனது பணி காலத்தில் மானவர்களின் நலனில் பெரிதும் கவணம் செலுத்தி செய்த சேவகளுக்கு இன்றைய கீழக்கரை சேர்மன் அவர்களே சாட்சி.மேலும் கீழக்கரை நகராட்சியின் செயல்பாடுகளில் தனிகவனம் செலுத்தி மக்க்ளின் அரனாக நின்றத யாவரும் அறிவர்.

கீழக்கரை பைத்துல்மாலின் நிறுவன நிர்வாகிகளின் ஒருவரான இவர் அதன் உப தலைவராக தனது இறுதி காலம் வரை தொடர்ந்தார்.கீழக்கரை அணைத்து ஜமாத் கூட்ட்மைப்பின் பொருளாளராகவும்,மற்றும் இராம நாதபுரம் தமிழ் சங்கத்தின் முக்கிய பிரமுகராகவும் இவர் செய்த சேவைகள் காலத்தில் அழியாதது.இவரின் செய்த சேவைகள் சில எல்லைகள் கடந்தது, பிரமிக்கதக்கது.


2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏற்பட்ட சுகக்குறைவால் உடல் அவயங்களில் ஏற்பட்ட பாதிப்புகளினாலும் மருத்துவ பராமரிப்பில் இருந்த சமுதாய செம்மல் பஷீர் முகைதீன் அவர்கள் 2006, பிப்ரவரி மாதம் 2 ஆம் நாள், வியாழன் அன்று பகல் 11.35 மனியளவில் மதுரை அப்போலோ மருத்துவம்னையில் கால்மானார்கள். அண்ணாரின் உடல் பிப்ரவரி 3 ஆம் நாள் கீழக்கரை, நடுத்தெரு, ஜும்மாப்பள்ளி மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது

2 comments:

  1. அன்புடன்!
    சோனகன் எனும் சொல் என்னை ஈர்த்தது. இச்சொல் ஈழத்தில் பரவலாகப் பாவனையில் இருந்தும்; பின் இதற்குப் பதிலாக முஸ்லீம் எனும் சொல்;பழக்கத்தில் வந்து விட்டது.இப்போது "அவர் ஒரு சோனகர்" என்று குறிப்பிட்டுக் கூற கூச்சப்படவோ,அச்சப்படவோ கூடிய சொல்லாகிவிட்டது.ஆனால் என் இளவயதில் இச்சொல்லைப் பாவித்துள்ளேன்.நீங்கள் பாவிப்பது ஆச்சரியத்தைத் தந்தது.
    நிற்க; திரு.முகைதீன் அவர்களைப் பற்றிய செய்தி சுவையானது. இலைமறைகாயாக எத்தனை திறமைசாலிகள் மறைந்து விட்டார்கள்.
    முத்து சிலாபம்; எனும் சொல் ;இதன் கருத்து முத்துத் தேடுதலா??;ஈழத்தில் சிலாபம் எனும் நகர் உண்டு .தெரியுமா?? பாரம்பரியம் மிக்க இஸ்லாமியர் வாழும் நகரம்;முத்துக்குப் பெயர்போன நகரம். மெள்ள மெள்ள சிங்கள மயமாக்கப் படுகிறது.
    ஈழத்தில் "கிட்டங்கி" எனும் சொல் ;அன்றைய துறைமுகங்களருகில் பொருள்களைச் சேர்த்துப் பாதுகாக்கும் இடங்களே!; வழக் கொழிந்து போய்விட்டது.
    மொத்தத்தில் என் காதில் விழுந்த பல சொற்களை தங்கள் பதிவில் படித்தேன்.
    குறையாக நினைக்கக் கூடாது; சற்று எழுத்துப் பிழைகள் உண்டு. பார்த்துக் கொள்ளவும்.
    யோகன் பாரிஸ்

    ReplyDelete
  2. ஜோகன் பாரிஸ் வரவுக்கு நன்றி,
    சோனகன் என்ற சொல் ஈழத்தில் பாவனையில் இருந்திருப்பது உறுதி. மாபார் என அழைக்கப்பட்ட தமிழக கடலோரங்களுக்கு ( நாகப்பட்டினம் முதல் குளைச்சல் வரை) எதிர் கடல்புரமான ஈழத்திலும் சோனகர்கள் வாழ்ந்து சிறந்தது வரலாறு. இவர்கள் முஸ்லீம்கள் என்பதும் ஓரளவு உண்மை, எப்படியெனில், இலக்கியத்தில் யவனர்களாக அறிமுகப்படுத்தப்பட்ட இஸ்லாமிய அரபிகள் வழக்கில் சோனகர்களாகிய வரலாறும் உண்டு. முத்து சிலாபம் என்பது முத்து குளிப்பு என்பதுதான். தாங்கள் கூறிய சிலாபம் என்ற ஊர் பாண்டியர்களின் ஆட்சி காலத்தில் அரபிகளது வாணிப மையமாக, முத்துகுளித்துறையாக திகழ்ந்த ஸிரந்தீப் என்ற துறைமுக நகராக இருக்கலாம். தற்பொழுது அது சிங்கள மயமாக்கப்படுவது வருத்தம் தரதக்கது. தாங்கள் சொல்வது போல் கிட்டங்கி என்பது பண்டகசாலையை குறிப்பது.
    எனது பிழையான தமிழுக்கு மண்ணிக்கவும்,
    அன்புடன்
    சோனகன்

    ReplyDelete